



நேற்று மாலை (23/12/2012) சேலத்தில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் – லேடிஸ் கிளப்பில், ஆன்டிராயிட் பற்றி சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடம் உரையாற்றினேன். பெண் மருத்துவர்களும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் அதில் பங்குபெற்றனர். “Whatz App – The Power Of Android” என்ற தலைப்பில் ஸ்மார்ட்போன் பற்றியும், ஆன்டிராயிட் போன்களின் உபயோகங்கள் பற்றியும், அதில் தரவிறக்கி பயன்படுத்த வேண்டிய பல முக்கிய மென்பொருள்களையும் பற்றியும் எளியவகையில் புதியர்களுக்கு புரியும்படியும், ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் ஒரு பவர் பாய்ன்ட் பிரசன்டேசன் மூலம் விளக்கினேன்.
பங்குகொண்ட அனைவரும் மிகவும் உபயோகமாக இருந்ததாய் கருத்து தெரிவித்தனர். அதில் மிகுந்த ஆர்வமாய் ஆரம்பம் முதல் என்னிடம் கேள்விகள் கேட்ட ஒரு பெண் மருத்துவருக்கு (மன்னிக்கவும், பெயர் ஞாபகம் இல்லை) 8GB மெமரி கார்ட் பரிசளித்தேன். எனக்கும் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள துள்சி ரீடைல்ஸ் வவுச்சர் பரிசாக கொடுத்தார்கள். என்ன வாங்குவது என்று தெரியவில்லை, அம்மாவுடன் வவுச்சரையும், என்னுடைய கிரெடிட் கார்டையும் கொடுத்து ஏதேனும் வாங்கி வர அனுப்பவேண்டும்.
அந்த பவர் பாய்ன்ட் பிரசன்டேசன் கீழே.

