செல்வராகவனுடன் சில நிமிடங்கள், பல நினைவுகள்…

“மயக்கம் என்ன” திரைப்படம் வெளியான மறுநாள் நாள் அதன் ப்ரீமியர் ஷோவிற்கு சென்னை போர் பிரேம்ஸ் திரையரங்கம் சென்றிருந்தேன். வெளியான அன்றே சேலத்தில் அந்த திரைப்படத்தை பார்த்திருந்தாலும் இப்போது நான் செல்வதற்கான ஒரே காரணம் அதன் இயக்குனர் செல்வராகவன். என் வாழ்வில் நான் மிகவும் மேலும் »

இணையில்லா இணையம் – கோடை பண்பலையின் என் நேர்காணல்

21 டிசம்பர் 2011, அன்று காலை 10 முதல் 11 மணிவரை கொடைக்கானல் பண்பலையில் (Kodaikaanal FM) “இணையில்லா இணையம்” என்ற தலைப்பியில் நான் பேசிய வானவில் நேரலை நிகழ்ச்சியின் பதிவு இது. இருபத்தி இரண்டு மாவட்டங்களில்,  இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் கேட்கும் மேலும் »

கே.பி.என் ட்ராவல்ஸ் எனக்கு காண்பித்த உயிர் பயம்

கே.பி.என் ஆம்னி பஸ்கள் தொடர் விபத்தின் காரணமாக அதில் பிரயாணம் செய்வதை சமீபகாலாமாக தவிர்த்து வந்தேன். சென்ற மாதம் கூட ஒரு முக்கிய விஷயமாக சென்னை செல்வதற்கான அவசியம் ஏற்பட்டது. ரிட்டர்ன் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், புறப்படுவதற்கான டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் கடைசி மேலும் »

ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

  ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று மேலும் »

மற்றவர்களுக்கு உதவும் முன்னர் முதலில் இதை படிங்க

இன்று மாலை ஐந்து மணி இருக்கும். சேலம் மத்திய பேருந்து நிலையம் நுழைவாயிலை சிறிது தூரம்தாண்டி காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். சாலையை கடந்து எதிர்புறம் ஒரு கடைக்கு நான் செல்லவேண்டும். இரண்டு அடி முன்னே எடுத்து வைக்கும்போது ஒருவர்  என்னை அழைக்கும் மேலும் »

போகாதே போகாதே – தீபாவளி திரைப்பட வீடியோ பாடல் – என் குரலில்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதுகிறேன். தீபாவளி திரைப்படத்தில் வரும் “போகாதே போகாதே” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.. நான் அதிகம் கேட்பதும், அதிகம் முனுமுனுப்பதும் இந்த பாடல்தான்.. ஒரு ”ஆர்வத்தில்” நானே பாடி, பதிவு செய்து, கேட்டு மேலும் »

 

Category Archives: அறிவிப்பு

சிறப்பு விருந்தினராக சோனா கல்லூரியில்

 

IMG_2959

பிப்ரவரி 27 அன்று, சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ பிரிவில் தொடங்கப்பட இருந்த “மார்கடிங் க்ளப்” துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தேன். கூகிள் அட்வோர்ட்ஸ் (Google Adwords)துறையில் சேவை நிறுவனம் நடத்தி வருவதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட நிபுணன் என்பதாலும் அதை பற்றி எம்.பி.ஏ மாணவர்களிடம் சிறப்பு விரிவுரையாற்ற கேட்டிருந்தார்கள். தொழில்நுட்ப விஷயம் என்பதால் பிரசன்டேசன் இல்லாமல் பேசினால் மொக்கை போட்டுவிடும் என்பதால் கொஞ்சம் அதற்காக நேரம் ஒதுக்கி தயார் படுத்த வேண்டியிருந்தது.

ஆனால் நேரமினை காரணமாக ஒரு வாரம் கிடைத்தும் வழக்கம் போல் கடைசி நாள், கடைசி நிமிட பரபரப்பில் தான் அது தயாரானது. மாணவர்கள் என்பதால் கொஞ்சம் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எளிதாக புரியுமாறும், ஆவலை தூண்டுமாறும் கொஞ்சம் நகைச்சுவை  சிந்தனை அதில் புகுத்த வேண்டியிருந்தது. தவறினால் நாம் மட்டும் தனியாய் சுவரை பார்த்து பேசிக்கொண்டு இருக்க வேண்டி நேரிடும். மாணவனாய் இருக்கும்  கஷ்டம் மாணவனாய் இருந்தால் தான் தெரியும்.

