சுவடுகள்

ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு
“கெளதம் மேனன் சொன்னப்போ  சிக்ஸ் பேக் கொண்டுட்டு வர கடுமையா வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் தான் என்னோட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா பலவீனமடைவது  எனக்கே புரிஞ்சது. எல்லாருக்கும் என்னோட அட்வைஸ் ஒன்னே ஒன்னு தான். ஒரு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் இல்லாம யாரும் இதை முயற்சி பண்ண வேணாம்” – இது நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் சிக்ஸ் பேக் ஆப்ஸ் பார்த்து வாயை  பிளக்காதவர்களே இருந்திருக்க முடியாது.

இந்தி கஜினி திரைப்படத்திற்காக நடிகர் ஆமிர் கான் மெனக்கெட்டது கொஞ்சம் நஞ்சமில்லன்னு சொல்லலாம். ஒரு வருடம் ஜிம்மே கதின்னு கிடந்தார் மனுஷன். அதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் வீடியோ எடுத்தும் வச்சி இருந்தாங்க. மேக்கிங் ஆப் கஜினி மாதிரி, அந்த மேக்கிங் ஆப் சிக்ஸ் பேக் வீடியோ இதுதான்.

<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/6UHsVi4TaZY&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/6UHsVi4TaZY&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></object>

அப்புறம் நம்ம புரட்சி தளபதி(அவருக்கே அவரே வச்சிகிட்ட பேரு!) கூட அந்த காக்க காக்க ரீமேக் படத்துல சிக்ஸ் பேக் முயற்சி பண்ணினாரு. ஆனா பாவம், படம் ஊத்திக்கிட்டதுனால அது வேஸ்டா பூடுச்சு.  அதுல உள்ள போன அவர் மார்க்கெட்டும், கன்னமும் இன்னமும் மேல வரவே இல்ல. இப்படி இந்திய சினிமா ஹீரோக்களால் சிக்ஸ் பேக் கடந்த சில வருடங்களாக கடை கோடி மக்கள் மத்தியில் கூட பிரபலமானது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜிம்மிலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தினமும் மணிக்கணக்காக மனிதர்கள் வியர்வை சிந்தி போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.  சிலர் சிக்ஸ் பேக்கிற்கு, சிலர் எயிட்(!) பேக்கிற்கு ஆனால் பலரோ சிங்கிள்  பேக்கிற்கு(ஹி ஹீ நானும் தான்). அதை நாம லஞ்ச் பேக்குனு கூட சொல்லலாம்.

அப்பேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உடற்பயிற்சி மையத்தில்  டம்மி பீசுகளும், காமடி பீசுகளும் சிலர் வந்து போவதை காண்பது தவிர்க்க இயலாதது.. அவர்களுக்கு தேவை சிக்ஸ் பேக்கோ, இல்லை உடல் எடை குறைப்பதோ தெரியாது ஆனால் அவர்கள் அதற்காக ஜிம்மில் நடத்தும் அரங்கேற்றம் சொல்லி மாளாது. அந்த மாதிரி நபர்கள் சில சமயம் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் உற்று கவனிச்சா குபீர்னு சிரிப்பு வந்துடும்.. நானும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் கண்ட அது மாதிரி சில நபர்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.. ஓகே வாங்க ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு போலாம்.

சென்ற முதல் நாளே நான் நோட்டமிட்டது என்னவென்றால் அங்கே ஒவ்வொருத்தர் காதிலும் ஒரு ஹெட் செட் தொங்கிக்கொண்டு இருந்தது. உடற்பயிற்சி  செய்யும்போது ஹெட் செட் அணியக்கூடாது என்று ஏற்கனவே எங்கோ படித்த அந்த ஞாபகம் கொஞ்சம் நினைவில் வந்து போனது.. காதில் உஷ்ணம் அதிகரிக்குமாம். அதிலும் சிலர் உச்சக்கட்டம், ட்ரெட் மில்லில் ஓடும்போது செல்போனை காதில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் யாரிடமோ(!) வருத்துக்கொண்டு இருப்பார்கள்.. பக்கத்தில் நாம் ஓடும்போது அதை காதில் கேட்கவே சகிக்காது… அங்க கூடவா மிஸ்டர்?

இன்னொரு வகையறாக்கள் இருக்கிறார்கள்… உடற்பயிற்சி செய்யும்போது போன் பேசக்கூடாது என்று அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறன். அவ்வளவு நல்லவர்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் ஜிம்மின் உள்ளேயே வருவதில்லை.. வெளியிலேயே போனும் கையும்மாக நிற்பார்கள். சில மணிநேரம் தொடர்ந்து பேசும் ஜாம்பவான்கள் நேரம் ஆகிவிடும் காரணத்தினால் உள்ளே வராமலேயே அப்படியே சென்று விடுவதையும் கண்டு இருக்கிறேன். தானும் ஜிம்முக்கு போகிறேன் என்பதற்காகவோ அவர்கள் வருகிறார்களோ என்னவோ. அப்படியே உள்ளே வருபவர்கள் விரல்களுக்கு வலிப்பு வந்தார் போல் எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த பக்கம் பதில் அனுப்புபவருக்கும் வேறு வேலை வெட்டி இருப்பதாக தெரியவில்லை.

இன்னும் கொஞ்சம் பேரு…….. எலும்பும் தோலுமா, வத்தலும் தொத்தலுமா, அப்படின்னு சொல்லுவாங்களே, அந்த வகை பசங்க.. எல்லாம் சின்ன பசங்க. அதுல ஒருவன்.. அனேகமா ஏழாவது, எட்டாவது படிக்கணும்னு நெனைக்கிறேன். பாத்தாலே பாவமா இருக்கும்.. சாப்பிட்டு பத்து நாள் இருக்குமோனு தோணுற மாதிரி இருக்ககூடியவன். வெயிட் தூக்க முடியாம தூக்கறதும், அதுக்காக கஷ்டப்படுறதும் பார்க்க முடியவில்லை. எல்லாம் சிக்ஸ் பேக் சினிமா உசுப்பேத்தி விட்ட விடலைகள்.