விகடனுக்காக பிரத்தியேகமாக நான் எழுதிய கட்டுரை இந்த வாரம் “என் விகடனில்” வெளியாகியுள்ளது. சில வாரங்களுக்கு தொடர்ந்து அதில் கட்டுரை எழுதக்கேட்டு இருந்தார்கள். என்னுடய தாய்லாந்து பயணத்தை ஐந்து வாரங்கள் எழுதுவதாக உத்தேசித்து தொடரை ஆரம்பித்தேன். முன்னர் அச்சில் வந்துக்கொண்டு, பிறகு இணையத்தில் மட்டும் காணக்கிடைத்த “என் விகடன்”, எதிர்பாராவிதமாக இந்த வாரத்தில் இருந்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
முதல் பாகம் கட்டுரை முடித்து அனுப்பப்பட்டு இருந்த சூழ்நிலையில் அதை அவசர அவசரமாக முடிவுருமாறு மீண்டும் திருத்தி அனுப்பினேன். அதாவது கட்டுரையில் தாய்லாந்து பயணத்திற்குள் நுழைவதற்குள்ளாகவே அதை முடிக்க வேண்டியதாயிற்று. பயணத்தை பற்றிய எதிர்பார்போடு முடிக்கப்பட்ட அந்த கட்டுரை முற்றுபெறுமாறு மாற்றியதில் அந்த கட்டுரை ஆசிரியனாய் எனக்கு திருப்தி இல்லை. அடுத்த வாரம் முதல் அந்த கட்டுரையை என்னுடைய இந்த இணையதளத்தில் தொடருவதாக உள்ளேன். “என் விகடனில்” வந்த என் கட்டுரையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.
http://en.vikatan.com/article.php?aid=26671&sid=789&mid=32
இரு மாதங்களுக்கு முன்னர் என்னுடய வலைப்பூவும் அதில் எழுதிய கட்டுரையும் விகடனில் வந்த போது நான் எழுதிய அந்த வரிகளை இப்போது நினைவுக்கு வந்து போகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் என் விகடன் அட்டை படத்தில் என் புகைப்படத்துடன் என்னை பற்றி கட்டுரை வந்த போது இல்லாத ஒரு சிலிர்ப்பு இப்போது என் எழுத்தை விகடனில் காணும்போது கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் “ஆனந்த விகடனிலும்”, “ஜூனியர் விகடனிலும்” அந்த கட்டுரைக்கு வாசகர்களை கவர அவர்கள் கொடுத்த விளம்பரம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. நிச்சயம் இதோடு முடியபோவதில்லை விகடனுக்கும் எனக்குமான பந்தம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்த வாரம் (03/10/2012) “என் விகடன்” கோவை பதிப்பில், வலையோசை பகுதியில் என்னுடைய இந்த “சுவடுகள்” வலைப்பூவில் இருந்து இரண்டு கட்டுரை வெளியாகி உள்ளது. ஒன்று “வழக்கு எண்” திரைப்படத்தை பார்த்த போது அழிந்து வரும் கூத்துக்கலையை பற்றி எனக்குள் எழுந்த எண்ணங்களின் பதிவு. மற்றொன்று என்னுடய கல்லூரி காலங்களில் இயக்குனர் செல்வராகவனின் திரைப்படங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள், அதனூடே உருவான என் சினிமா கனவு, வலிகள், என் லட்சியப்பாதையை மாற்றிய சில நிதர்சனங்கள் உள்ளடக்கிய என் கடந்த கால வாழ்க்கை அனுபவங்கள்.
இதை எழுதும்போது என் வாழ்கையை யார் படிப்பார்கள் என்று தயக்கத்தோடு தான் முதலில் எழுதினேன். ஆனால் நடந்ததோ வேறு. அதை படித்துவிட்டு சில முக்கிய சினிமா பிரமுகர்களிடம், எழுத்தாளர்களிடம் இருந்து வந்த கருத்துக்கள் என்னை எழுத்துப்பயணத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு உத்வேகப்படுத்தியது. தங்கள் வாழ்க்கையே தாங்கள் திரும்பிப்பார்த்ததாக அதை படித்த பலர் கூறக்கேட்டபோது அந்த கட்டுரையை எழுத நான் எடுத்த சிரத்தை காணாமல் போனது. ஊக்கப்படுத்திய பல கருத்துக்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசிகள்… அனைத்திற்கும் மேலாக ஒரு நாள் அதை படித்துவிட்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று தொடங்கிய ஒரு மின்னஞ்சல் செல்வராகவனிடம் இருந்து வந்ததுதான்.
இப்போது அந்த பதிவு விகடனில். மிகவும் நீளமான அந்த பதிவை அதன் சாரம் குறையாமல் செதுக்கிய விகடனிற்கு என் நன்றிகள். சில மாதங்களுக்கு முன்னர் என் விகடன் அட்டை படத்தில் என் புகைப்படத்துடன் என்னை பற்றி கட்டுரை வந்த போது இல்லாத ஒரு சிலிர்ப்பு இப்போது என் எழுத்தை விகடனில் காணும்போது கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் “ஆனந்த விகடனிலும்”, “ஜூனியர் விகடனிலும்” அந்த கட்டுரைக்கு வாசகர்களை கவர அவர்கள் கொடுத்த விளம்பரம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. நிச்சயம் இதோடு முடியபோவதில்லை விகடனுக்கும் எனக்குமான பந்தம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் என்னுடைய எழுத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அவர்கள் குடுத்த நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. ஆப்டர் ஆல் ஒரு நம்பிக்கையில் தானே இந்த வலைப்பூவே தொடங்கப்பட்டது.
இதோ “என் விகடனின்” சுட்டி
http://en.vikatan.com/article.php?aid=24213&sid=684&mid=32
வெளியான இரண்டு பதிவின் நேரடி சுட்டி:
1. செல்வராகவனுடன் சில நிமிடங்கள், பல நினைவுகள்…
http://www.cpraveen.com/suvadugal/meeting-with-selvaraghavan/
2. வழக்கு எண் 18/9ம் – என் மன உறுத்தலும்
http://www.cpraveen.com/suvadugal/vazhakku-en-18-9/
ஆனந்த விகடனிலும், ஜூனியர் விகடனிலும் வெளியான என் கட்டுரையின் விளம்பரம்.

“நாடு கடந்த சேலம்” என்னும் தலைப்பில் நக்கீரன் செப்டம்பர் 14, 2011 இதழில் எங்களுடைய முயற்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது! மேலும் படிக்க கீழுள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கவும். இம்முயற்சியில் எங்களுடன் இணைய ஆர்வமுள்ளோர் இவ்வலைப்பூவில் உள்ள “தொடர்பு கொள்க” பகுதியில் மூலம் எனக்கு செய்தி அனுப்பவும் அல்லது கீழே கருத்திடவும்.