ஆனால் எப்போதும் மாணவர்களிடம் கலந்துரையாடுவது மிகவும் எனர்ஜிடிக்காண அனுபவம். அதுமட்டும் இல்லமால் மிகவும் மனநிறைவானதும் கூட. நம்மால் ஒருவர் ஆர்வம் பெற்று அதை கற்றுணர்ந்து வாழ்க்கையில் பயனுற்றால் அந்த மனநிறைவு வேறு எதிலும் நிச்சயம் கிடைக்காது.

சுமார் ஆறு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆர்குட் பிரபலமாய் இருந்த நேரம். ஆத்தூரில் இருந்து ஒரு பள்ளி மாணவன் என்னை அதில் விடாமல் பலமுறை தொடர்பு கொண்டதாய் நினைவு. என்னை பற்றி இணையத்தில் அறிந்துக்கொண்டு ஏதோ ஒரு உந்துதலில் என்னை பார்க்க விரும்பினான். இணையத்தில் இப்படி எனக்கு அடிக்கடி பல புதுப்புது தொடர்புகள் வரும். அவ்வபோது தொலைப்பேசிகளும் கூட வரும்.

ஏதோ ஒரு காரணத்தால் அப்போது நான் முன் பின் தெரியாதவர்களை என்னை ஒரு போதும் சந்திக்க அனுமதித்ததில்லை. செய்துக்கொண்டு இருந்த முதல் வேலையை விட்டுவிட்டு அடுத்து பிழைக்க வழிதேடி இரவு பகலாய் வாழ்க்கை போராட்டம்  நிகழ்ந்துக்கொண்டு இருந்த காலக்கட்டம்.  அவர்களுக்கு என்னை பற்றி நிறைய தெரிந்திருந்தாலும் எனக்கு அவர்களை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அது போன்ற புதிய தொடர்புகளை நான் பெரிதாய் பொருட்படுத்தவில்லை. அப்போது நான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்ததும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

சரியாக நியாபகமில்லை. என் நினைவுகளை மீண்டும் கிளறிப்பார்த்தே இதை எழுதுகிறேன். ஒரு நாள் அந்த மாணவனின் அப்பா என்னை போனில் தொடர்பு கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் சேலம் வந்திருப்பதாகவும், தன் மகன் என்னை பற்றி நிறைய அவரிடம் சொல்லி இருப்பதாகவும், என்னை இன்று பார்த்தே தீரவேண்டும் என்று விரும்புவதாகவும் தன்மையுடன் கூறினார். அதுமட்டும் இல்லாமல் சேலம் அண்ணா பூங்காவில் எனக்காக காத்திருப்பதாகவும் கூறினார். தவிர்க்கமுடியாத அன்பின் அழைப்பு.

நான் அங்கு சென்று அவர்களை அன்று சந்தித்தது அவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சி அளித்தது என்பது மட்டும் இன்னும் எனக்கு  நியாபகம் இருக்கிறது. ஆனால் அன்று அவர்களிடம் என்ன பேசினேன், என்ன நடந்தது என்று சுத்தமாய் நினைவில்லை.  அதன் பிறகு இணயத்தில் அந்த மாணவன் என்னை ஓரிருமுறை தொடர்பு கொண்டான். அவ்வளவே!

பல வருடங்கள் கடந்துவிட்டது. திடீரென மூன்று நாட்களுக்கு முன்னர். அதாவது சோனா கல்லூரியில் சிறப்புரை ஆற்றிய இரண்டொரு நாளில் முகபுத்தகத்தில் அந்த பையனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

Conversation started Sunday
Shafi Ahamed
02/03/2014 13:00

I don’t think you remember me.. Me and my Dad met you once in Salem. I am a Google Certified professional working as a Digital Marketing Manager in XXX, Chennai

Because of you, I did this certification and completed successfully.

Thanks for it Sir

 

காலம் சில நேரங்களில் நம் சாதாரண செயல்களை கூட மிகவும் அர்த்தமுள்ளதாக்கி விடுகிறது. பொறுப்புகளை உணரச்செய்து விடுகிறது. “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏதேனும் உதவி தேவைபட்டால் கண்டிப்பாக என்னை தொடர்புகொள்ளவும். வாழ்த்துக்கள்!” என்று சுருக்கமாய் பதில் அளித்தேன். அந்த நாள் மிகுந்த மனநிறைவுடன் முடிந்தது!