இது கூட பரவாயில்லைங்க… இன்னொரு நாள்.  ஜிம்மில் கண்ணாடி பிம்பத்தில் அதை காண நேர்ந்தது.. தூண் மறைத்துக்கொண்டு இருந்ததால் அவரை நான் முழுமையாக காண முடியவில்லை. பக்கவாட்டில் தெரிந்த அவர் முகத்தை பார்த்தால் நிச்சயம் அவருக்கு வயது ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து இருக்கலாம்.அவர் ஒரு உயரமான கம்பியை பிடித்து அசால்டாக மேலும் கீழும்  தொங்கிக்கொண்டு இருந்தார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த வயசுல என்ன ஒரு ஷ்டாமினா??? ஒவ்வொரு தொங்களுக்கும்.. ஒன்று.. இரண்டு.. மூன்று.. என்று  அவர் எண்ணுவது வேறு என் காதில் வந்து விழுந்தது. சர்வசாதரணமாக இப்படி தொங்குகிறாரே மனிதர். நாமும் இருக்கிறோமே.  அரைமணி நேரம் ட்ரெட் மில்லில் ஒடுவதற்கே….. ச்சே…

இவ்வாறு மனதில் புலம்பிக்கொண்டே கொஞ்சம் நகர்ந்து  அவரை எதேச்சையாக  பார்த்தேன்… அவர் இடுப்பை கையில் பிடித்தவாறு அவர் பின்னால் நின்று கொண்டு “டிரைனர்” அவரை மேலும் கீழும் தூக்கி விட்டுக்கொண்டு இருந்தார்…

பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் – களவாணி விமர்சனம்
இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு… படம் முடியும் வரை இருக்கையில் நெளியாமல் அமர வைக்கும் நேர்த்தியான திரைக்கதை. நரசிம்மராவ் போன்றோரரையும் சிரிக்கவைத்து விடும்  குபீர் வசனங்கள். கை இல்லாதவர்களையும்  அடிக்கடி கைதட்ட வைத்துவிடும் காட்சி அமைப்புகள். காதில் ரத்தம் வரவழைக்காத  பாடல்கள் பின்னணி இசை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் களவாணி திரைப்படத்தை. கதை ஒன்றும் தமிழுக்கு புதிதில்லை. திரைக்கதை, காட்சி அமைப்புகளே இந்த படத்திற்கு பக்க பலம். இந்த படத்தில் விமலின் நடிப்பு அருமை. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் அவருக்கு கெடைச்சா போதும். சிம்பு, தனுஷ் வரிசையில அவரும் வந்துடுவாரு. அந்த ஹீரோயின் பொண்ணு நெஜமாவே இஸ்கூல் பொண்ணா?  யூனிபார்ம்ல பள்ளிக்கூட மாணவி போல இருக்கு. சீலை கட்டுனா டீச்சர் கணக்கா இருக்கு? எப்புடி இருந்தா என்ன? நல்லா இருக்குல்ல  அவ்ளோதான்.

படத்தோட முக்கிய கதாபாத்திரமே கஞ்சா கருப்புதான். பருத்தி வீரனுக்கு அப்புறம் கண்டிப்பா இந்த படத்துலதான் அவருக்கு காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆகி இருக்கு.  அவர் வருகிற காட்சி எல்லாம் சிரிச்சே தொலையனும் வேற வழியே இல்ல. அதுவும் அந்த “பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான்” காமடி இருக்கே. தியேட்டர்ல போயி கண்டிப்பா பாருங்க.இன்னும் நிறைய இருக்கு.. படத்தோட கிளிமாக்ஸ்ல கூட எதிர்பாராத காமெடி இருக்கு. படம் முடிஞ்ச ஒடனே வெளியே போய்டாதீங்க அவசர குடுக்கை மக்களே. படம் முடிந்து எழுத்து ஒடும் போதும் அதில் சிரிப்பை ஒளித்து வைத்துள்ளார் இயக்குனர். குடுத்த காசுக்கு கடைசி வரை சிரிச்சிட்டு வாங்க. நான் வெளிவே வந்து பார்கிங்கில் வண்டி எடுக்கும் வரை சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

இந்த படத்துக்கு ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, போதுமான விளம்பரம் இல்லை.. “கலாநிதி மாறன் பெருமையுடன்  வழங்கும்” அப்படின்னு இந்த மாதிரி நல்ல படத்துக்கு விளம்பரம் கெடச்சி   இருந்தா இந்த வருடத்தின் சிறந்த படம் இதுவே. வசூல் சாதனை புரிந்திருக்கும்  படமும் இதுவாக தான் இருந்து இருக்கும். இந்த  படம் பார்த்து ஒரு வாரம் ஆகுது ஆனால் இந்த விமர்சனத்தை எழுத முடியவில்லை. எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. . ஏனென்றால் கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதிட்டு இந்த மாதிரி நல்ல படத்தை எழுதாமல் விட மனம் வரவில்லை.  நம்மால் ஆன விளம்பரமாக இது  இருக்கட்டும். ஒருத்தர் கூடவா இத படிச்சிட்டு இந்த படம் பார்க்க போக மாட்டாங்க. இந்த மாதிரி படத்திற்கு மக்களே வெற்றிபெற உதவ வேண்டும்.. நல்லா இருந்தா நீங்களும் நாலு பேருகிட்ட சொல்லுங்க.. என்ன சொல்றீங்க?

இதோ போனஸாக களவாணி ரிங்டோன் – இலவச டவுன்லோட்.

சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு
பெண்கள் பூவென்றிருந்தேன்

என் இதயம் குத்தப்படும் வரை.

ரோஜாவை அழகாக படைத்தவன்

முள்ளையும் மறக்கவில்லை!

காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.

காவிரியில் தண்ணீர் இல்லையாம்

கண்ணீராவது ஓடட்டும்!

தமிழ்நாட்டிற்கு

புதிய மின்சார விநியோகம்

உன் விழிகளிலிருந்து!

நான் தவமிருந்தது உண்மைதான்

உன் வரம் கிடைக்குமென!

சாபம் கொடுத்துவிட்டாயே

கடைசிவரை கண்ணீரென!