இம்முயற்சியை பற்றிய மேலும் தகவலுக்கு கீழுள்ள பதிவுகளை வாசிக்கவும்.
1. சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி
2. சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!
“சேலம் 28 – சேலங்களைத் தேடி ஓர் உலக உலா!” – உலகம் முழுக்கப் பரவி இருக்கும் சேலங்களைக் கண்டுபிடிக்க கிளம்பி இருக்கும் பிரவீன்குமாரின் முயற்சிக்குச் சூட்டியிருக்கும் பெயர் இது! உலகம் முழுக்க சேலம் என்கிற பெயரில் இருக்கும் ஊர்களைத் தேடிப் பிடித்து அங்கு உள்ளவர்களுடன் ஒரு வலைப் பின்னல் ஏற்படுத்தும் முனைப்போடு செயல்படுகிறார் பிரவீன்குமார்.
”ஊர்ப் பாசம் அதிகம் எனக்கு. சொந்த மண்ணை விட்டுப் போக மனசு இல்லாமல் வெளியூரில் கிடைச்ச நல்ல வேலையை ஏத்துக்கவே இல்லை. ஏற்கெனவே பாலசுந்தரம்னு ஒருத்தர் 1960-ல் சேலத்தைப் பத்தி ஆராய்ச்சிப் பண்ணி இருக்கார்னு கேள்விப்பட்டு அவரைச் சந்திச்சேன். ‘உலகம் முழுக்க பல நாடுகள்ல சேலம்ங்கிற பேர்ல ஊர்கள் இருக்குது. அந்த ஊர்களில் வசிக்கும் முக்கிய நபர்களை எல்லாம் ஒருங்கிணைச்சு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்த முயற்சி செஞ்சேன். என்னால் முடியலை. வயசாயிடுச்சு. நீயாவது செய்’னு சொன்னாரு.
அவரை மானசீக குருவா ஏத்துக்கிட்டு உலகத்துல சேலங்களைத் தேட ஆரம்பிச்சேன். அமெரிக்காவில் மட்டும் சேலம் என்கிற பேரில் 24 ஊர்கள் இருக்குது. தென் ஆப்பிரிக்கா, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு ஊர் இருக்கு. கணக்குப் போட்டுப் பார்த்தா, நம்ம ஊரோடு சேர்த்து உலகத்துல 28 சேலம் இருக்கு. இந்த 28 சேலத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கேன்.

அமெரிக்காவின் ஓரிஸான் மாகாணத்தைச் சேர்ந்த சேலத்தில் இருக்கும் ஜர்னலிஸ்ட் டிம்கிங் என்பவர் அறிமுகம் ஆனார். அவருக்கும் என் ஐடியா பிடிச்சுப் போயி என்னோடு கைகோத்துக்கிட்டார். சீக்கிரமே நம்ம சேலத்துக்கு அவர் வரப் போறார். நம்ம சேலத்து மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் போன்றவற்றை ஒரு குறும்படமாக இயக்கி அவங்க ‘சேலத்தில்’ ஒளிபரப்பும் திட்டத்தோடு வர்றார்.
இதனால் என்ன லாபம்னு நீங்க கேட்கலாம். எல்லா சேலத்திலும் இருக்கும் சமூக சேவகர்கள், வர்த்தகர்கள், அதிகாரிகள் போன்ற பிரபலங்களை ஒருங்கிணைச்சா எவ்வளவு நல்லா இருக்கும். அந்நகர மக்களுக்குள்ள நட்பு உணர்வு ஏற்படும். வர்த்தகரீதியிலான தொடர்பில் துவங்கி கலாசாரப் பகிர்தல் வரை ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும். இந்த அமைப்புக்கு ‘மை சேலம்’னு பேருவெச்சிருக்கோம். இந்த அமைப்பில் சேர ஒரே தகுதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
www.salemjilla.com என்ற தளத்தில் சேலம் பற்றிய செய்திகள், புகைப்படங்களை தினமும் அப்டேட் பண்ணிட்டே இருப்போம். இப்போ உலகம் முழுக்க இருக்கும் சேலங்களை பத்தின செய்திகளையும் கொண்டுவரப் போறோம். எங்கேயும் சேலம்… எப்போதும் சேலம்… இதுதான் எங்க தாரக மந்திரம்!” சிலாகிக்கிறார் பிரவீன்.
– நன்றி “ஆனந்த விகடன் (10/08/2011) – என் விகடன்”
பெரிது படுத்தி பார்க்க கிளிக் செய்யவும்.