 

20140227_170927

IMG_2960

IMG_2964

Share

இந்தியன் எக்ஸ்பிரஸில் என் வலைப்பூ

ஆகஸ்ட் 19, 2013. என்னையும், என் வலைப்பூவையும் “சேலம் பிளாக்கர்ஸ்” பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டு சிறப்பித்தமைக்கு “இந்தியன் எக்ஸ்பிரஸ்” தினசரிக்கும், அதன் கட்டுரை ஆசிரியர் உமைமா அவர்களுக்கும் என் நன்றிகள். மைல்ஸ் டூ கோ….

இ-பேப்பர் லிங்க் – http://epaper.newindianexpress.com/149080/The-New-Indian-Express-Dharmapuri/19-08-13#page/2/2

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து, அதை பெரிதாக்கியும் படிக்கலாம்.

Indian Express Article about Praveen suvadugal and Salem bloggers

Share

நான் ஏன் எழுதுவதில்லை!

writers world

புக்கெட் தீவு – தாய்லாந்து பயணக்கட்டுரையை வாசித்துவிட்டு நண்பர் திரு.சண்முகநாதன் பதிவு செய்த கருத்து இது.

///“இதயம் பேசுகிறது” திரு. மணியன் அவர்களின் பயணகட்டுரைகளுக்கு பிறகு சமீபத்தில் நான் மிகவும் ரசித்து படித்தது இந்த பயணகட்டுரைதான். சரளமான எழுத்து நடை, தகவல்கள் எல்லாமே சிறப்பாக உள்ளது. ஒரு சிறிய சந்தேகம்,,,இதற்க்கு முன்பு வெளிநாடு சென்றபோது (ஸ்ரீலங்கா) நிகழ்வுகளையும் இதுபோல் ஏன் எழுதவில்லை.. பாங்காக் – சிங்கபூருக்கு இது இன்றண்டவது பயணமா?

SK Shanmuganathan ////

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் ரசித்து படித்ததாய் கூறியிருப்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கான பதிலும் அதனூடே தோன்றிய சில எண்ணங்களையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  உண்மையில் இலங்கை பயணத்தை விரைவில் எழுதவேண்டும் என்று யோசித்து யோசித்தே மாதங்கள் பல ஓடிவிட்டது. தாஜ்மஹால் பயணத்தை பற்றி கூட எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். பயணக்கட்டுரை மட்டுமல்லாமல் இப்படி நான் எழுத நினைத்த மற்ற பல சுவாரசியமான விஷயங்கள், சம்பவங்கள் கடைசிவரை என்னுடைய நேரமின்மையால் எழுத முடியாமலே போய்விட்டது. (அதாவது எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல்.).

அதன் பிறகு தாய்லாந்தும் போய் வந்தாயிற்று. என் விகடனில் சில வாரங்கள் தொடர்ந்து எழுதக்கேட்டு இருந்தார்கள். தாய்லாந்து பயணக்கட்டுரையை அதில் எழுதும் யோசனை வந்தது. கமிட்செய்தால் நிச்சயம் எழுதிவிடலாம் என்று அந்த வாய்பிற்கு ஒத்துக்கொண்டேன்.  ஆனால் எதிர்பாராவிதமாக முதல் வாரத்திலேயே நான் எழுதிய “என் விகடன்” பதிப்பே நிறுத்தப்பட்டது. இது அநேகம் பேருக்கு தெரியும். சரி அதன் தொடர்ச்சியை என்னுடைய வலைப்பூவில் எழுதலாம் என்று இருந்தேன். இரண்டாம் பாகம் எழுதிய பிறகு சில கால இடைவேளை ஆனது. நடுவில் சில போன் கால்களும், ஈமெயில்களிலும் அதன் தொடர்ச்சிக்காக காத்திருப்பதாய் சிலர் சொன்னார்கள். அந்த உத்வேகத்தில் இப்போது மூன்றாம் பாகத்தை எழுதினேன்.