உனக்கும்

நல்ல மனதுதான்

உன் நினைவுகளையாவது

காதலிக்க விட்டாயே…

தடுக்கித்தான் விழுந்தேன்.

அவள் நெஞ்சம்,

புதைக்குழி என்றறியாமல்….

தாடி கூட,

சரியாக முளைக்கவில்லை,

தேவதாஸ் ஆகிட!

தமிழ்நாட்டில்,

மின்சார தட்டுப்பாடு

அவள் கண் சிமிட்டும்போது.

விடியும் என்றுதான்

தினமும் உறங்குகிறேன்!

மின்னி மின்னி

மறையும் மின்மினிப்பூச்சி

உன் விழி!

நீ தீண்டினாலும்

சுகம்தான்!

திட்டினாலும்

சுகம்தான்!

காதல் வலையே

பிடியில்லாமல் விழுந்துவிட்டேன்

என்று பீற்றிக்கொள்ளாதே

அவளை

பிடித்துத்தான் விழுந்தேன்

என் இதயமாளிகையில்

இருக்கும் என்னவளுக்கு

மூச்சு திணறுகிறதாம்

புகைப்பதை நிறுத்திவிடுகிறேன்!

- பிரவீன் குமார் செ

http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-two

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா
2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும்  தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன்.

இத்தனையும் அங்கு சென்றடையும் வரை மட்டுமே. அவன் வீட்டின் அருகே சென்ற போது… என் நண்பனின்  ஓலம்… அதை கேட்டுக்கொண்டே அவன் வீட்டிற்குள் நாங்கள் நுழையும்போது என் உடல் சிலிர்த்து போனது. உள்ளே சென்ற உடன் அவன் என்னை கட்டித்தழுவி கதறி புலம்பியபோது ஒரு நிமிடம் என்னை ஏதோ செய்துவிட்டது. அம்மாவென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பத்து மாதம் சுமந்து பெற்று தன் குழந்தைகாகவே  வாழ்ந்து மடியும் ஒரே உறவு அம்மா தான். அதன் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று.

இரவு பதினோரு மணிவரை இடுகாட்டில் அவனுடன் இருந்து உடல் தகனம் செய்துவிட்டு வந்தோம். வீட்டிற்கும் வந்தும் கூட அந்த பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை. அவன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நல்ல வேலை கிடைத்து சந்தோசமாக இருந்தால் கூட அவன் அம்மாவிற்கு கடைசி வரை தெரியாதே? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டு இருந்தது. அவன் மனநிலையை நானும் உணர்த்து கொண்டிருத்த அந்த நடுநிசியில் அவனுக்காக  வெளிப்பட்ட பாதிப்பே இந்த கவிதை.

அம்மா!

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..

குழந்தையாய் நான்

சாப்பிட அடம்பிடித்த போது,

நீ பாசத்துடன் ஊட்டிய

அந்த நிலாச்சோறு.

முழுக்கால் சட்டை வயதில்

பள்ளிக்கு செல்லும் முன்

அப்பாவுக்கு தெரியாமல் நீ கொடுக்கும்

அந்த பத்து ரூபாய் நோட்டு.

எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம்

உன் கண்களில் வரும்

அந்த கண்ணீர் துளி.

சரியாக படிப்பதில்லையென

அப்பா என்னை அடிக்கும் போது

நீ மட்டுமே என் மேல் வைத்த

அந்த நம்பிக்கை.

அனைத்தையும்

அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..

நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு

உன் கடைசி தருணத்தில்

எல்லோரும் உனக்காக வேண்டிக்கொண்டு இருக்க,

நீயோ

என்னை பற்றியும்

என் எதிர்காலம் பற்றியும் பேசியவாறு

என் மடியில் உயிர் பிரிந்த

அந்த தருணம்.

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அனைத்தையும்

அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?

அம்மா!

இப்போது

நீ எதிர்பார்த்த நிலையில்

நானிருக்கிறேன்.என்றாலும்

என்னுடன்

எனக்கு துணையாய் இருப்பதோ

உன் குரலும்

உன் உருவமும் தான்.

வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்
“அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது… ” – “சத்தம் போடாதே” படத்தின் பாடலை ஒரு குழந்தை எவ்வளவு அழகாக பாடிக்கொண்டே ஆடுகிறது என்று பாருங்கள். அதனால் தான் இந்த இடுக்கையின் தலைப்பு “வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்”. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

பி.கு: இந்த வீடியோவை அடியேன் தான் எடுத்தேன் ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர்

<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/JauOQUEsD1I&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/JauOQUEsD1I&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></object>

சுறா விமர்சனம் – சொந்த காசில் சூனியம்
பெரியோர்களே, தாய்மார்களே இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சுறானு ஒரு உலக தமிழ் சினிமா வந்திருக்கிறது. தெரியாம அந்த தியேட்டர் பக்கம் கூட போயிடாதீங்க. நாலு நாளைக்கு தூங்க மாட்டீங்க.  நானும் விஜய் விசிறியாக தான் இருந்தேன். அது இஸ்கூல் காலேஜு படிக்கும் போது. இப்போ மட்டும் அந்த உலக நடிகனை நேரில்  பார்த்தேன் அவ்ளோதான். ஒரு மனசாட்சியே இல்லாம ஒரு படத்தை எடுத்து இருக்காங்க. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு மிஸ்டர் விஜய். கடந்த ஐந்து வருடமா ஒரே படத்தை அதுவும் உங்க படத்தையே ரீமேக் பண்ணிட்டு இருக்கீங்களே. இது உங்களுக்கே நியாயமா?

