ஆன்டிராயிட் பற்றி என் உரை – சேலம் ஐ.எம்.ஏ வில்

Praveen talking about AndroidPraveen Talking in IMA Salem
Indian medical association SalemPraveen speech on Andorid

நேற்று மாலை (23/12/2012) சேலத்தில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் – லேடிஸ் கிளப்பில், ஆன்டிராயிட் பற்றி சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடம் உரையாற்றினேன்.  பெண் மருத்துவர்களும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் அதில் பங்குபெற்றனர். “Whatz App – The Power Of Android” என்ற தலைப்பில் ஸ்மார்ட்போன் பற்றியும், ஆன்டிராயிட் போன்களின் உபயோகங்கள் பற்றியும், அதில் தரவிறக்கி பயன்படுத்த வேண்டிய பல முக்கிய மென்பொருள்களையும் பற்றியும் எளியவகையில் புதியர்களுக்கு புரியும்படியும், ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் ஒரு பவர் பாய்ன்ட் பிரசன்டேசன் மூலம் விளக்கினேன்.

பங்குகொண்ட அனைவரும் மிகவும் உபயோகமாக இருந்ததாய் கருத்து தெரிவித்தனர். அதில் மிகுந்த ஆர்வமாய் ஆரம்பம் முதல் என்னிடம் கேள்விகள் கேட்ட ஒரு பெண் மருத்துவருக்கு (மன்னிக்கவும், பெயர் ஞாபகம் இல்லை) 8GB மெமரி கார்ட் பரிசளித்தேன். எனக்கும் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள துள்சி ரீடைல்ஸ் வவுச்சர் பரிசாக கொடுத்தார்கள். என்ன வாங்குவது என்று தெரியவில்லை, அம்மாவுடன் வவுச்சரையும், என்னுடைய கிரெடிட் கார்டையும் கொடுத்து ஏதேனும் வாங்கி வர அனுப்பவேண்டும்.

அந்த பவர் பாய்ன்ட் பிரசன்டேசன்  கீழே.

Share

5 Responses to ஆன்டிராயிட் பற்றி என் உரை – சேலம் ஐ.எம்.ஏ வில்

 1. salemdeva says:

  ஆன்ட்ராய்ட் பற்றி அறியாதவர்களுக்கும்,ஓரளவு அறிந்தவர்களுக்கும் பயனுள்ள பதிவு.

 2. dinesh kumar says:

  sir send ur ppt to my id dineshent3@gmail.com.i am beginner@

 3. கிரேட் போஸ்ட் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் அனுமதிக்க இயலுமா ?

  நன்றி

 4. prasnath says:

  sir, send u r ppt to my mail id sir prasanth.palani007@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)