ஆரம்பத்தில் இருந்ததை போலில்லாமல் இப்போதுதான் எழுதுவதற்கு அதிக நேரம் செலவிட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கேட்டபடி நான் இரண்டாவது முறை எல்லாம் தாய்லாந்து செல்லவில்லை. (சிங்கப்பூர் சென்றதே இல்லை) நான் தாய்லாந்து சென்ற ஏழு நாட்களில் முதல் நான் வரையான அனுபவங்களை தான் இதுவரை எழுதி இருக்கிறேன். இன்னும் ஆறு நாட்கள் பாக்கி இருக்கிறது. ஆக எழுத எனக்கு நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு சாதரணமாகவே எழுதுவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. எழுதுவதற்கான சூழ்நிலையும் சரிவர அமைய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதாமல் நான் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்வேன்.

இந்த புக்கெட் தீவு கட்டுரை எழுதுவதற்கே எனக்கு பல மணி நேரம் பிடித்தது. புகைப்படங்களை, விடியோக்களை ஒருங்கிணைத்து, அந்த பயண அனுபவத்தை வாசிப்பவர்களுக்கு கிடைக்கப்பெறச் செய்வதில் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. .இந்த பயணக்கட்டுரை தொடர்ச்சியாக பத்திரிக்கையில் வந்திருந்தால் நிறைய பேருக்கு பிரயோஜனமாய் இருந்திருக்கும்.  நடை முறையில், முகப்புதகத்தில், இதை என்ன என்று கூட படித்துப்பார்ப்பதில் யாருக்கும் ஆர்வம் இருப்பதாய் தெரியவில்லை. “தமிழில் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது. கட்டுரை ரொம்ப நீளமாக இருக்கிறது, படிப்பதற்கு பொறுமை இல்லை” என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவர்களுக்கு அதன் பின்னால் இருப்பதற்கான மெனக்கெடல்கள் புரிவதில்லை.

என்னுடைய வலைப்பூவில் சில நூறுகளிலும், ஆயிரத்து சொச்சங்களிலும் வழக்கமாக என் பதிவுகள் படிக்கபட்டாலும் இலவசமாக கிடைப்பதலோ என்னவோ யாவரும் அவர்களுடைய கருத்துக்களை கூட பதிவு செய்ய முன்வருவதில்லை.  மெனக்கெடல்களை சில சமயம் அர்த்தமற்றதாக்கி விடுகிறார்கள். தாய்லாந்து கட்டுரையை முடித்தபிறகு என்னுடய சுவடுகள் வலைப்பூவில் எழுதுவதை குறைக்க யோசித்துக்கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அதிகம் மெனக்கெடப்போவதில்லை. அதற்காக நான் எழுதுவதையும் கைவிடப்போவதில்லை. அதனால் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் கூட நிச்சயம் என் எழுத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, பல பேரை சென்றடையச் செய்யும் தளத்தினை அது நோக்கி இருக்கும்.

Share

விகடனில் இருந்து வந்த முதல் காசோலை

சிறுவயது முதல் இதுவரை நான் தான் விகடனிற்கு பணம் கொடுத்து வந்திருக்கிறேன். முதல் முறை விகடனில் இருந்து எனக்கு பணம் வந்திருக்கிறது. முதன் முறை என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம் இது. அதுவும் 2013ஆம் ஆண்டின் முதல் நாளன்று!  விகடனிற்கு நன்றி!

. vikatan cheque

Share

ஒரே இரவில் பிரபலமான என் ‘ஆன்டிராய்ட்’ பிரசன்டேசன்

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ சங்கம், சேலம் கிளையில் நான் ஆன்ட்ராய்ட் பற்றி பேசியதை ஏற்கனவே எழுதி இருந்தேன். அதற்காக தயார் செய்த அந்த பவர்பாய்ன்ட் பிரசன்டேசனையும் அதில் பகிர்ந்திருந்தேன். அதை பகிருவதற்க்காக “ஸ்லைட் ஷேர்” என்னும் தளத்தில் அதை பதிவேற்றினேன்.  “ஸ்லைட் ஷேர்” என்பது பவர்பாய்ன்ட் பிரசன்டேசனை இணையத்தில் பகிருவதற்கு முதன்மையான இணையத்தளம்.உலகெங்கும் பலரால் பதிவேற்றப்பட்ட பல வகையான கோப்புகளை அங்கு காணலாம்.  நான் அதில் என்னுடையதை பதிவேற்றிய மறுநாள் காலை அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.  அந்த பிரசன்டேசன் முகப்புதகத்தில் பிரபலாமகி இருக்கிறது என்றும். அவர்களுடைய இணையதள முகப்பில் அதை பிரசுரித்து இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள். மகிழ்ச்சி!

my android ppt is hot on slideshare

Share