ஒரு வருசமா ரூம் போட்டு யோசிச்சு எழுதின  சுறா கதை என்னன்னா, விஜய் ஒரு மீனவ குப்பத்துக்கே தலைவர். அவரை  கேட்காமே அந்த ஊர்ல குழந்தை கூட சூ சூ போகாது. அவ்ளோ பவர்புல் ஆள் அவரு. அதுக்கு கைமாறாக அங்க இருக்க ஆயிரம் குடும்பங்களுக்கும் வீடு கட்டி கொடுக்கறது தான் அவருடைய வாழ்க்கை லட்சியம். இதுல வில்லன் அந்த குப்பத்த அழித்து தீம் பார்க் கட்ட திட்டம் போடுறார். அதை தடுத்து, வில்லன் பணத்தையே லவுட்டி குப்பத்தில் வீடு கட்டுகிறார் விஜய். இடையில் ஐந்து சண்டை, ஐந்து பாட்டு… பாட்டுக்கு முன்னாடி தமன்னா வந்து அட்டண்டன்சு போட்டுடுவாங்க. அப்பேற்பட்ட சென்சிடிவ் கதையை தன்னுடைய ஐம்பதாவது படத்திற்கு தேர்ந்தெடுத்த விஜயின் வியூகம் புல்லரிக்கிறது. நான் இயக்குனரை குறை கூற மாட்டேன். விஜய்கிட்ட கால்ஷீட் வாங்கனும்னா எப்படிப்பட்ட கதை பண்ணனும்னு அவருக்கு தெரிஞ்சி இருக்கு. ஆக மொத்தம் ரெண்டு பெரும் சேர்ந்து பொது மக்களை மொக்க போட்டுட்டாங்க.

வடிவேலு அப்போ அப்போ தனி ட்ராக்ல வந்து காமெடி பண்ண ட்ரை பண்ணி எரிச்சல் பண்றார். ரெண்டு வாட்டி சிரிக்கலாம் அவ்ளோதான். தமன்னா பாவம் படத்துல வேலையே இல்ல. விஜய் படத்துல எந்த நடிகைக்கு வேலை இருக்கும். விஜய் பேசறதுக்கே இரண்டரை மணி நேரம் போதவில்லை அப்படி இருக்க தமன்னா என்ன பண்ணுவாங்க? தமன்னாவினுடைய தற்கொலை முயற்சி அறுவையோ அறுவை. விஜய் தம்பி  படம் முழுக்க பஞ்ச் டயலாக்கு பேசியே கொல்றார். பேசற ஸ்டைல் இருக்கே சான்சே இல்ல. கொடுமை. அப்போ மழை மட்டும் பேயவில்லை என்றால் பாதி படத்துலேயே எந்திரிச்சு வந்து  இருப்பேன்.

படத்துல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் வில்லன் தான். சூப்பரா நடிச்சிட்டு இருந்தார் விஜயை பார்க்கும் வரை. ஆனால் அவர்கிட்ட பஞ்ச் டயலாக்கு பேசி பேசியே அவரையும் ஒரு வழி பண்ணிட்டார் நம்ம விஜய். யாரை தான் பேச விடறார் படத்துல. ஒரு சாம்பில் “உன் வலைல மாட்ட நான் ஒன்னும் இறா இல்லடா. சுறா….”. இந்த படத்துக்கு செலவு பண்ணின தண்ட காசுக்கு மேற்கூறிய அந்த ரெண்டு ஆயிட்டதையும் ஒரு நல்ல ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுவிட்டு போயிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த படத்துக்கு போனிங்கன்னு கேட்பது எனக்கு புரியுது. இன்டர்நெட்ல ஒரு ப்ளாகுல விமர்சனம் படிச்சிட்டு ஏமாந்துட்டேன். இனிமேல் விஜய் படத்த பார்க்கப்போறதா இல்லை.அப்படியே பார்க்கறதா இருந்தால் விஜய் ரசிகர் அல்லாத பிளாக் தேடி கண்டு பிடித்து படித்து விட்டு முடிவு செய்வேன்.

எப்புடி நடிச்சாலும் தியேட்டருல கூட்டம்  கூடுதுன்னு ஒரு காரணத்துக்காக விஜய் பண்ற அட்டகாசம் தாங்கல. அவரிடம் யாரும் உலக சினிமாவை யாரும் எதிர்பாக்கல ஜஸ்ட் ஒரு உருப்படியான சினிமா கொடுத்து ரசிகர்களை முட்டாளாக்காமல் இருக்க வேண்டாமா? கடைசியாக  ஒரே ஒரு வேண்டுகோள். சுறாவை டிஸ்கவரி சேனலில் பாருங்க தப்பே இல்லை. அட கடலுக்கு சென்று நேரில் கூட பாருங்கள் ஒன்னும் பண்ணாது. ஆனால் தியேட்டர்ல பார்த்துடாதீங்க அது பெரிய ரிஸ்க். விஜய் அவருடைய ஒரு ரசிகரை இழக்க வேண்டியது வரும்.

என் காதல் சொல்ல நேரமில்லை
பையா திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் “என் காதல் சொல்ல நேரமில்லை”. மிகவும் அருமையான மெலோடி. எத்தனை முறை எழுதினாலும் நா.முத்துக்குமாருக்கு காதல் பற்றி எழுதுவதில் சலிக்கவில்லை போலும். இந்த பாடலின் மிகப்பெரிய பலம் அவருடைய எழுத்துக்கள் தான். தற்போது வந்த பாடல்களில் மிகவும் ரசிக்கப்படும் பாடல் இது. சில பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். அந்த வரிசையில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன் அதுவும்  திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டபோது ஆனால் இந்த பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடலில் என்ன விசேஷம் என்றால் யார் வேண்டுமானாலும் அதை சுலபமாக பாடும் படி இசையமைத்து இருப்பார். மிகவும் பிடித்த பாடலை யாராலும் முணுமுணுக்காமல் இருக்க முடியாது. இதோ நானும் முயற்சி செய்து இருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்.

<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/UJzf-RNvruQ&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/UJzf-RNvruQ&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></object>

இதோ போனசாக அதன் பாடல் வரிகளும்.

என் காதல் சொல்ல நேரமில்லை..

உன் காதல் சொல்ல தேவையில்லை..

நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..

உண்மை மறைத்தாலும் மறையாதடி…

உன் கையில் சேர ஏக்கமில்லை…

உன் தோளில் சாய ஆசையில்லை…

நீ போன பின்பு சோகமில்லை…

என்று பொய் சொல்ல தெரியாதடி…

உன் அழகாலே அழகாலே

என் வெயில்காலம் அது மழைக்காலம்…

உன் கனவாலே உன் கனவாலே

மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்….

காற்றோடு கைவீசி நீ பேசினால்

என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…

வயதோடும் மனதோடும் சொல்லாமலே

சில எண்ணங்கள் வலைவீசுதே..

காதல் வந்தாலே கண்ணோடுதான்

கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?

கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..

இந்த விளையாட்டை ரசித்தேனடி..

உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும்

அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்க்கும்

ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..

இந்த நிமிடங்கள் நீளட்டுமே..

வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..

இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்…

என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…

சிறு பிள்ளையென என்தன் இமைகளது

உன்னை கண்டாலே குதிக்கின்றதே…

என் அதிகாலை என் அதிகாலை

உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..

என் அந்திமாலை என் அந்திமாலை

உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்…

சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று
காதல் காவியம்

காதல் வானிலே,

வாழும் காவியம் நாம்.

நிலவாய் நீ,

ஒளியாய் நான்.

தனிமை

காதல் தீவிலே,

நிலமாய் நான்….

தனியாய் என்று வருந்தினேன்!

கடலாய் நீ…

அலையாய் வந்து மோதினாய்..

காதல் மொழி.

ஊமைகள் கூட

பேசும் மொழி,

காதல் மொழி!

தேடல்

மலரை தேடி வண்டு வந்தது,

மகிழ்கிறாய்!

இரவை தேடி நிலவு வந்தது,

ரசிக்கிறாய்!

உன்னை தேடி நான் வந்தால் மட்டும்

ஏனடி வெறுக்கிறாய்?

அவளின் பிறந்த நாள்

பூவுக்கு பிறந்த நாளாம்!

புத்தாடை போர்த்திக்கொண்டது…

பூவிலும் அவள்

மல்லிகையோ ரோஜாவோ அல்ல..

அது வாடி விடும்.

அவளோ வாடா மல்லி

என்றென்றும் “வாடா மல்லி “!

சிக்கல்

காதல் புயல் என்றறிந்தும்

ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!

காதல் தீ என்றறிந்தும்,

ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!

காதல் சுழல் என்றறிந்தும்

ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!

உனக்காக,

நான் புதிதாய் கற்றுக்கொண்ட மொழி,

மௌன மொழி!

கொலை

புயலில் பிழைத்து,

இடியில் தப்பித்து,

தீயில் நடந்து,

நீரில் தவழ்ந்து

உன்னை காண வந்தேன்

ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!

கனவு

நீ என்னிடம்

கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால்

கனவு கூட,

கனவாகி போனது!

நேரம்

நீ இருக்கும் போது,

நேரம் போதவில்லை.

நீ இல்லாத போது,

நேரம் போகவில்லை!

காதல் என்ன  கெட்ட வார்த்தையா?

பரவாயில்லை,

பேசித்தான் பார்ப்போமே!

என் டைரி

உன்னை பார்த்த நாள் முதல்,

என்னிடம்,

என் டைரி கோபித்துக்கொண்டது.

எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.

என் மனச்சுமை குறைவது தெரியாமல்……

விண்மீன்களை கண்களாக்கினான்,

சந்தனத்தை தோலாக்கினான்,

பளிங்கை உடலாக்கினான்

ஆனால்,

இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!

பூக்கடையில்,

ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,

நீ வரும் வரையில்!

புத்தகக்கடையில்,

ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன

நீ தொடும் வரையில்!

என் பார்வையில் பையா திரைப்படம் – விமர்சனம்
நேற்று இரவு பையா திரைப்படம் இரவு காட்சிக்கு கே.எஸ். பிக் சினிமாஸ் தியேட்டருக்கு சென்றிருந்தோம். கவுண்டர் அருகே டிக்கெட் வாங்க சென்ற போது செக்யூரிட்டி “சார், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்”..(பார்க்க - http://twitter.com/praveenc85/status/11547200473).. ஸ்ஸ்ஸ்ஸ்… “அடடா, நான் ஏற்கனவே வெப் சைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டேங்க. கவுண்டர்ல அத காட்டி டிக்கெட் வாங்க வந்தேன். ஏ.சி என்ன ஆச்சு?”, நான். அதற்க்கு அவர் “அது என்னவோ தெரியல சார், புது படம் வந்தா ஏ.சி வேலை செய்ய மாட்டேங்குது!!! சொல்லாம டிக்கெட் கொடுத்துட்டா, உள்ள வந்து சத்தம் போடுவாங்க. அதான் என்ன கவுண்டர்ட நிக்க வச்சிட்டாங்க.” என்று சொல்லிவிட்டு எனக்கு பின்னாடி நின்ற ஒரு பெண்மணியிடம் “மேடம், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்” என்று தன் பணியை செய்துக்கொண்டு இருந்தார். சரி என்ன பண்றது? வாங்கி கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே நுழையவும், திரையில் எழுத்து போடவும் சரியாக இருந்தது.

சரி.. படத்துக்கு வருவோம். பையா எப்படி? உலக சினிமாவா? தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படமா? ஒரு சிறந்த இலக்கிய படைப்பா? என்று நீங்கள் கேள்வி கேட்டால்.  சத்தியமாக கிடையாது. பக்கா மசாலா படம். பீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார்  சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம். நல்லா தான இருக்கும்? சரி கதை என்னன்னு கேடீங்கனா… “…………”… “………..”.. “….” அதெல்லாம் கேட்க கூடாது. தயாரிப்பாளரே டைரக்டர் லிங்குசாமியிடம் கேட்காத கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கலாமா? நோ.. நோ. கேட்டாலும் யாருக்கும் தெரியாது. படத்த பார்த்து என்ஜாய் பண்ணிட்டு அவங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்கனும். என்ஜோய்மென்ட் காரண்டீட். படத்தில் அந்த அளவிற்கு செலவு இல்லை. அனால் ஒவ்வொரு காட்சியிலும் லிங்குசாமியின் சிரத்தை தெரிகிறது. வெற்றி ஒன்றே அவரின் குறிக்கோள்.

படம் இப்படி தான் ஆரமிக்கிறது. பெருசா ஏதும் பில்டப் கொடுக்காமல், மிக சாதாரணமாக இன்ட்ரோ கொடுக்கிறார்கள் கார்த்திக்கிற்கு. நண்பர்கள் அனைவரும் பஸ்ஸில் வெயிட் பண்ண, பஸ்சு கிளம்பும்போது தான் வருவேன்னு வெயிட் பண்ணி ஓடி வந்து ஏறுகிறார் கார்த்திக். கார்திக்கை பார்த்தவுடன் தியட்டரில் ஒரே விசில் கைதட்டல். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த பெயர். மூன்றாவது படத்திலேயே நிறைய ரசிகர்களை சம்பாதித்து விட்டார். நல்ல வேலை அதுக்காக பெருசா பில்ட் அப் ஏதும் கொடுத்து ஒரு இமேஜ் உருவாக்க முயற்சி பண்ணல. பஸ்சில் இருந்து இறங்கும் போது தமன்னாவை பார்க்கிறார் கார்த்திக். பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது!!! ஒரு மாதிரி முழிக்கிறார் தமன்னாவை பார்த்து. கார்த்திக் ரியாக்சன் சூப்பர். அதன் பின் வரும் காட்சிகளில் அவர் உள்ளே நுழையும் இடம் எல்லாம் தமன்னா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். படம் மிக பொறுமையாக தொடக்கத்தில் நகர்கிறது. கார்த்திக்கின் காரில் தமன்னா ஏறியவுடன் தான் படம் டாப் கியரில் சீறுகிறது. அனல் பறக்கிறது.

படத்தில் முக்கியமாக மூன்றே கதாபாத்திரம் தான். ஒன்று கார்த்திக், மற்றொன்று தமன்னா அப்புறம் மூன்றாவதாக முக்கிய பாத்திரத்தில் அந்த கருப்பு கார். சும்மா பூந்து விளையாடி இருக்கு படத்துல. படம் பார்த்தா தான் உங்களுக்கு தெரியும். கார் நடிச்சி இருக்குன்னு நான் சொன்னா நம்பவா போறீங்க? படம் முழுக்க வரும். பெங்களூர் டு மும்பை தமன்னாவும் கார்த்திக்கும் காரிலேயே போவாங்க. அது தான் முழு படமும். (சாரி கஷ்டப்பட்டு வருச கணக்குல லிங்கு அண்ட் டீம் யோசிச்சு உருவாக்கின கதைய நான் தெரியாம சொல்லிட்டேன்!).

கார்த்திக்கை பத்தி சொல்லியே ஆகணும். எப்ப பார்த்தாலும் சூவிங்கம் மென்று கொண்டிருக்கிறார் மனுஷன்.  இந்த படத்துல அவர் பேர் சிவா. ரன் ஞாபகம் இருக்கா? அதுல மாதவன் பெரும் சிவா தான். லிங்குசாமியின் செண்டிமெண்ட் போலும். சரி இருந்துட்டு போவுது.. நல்ல தான் இருக்கு. கார்த்திக் பயங்கர மான்லியா இருக்கார். இத நான் சொல்லியே ஆகணும். பருத்தி வீரனில் வெறும் அர டிராயர், ஏத்தி கட்டின லுங்கி. ஆயிரத்தில் ஒருவனில் ஒரே ஒரு லங்கோடு. ஆனா இதுல நல்ல முன்னேற்றம். கலர் கலரா டீ-ஷர்ட், ஜீன்ஸ். தப்பிச்சிட்டார். அனாயசமா சிரிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். சண்டை போடுகிறார். நிறைய இடத்தில சூர்யா மாதிரியே இருக்கார். கண்டிப்பா குரல் ஒற்றுமை. அதுவும் முக்கியமா தமன்னாவை பாம்பேல அவங்க சொந்தகாரங்க வீட்ல விட்டுட்டு கார்ல போகும் போது அவர் நண்பரிடம் போனில் சோகத்தின் உச்சத்தில் குரலை கரகரவென பேசுவார். சான்சே இல்ல. சூர்யா தான் டப்பிங் கொடுதிருக்கார்னு தோணும். இது தவிக்க இயலாது. சொந்த தம்பி. அதனால் உயமான சூர்யானு வேணா இவற சொல்லலாம்.

பொதுவாக எனக்கு சண்டை காட்சிகள் பிடிக்காது. அதுவும் முக்கியமா விஜய் படத்துல வர மாதிரி. பறந்து பறந்து.. பாய்ஞ்சு பாய்ஞ்சு பத்து பேர ஒரே அடில அடிக்கிறது எரிச்சலா இருக்கும். ஆனா இந்த படத்துல சண்டை காட்சிகள் உண்மையாலுமே பிரமிக்க வைக்கிறது. ஒரே அடி. ஆனா பவர்புல் அடி. எதிரி காலி. அப்படியே சுருண்டு விழுந்துடறாங்க. ஜஸ்ட சாம்பிள். ஒருத்தர தூக்கி, மடில வச்சி, அப்படியே மடக்கி விசுருகிறார் கார்த்திக். பயங்கரமா இருக்கு திரையில் பார்பதற்கு. (நான் இன்னொரு முறை இந்த படத்திற்கு போனாலும் ஆச்சர்யமில்லை)  இந்த படத்திற்கு பிறகு கண்டிப்பா அவருக்குனு தனி இடம் முன்னணி நடிகர்கள் வரிசையில் தமிழ் சினிமாவில் இருக்கு. சூர்யா ஜாக்கிரதை!.

நயன்தாராவுக்கு படமில்லை. திரிசாவிக்கு மார்கெட் இல்லை. அசின் மும்பைக்கு போய்விட்டு விளம்பர படத்திலாவது பிசியாக இருக்கிறார். அதானாலேயே இப்போது தமன்னாவை தவிர தமிழிற்கு வேறு ஆள் இல்லை. அவங்க காட்டுல “அடடா மழைடா அட மழைடா”. சூர்யா, கார்த்திக், விஜய்ன்னு அவங்க மார்கெட் சர்ருன்னு எரிகிட்டு இருக்கு. இந்த படத்தில் கார்த்திக்கிற்கு சரியான ஜோடி. முதல் படத்தில் முத்தழகு கிடைக்கவில்லை. இரண்டாம் படத்தில் ஜோடியே இல்லை. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி விட்டார். தமன்னா இந்த படத்துல பிரிட்ஜ்ல இருந்த எடுத்த ஆப்ளில் பலம் போல ப்ரெஷா இருக்காங்க.(உவமை எப்புடி?). ஒரு பக்கம் கார்த்திக் சண்டைக்காட்சிகளில் வில்லன்களை தோலுரித்துக் கொண்டிருக்கையில். லிங்குசாமி பாடல் காட்சிகளில் தமன்னாவை துகிலுரித்து விட்டு இருக்கிறார். அதனால தானோ என்னோவோ தியேட்டர்ல ஏ.சி வேலை செய்யாட்டி கூட யாருக்கும் வியர்க்கவில்லை போலும். ஹி ஹீ.

அப்புறம் அயன் படத்துல தமன்னாவுக்கு அண்ணனாக ஒருத்தர் வருவாரே – ஜெகன். அவர் இதிலேயும் கார்த்திக்கிற்கு நண்பனாக வருகிறார். அதுல சூர்யாவிற்கு நண்பர். தமன்னா ஹீரோயின். இதுலேயும் தமன்னாதான் ஹீரோயின், கார்த்திக்கிற்கு நண்பர். நல்ல செண்டிமெண்ட். வெற்றி சூத்திரமோ? ஆனா இதுல பட்டாசு கேளப்பிட்டார். அவர் வர சீன்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது. அதுவும் மாறு வேஷத்துல பைக்கில போகும் போது கார்த்திக் கண்ணுல மாட்டிக்குவாரே.. நல்ல காமடி. வடிவேல் நடிச்சி இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்னு நெனைக்கிறேன். ஆனால் இவரும் அருமையான நடிப்பு.

படத்துல யுவன் ஷங்கர் ராஜாவை பற்றி நான் சொல்லாமல் விட்டுவிட்டால் நான் இந்த விமர்சனத்தை எழுதுவதில் அர்த்தமே இல்லை. பாடல்களிர்க்காக தான் இரண்டாம் நாளே படத்திற்கு சென்றேன். நீண்ட நாட்களிற்கு பிறகு தன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார் யூவன். ஒவ்வொரு பாடல்களும் தேன். முக்கியமாக. “என் காதல் சொல்ல நேரமில்லை”, “அடா மழைடா அட மழைடா”, “துளி துளி துளி மழையாய் வந்தாளே”. சூப்பர். என்னோட பேவரெட். நடு இரவில் இப்போது இந்த விமர்சனம் எழுதும் போதும் பின்னணியில் அந்த பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், “பூங்காற்றே பூங்காற்றே” பாடல் முதன் முதலாக கேட்டதில் இருந்து எனக்கு பஸ்சிலோ காரிலோ பயணம் செய்யும் போது பின்னணியில் கேட்க்கும் பாடல் போல தோன்றியது. படத்தில் தமன்னாவும் கார்த்திக்கும் காரில் போகும் போது பின்னணயில் அதன் பாடல் வரும். யூவன் இஸ் ஜீனியஸ். ஆனால் படம் வருவதற்கு முன்பு இந்த பாடல்கள் அனைத்தும் காரணமே இல்லாமல் எனக்கு சண்டைக்கோழியையும் விஷால் முகத்தையும் இத்தனை நாள் எனக்கு ஞாபகபடுத்திகொண்டு இருந்தன. இந்த படம் பார்த்த பிறகும் தான் எனக்கு விஷால் முகம் மறைத்து கார்த்திக் முகம் வந்தது!!!   நா.முத்துக்குமார் எழுத்துக்களை பாராட்ட வார்த்தை இல்லை. ஆனால் மனிதர் “தேவதை”, “ஏஞ்சல்” போன்ற வார்த்தைகளை மறக்கமால் தன் காதல் பாடல்களில் சேர்த்து விடுகிறார். பட் வீ லைக் இட்.

படம் நிறைய இடத்துல சண்டைகோழி, கில்லி, ரன் போன்ற படங்களை ஞாபக படுத்துகிறது. இரவில் கார் துரத்தும் காட்சி ஒன்று வரும். அது பகலில் இருட்டை போன்ற தோற்றத்தை உருவாக்கும் லென்ஸ் போட்டு எடுத்து இருப்பார்கள். அது இல்லை பிரச்சனை. அனால் அந்த கார்களில் ஒளிரும் ஹெட் லைட் கிராபிக்ஸ் வேலை என்று நன்றாக தெரிகிறது. ரோடு ராஷ் கம்ப்யூட்டர் கேமில் நைட் மோடில் விளையாடுவதை போல இருந்தது. இந்த மாதிரி படங்களில் படத்தில் லாஜிக் என்று ஒன்றை எக்காரணம் கொண்டு பார்க்க கூடாது என்று நமக்கு புரிகிறது. நிறைய இடத்தில பிரச்சனை  வரும். ஆனால் அதையும் மீறி படம் ஜெட் வேகத்தில் பயணம் செய்வதால் படம் முடிவதே தெரியவில்லை.காரில் இந்த படத்திற்கு காரில் போய்விட்டு வருபவர் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதை.  வரும் போது கண்டிப்பாக  உங்களை அறியாமல் கார் 150  கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். சர்ர் என்று U டர்ன் போட வைக்க தோணும்…

நீங்கள் இந்த படத்தை பார்த்து விட்டீர்களா? இல்லை பார்க்க போகிறீர்களா? சும்மா உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். அட நம்புங்க காசுலாம் இல்ல. ப்ரீ தான்

என் பார்வையில் விண்ணைத்தாண்டி வருவாயா
கடந்த வெள்ளிக்கிழமை இரவு காட்சிக்கு விண்ணைத்தாண்டி வருவாயா  படத்திற்கு  சென்றேன். படம் பார்த்துட்டு வரும்போது எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா  புரிஞ்சிது.. கௌதம் மேனன் காலேஜ் படிச்சிட்டு சினிமா இயக்குனராக முயற்சித்த  வேளையில் ஒரு ஓமன பெண்ணை “வீட்டை தாண்டி வருவாயா” ன்னு கேட்டு இருக்கார்.  மேடம் வரவில்லை. அந்த பீலிங்க்ஸ் தான் இப்போ “விண்ணைத்தாண்டி வருவாயா” வாக  வெள்ளித்திரையில்…  இது முழுக்க முழுக்க கௌதம் மேனனின் சுயசரிதம்.  சுயசரிதம்னு சொல்றத விட அந்த பொண்ணு இந்த படத்த பார்த்து பீல் பண்ணனும்ன்னு  எடுத்திருப்பார் போல.. “நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்? நான் ஏன் ஜெஸ்ஸிய  லவ் பண்ணினேன்?” படம் முழுக்க ஒரே பீலிங்குதான்.  எது எப்படியோ… அவர்  ஒரிஜினல் மனைவி அவர பார்த்து வடிவேலு தோனியில “ஏய்… என்ன  பீ…லிங்கு? ராஸ்கல்”ன்னு  கேட்காமல் இருந்தால் சரி.. அவ்வளோ உருகி  இருக்கார் மனுஷன்….

சரி படத்துக்கு வருவோம்…. படம் நல்லா இருக்கா இல்லையா? ஓடுமா ஓடாதா?  பதில்.. படம் “ஓடும் ஆனா ஓடாது” ரகம். எப்படின்னு கேட்கறீங்களா?…  உங்களுக்கு ஏற்கனவே ஒரு முதல் காதல் தோல்வியில் முடிந்து உள்ளதா? அதுவும்  கேரள பெண்ணா? மென்மையான காதல் படம் பிடிக்குமா? அட இதை விட ஒரு சூப்பர்  படம் உலகத்துல இல்லை. காதலை பத்தி இதுக்கு மேல மென்மையாக, கவிதைத்துவமாக  யாராலும் எடுக்க முடியாது. அவ்ளோ நுணுக்கமான எமோசனல் பிலிம்.

உங்களுக்கு காதல் தோல்வி வந்தது இல்லையா? மென்மையான(!!??) காதல்  பிடிக்காதா? உங்களுக்கு பொறுமையாக படம் பார்க்க முடியாதா? காமடி, சண்டை  வச்ச மசாலா படம் தான் புடிக்குமா? நீங்கள் அந்த ரகம் என்றால் தயவு செஞ்சு  போயிடாதீங்க.. இத விட பெரிய மொக்கை படம் உலகத்து இல்லைன்னு பீல்  பண்ணுவீங்க. படம் முழுக்க கடைசி வரைக்கும் சிம்பு திரிஷா பேசிகிட்டே  இருப்பாங்க. என்ன பேசறாங்க எதுக்கு பேசறாங்கன்னு உங்களுக்கு சத்தியமா  புரியாது.. சோ  வேணாம் விட்டுடுங்க.

முதலில் சொன்ன ரசிகர்களுக்கு படத்தை பற்றி மேலும்.. இது ஒரு இசை விருந்து..  ரஹ்மான் பின்னி இருக்கார். பின்னணி இசை மனதை வருடும் ரகம். கேமரா அருமையோ  அருமை.. அதுவும் முக்கியமாக கேரளாவில் எடுக்கப்பட்ட காட்சிகள்.. சிம்பு  படத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார்.. பெரிய பிளஸ் அது.. இந்த  படத்திற்கு பிறகு சிம்புவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்கும் என்பது  நிச்சயம். ஆனா த்ரிஷாவ பத்தி தான் என்ன சொல்றதுன்னு தெரியல.. ஒரு சீன்ல  நல்லா இருக்கு.. இன்னொரு சீன்ல நல்லாவே இருக்க மாட்டேங்குது.. ஒரு சீன்ல  நல்லா நடிக்கிது. ஆனா இன்னொரு சீன்ல ஓவரா நடிக்குது.. இத நான் சொன்னா யாரும் நம்ப  மாட்டேன்கிறாங்க. ஒரே  வார்த்தைல த்ரிஷா இந்த படத்துல சூப்பர்ங்கறாங்க!!!  கடவுளே….

படத்தோட கதை என்னனு கேட்டீங்கனா.. கார்த்திக்.. அதாவது சிலம்பரசன், மெகானிகல்  இன்ஜினியரிங் முடிச்சிட்டு உதவி சினிமா இயக்குனராக வேலை செய்ய முயற்சித்து  கொண்டு இருக்கும் வேளையில், ஜெஸ்ஸி.. அதாவது த்ரிஷாவை பார்கிறார்.  பார்த்தவுடன்.. லவ்.. டூயட்…. “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது  நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?.” படம் முழுக்க இதே வசனம் தான். த்ரிஷா  படத்துல ஒரு சராசரி லூசு பொண்ணு. கொஞ்சம் நேரம் சிம்புவ லவ் பண்றாங்க..  கொஞ்ச நேரம் கழிச்சு இது ஒத்து வராது.. நீ கெளம்பு காத்து வரட்டும்னு  மாத்தி மாதி பேசும் ரகம். சிம்புவே ஒரு கட்டத்துல “நீ கடைசில என்ன தான்  சொல்லவர? லவ் பண்றியா இல்லையான்னு” கோவப்படுவாப்ள. கடைசில மேடம் சிம்புவ  விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போய்டுவாங்க. சிம்பு அந்த பொண்ண நெனச்சி அவர் காதலை திரைக்கதை  வசனம் எழுதி ஒரு படத்த எடுப்பாரு.. படம் சூப்பர் டூபர் ஹிட்.  படத்தோட பேரு  “ஜெஸ்ஸி”.. படத்தோட கதைக்கரு “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது  நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”…

தியேட்டர் கமெண்ட்ஸ்:

(பொறுமை இழந்த) பக்கத்து இருக்கை அன்பர்:  “சேலத்துல எவ்ளோ படம் ஓடும் போது  நான் ஏன் இந்த படத்துக்கு வந்தேன்??!!!”