
வழக்கத்துக்கு மாறான பாலா படம் இது. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என எடுக்கப்பட்ட படம். முதல் முறையாக வருடகணக்கில் இழுக்காமல் குறுகிய காலத்தில் பாலா எடுத்த படம். வித்யாசமான கதாபாத்திரத்தில் விஷால் நடித்த படம். இவை தான் “அவன் இவன்” திரைப்படத்தை பற்றி பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய விஷயம். ஆனால் படத்திலோ…
குறுகிய காலத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காக பாலா கதையை சுத்தமாக யோசிக்க மறந்துவிட்டார். கதையே இல்லாத போது எதை நோக்கியும் செல்லாத திரைக்கதையில் அவருக்கு பெரிதாய் மெனக்கெடல் தேவைப்படவில்லை. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கீழ் தரமான வசனங்களாலும், அவரின் முந்தைய திரைப்படத்தின் கதாபாத்திரங்களை ஒப்பேற்றியும் எடுத்திருப்பதை உணர முடிகிறது.
ஏற்றுக்கொள்ள முடியா லாஜிக் மீறல்கள், குமட்டும் அளவிற்கு அருவருப்பு, எரிச்சலூட்டும் காமெடிகள், தேவையற்ற காட்சி சொருகல்கள், நெளியச்செய்யும் வசனங்கள், அளவுக்கு மீறிய வன்முறை, மனதை பாதிக்கும் குரூரம்.. இவை அனைத்தும் தேசிய விருது பெற்ற பாலாவிடம் இருந்து!
பிதாமகன் சூர்யாவின் பிரதிபலிப்பே இதில் ஆர்யா. நந்தா லொடுக்கு பாண்டியின் வசனம் பேசும் அதே மாடுலேஷன் தான் இவருக்கு இதில். பிதாமகன் விக்ரமின் வாய்ஸ் மாடுலேசனையும் அவ்வப்போதும், பாடி லாங்குவேஜை ஆக்ரோஷமாகும் போதும் நினைவுபடுத்துகிறார் விஷால்.. நந்தா ராஜ்கிரனை சற்று கோமாளித்தனாக மாற்றியமைத்ததுதான் தான் ஜமீனாக ஜீ.எம்.குமார் ஏற்று நடித்த “ஐனஸ்” பாத்திரம். பிதாமகன் லைலா போலீஸ் கான்ஸ்டபிளாக ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் கதாபாத்திரம் இதில் ஒரு ஹீரோயின் நடித்தது.
பிதாமகன் சங்கீதா வாயில் வெற்றிலை பாக்கை பிடிங்கிவிட்டு, அதற்க்கு பதில் பீடியை சொருகி, கையில் குவாட்டரை திணித்து, கேட்பவர் காதில் ரத்தம் வரும் அளவிற்கு கெட்டவார்த்தை பேசுபவர் விஷாலின் அம்மாவாக நடித்த அம்பிகா. அம்பிகாவிற்கு போட்டி போடும் அளவிற்கு கெட்ட வார்த்தை தெரிந்த அம்மாதான் ஆர்யாவின் அம்மா. இவர்கள் இருவருக்கும் கணவனாக சேவை செய்யும் கதாபாத்திரத்தில் விஷாலின், ஆர்யாவின் ஒரு தந்தை. (குழப்புதா? அவருக்கு ரெண்டு பொண்டாட்டி)
படத்தின் கதை இது தான். மேலே இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் உரையாடுகிறார்கள். கூடவே இன்னும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களில் கலந்து கொள்கிறார்கள். கடைசியில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஜமீன்தார் ஐனஸ் குரூரமாக கொல்லப்படுகிறார். அவரை கொன்றவரை விஷாலும், ஆர்யாவும் பிடித்து வந்து ஐனசின் பிணத்தோடு எரியூட்டுகிறார்கள். இவ்வளோ தான்.
இத்தனை எரிச்சல்களையும் மீறி படத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்கிறது. அது விஷாலின் நடிப்பு.. நடிப்பு என்பதை விட அவரின் கடின உழைப்பு, மெனக்கெடல் என்றே சொல்லலாம். படத்தில் அவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. மாறுக்கண் கொண்ட அரவாணியாக நடிக்க நிச்சயம் தைரியம் வேண்டும். அவருக்கு நிச்சயம் இதில் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. படத்தின் சில பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. ஏனோ தெரியவில்லை யுவனின் பின்னணி இசையை இதில் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை. படத்தின் இன்னொரு சிறப்பம்சமே காமிரா தான். படம் முழுக்க பச்சை பசேல்.

என்னை கேட்டால் இந்த படத்தின் கதாநாயகன் நிச்சயம் ஜீ.எம் குமார் அவர்கள் தான். “நான் ஐனஸ் சொல்றேன்”… எனும் வசனம்… நான் மிகவும் ரசித்தது. படம் முழுக்க தன் ஆளுமையை செலுத்தி, அனைவரையும் சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து, அழ வைத்து, மனதை பதைபதைக்க வைத்து கடைச்யில் அவரை கொண்டாடச்செய்துவிட்டார். அதுவும் தைரியாமாக, முழு நிர்வாணமாக நடித்த காட்சியில்…. சத்தியமாக வார்த்தை இல்லை. ஹாட்ஸ் ஆப் டூ ஹிம்.
எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த ஒரு நகைச்சுவை… ஒரு கறிவிருந்திற்கு சென்ற விஷால் அவர் விரும்பும் போலீஸ் கான்ஸ்டபிள் பெண்ணின் எதிரில் தன் புல்லட்டை நிறுத்தி அதில் அமர்ந்து தண்ணி அடித்துக்கொண்டே அவரை லுக் விட்டுக்கொண்டு இருப்பார். வருவோர் அனைவரையும் வரவேற்பதில் பிசியாக இருக்கும் அந்த பெண் தன்னை விஷால் உற்று பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து அவரை பார்த்து கோபத்துடன் “என்ன வேண்டும்” என முறைப்பார். பதிலுக்கு விஷாலோ அதே ரொமாண்டிக் லுக்குடன் “சோறு எப்போ” என சைகையில் கேட்டவுடன் தியேட்டரே குலுங்கும் அளவிற்கு சிரித்து அடங்கியும், என் சப்தம் மட்டும் தனியே.. இதை பார்க்கும்போது டைமிங்கில் தான் உணர முடியும். இப்படி என்னால் சிரிப்பை நிறுத்த முடியா பல காமடி காட்சிகள் படத்தில் இருக்கிறது.
எல்லாம் படம் முடிய அரைமணி நேரம் வரை மட்டுமே. பிறகு படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்பட வில்லனாக வரும் நடிகர் ஆர்.கே.கதாபாத்திரமும். அவர் ஜி.எம்.குமார் அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து, கொன்று ஒரு பெரிய மரத்தில் கட்டி தூக்கில் தொங்கவிடும் காட்சி வரை பார்வையாளர் அனைவரின் மனமும் பதைபதைத்துவிடும். இந்த வில்லன் நடிகர் ஆர்.கே என்று பிறகு தெரிந்தவுடன் மிகவும் ஆச்சர்யபட்டு போனேன். அருமையான நடிப்பு. மிரட்டி இருக்கிறார். ஆனால் அத்தனை குரூரம் தேவையா என்று தெரியவில்லை. படத்தை கண்ட குழந்தைகளின் மனது நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்கும்.
மொத்தத்தில் வழக்கமாக கதை பின்னணியில் காணப்படும் அதே மலை பிரதேசம். வழக்கம் போல் நந்தா லொடுக்கு பாண்டியை பின்பற்றி, பிதாமகன் சூர்யாவை தொடர்ந்து அதே திருடர்களின் கதைக்களம். நகைச்சுவை படம் என்பதால் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க முயற்சித்து விட்டு கடைசி அரைமணி நேரத்தில் பாலாவின் வன்முறை, குரூரச்சிந்தனை, வழக்கம் போல் எட்டி பார்க்கிறது.
படம் முடியும் போது, சேதுவில் விக்ரம் நடந்து செல்வது போல், பிதாமகனிலும் விக்ரம் நடந்து செல்வது போல், நான் கடவுளில் ஆர்யா நடந்து செல்வது போல் இதில் ஆர்யாவும், விஷாலும் வழக்கம் போல் நடந்து செல்கிறார்கள். அப்படியே வழக்கம் போல் அவர்கள் நடந்தாவரே காட்சி திரையில் உறைகிறது. உடனே வழக்கம் போல் “A Film By Bala” என்று எழுத்து தோன்றுகிறது. உடனே வழக்கம் போல் திரையரங்கை விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். நீங்களும் வழக்கம் போல் இந்த விமர்சனத்தை படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவு செய்துவிடுங்கள்.

பிற்பாடு சேர்க்கப்பட்டது:
இன்னுமுமா இந்த உலகம் இதை நம்பிக்கிட்டு இருக்கு? போதும் நிறுதிக்கலாம். இது வெறும் கற்பனை கதை. எந்திரன் இங்கே கிடைக்கமாட்டான். அக்டோபர் ஒன்று முதல் தியேட்டரில் காணுங்கள்…
——————————————————————————————————————————————————————-
இன்னும் இரண்டு நாட்களே எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் இந்த சூழலில் சன் பிக்சர்ஸ்க்கு வந்திருக்கிறது ஒரு புது தலைவலி. கடைசிவரை இத்திரைப்படத்தின் துணுக்குச்செய்திகள் முதல் பட ஸ்டில்கள் வரை பொத்திப்பொத்தி வைத்திருந்த இயக்குனர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை பிரிண்ட் போடுவதில் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள் போலும். அமெரிக்காவின் ஒரு கட்டண திரைப்பட டவுன்லோட் இணையத்தளம் எந்திரன் திரைப்படத்தின் ஹெச்.டீ எனப்படும் ஹய் டெபனிஷன் (மிகத்துல்லிய) வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்ய அந்த இணையத்தில் பதிவு செய்து கிரிடிட் கார்டு மூலம் பத்து அமெரிக்கன் டாலர் (US$10) கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் ஓடும் அந்த படம் இணையத்தில் முதல் முறையாக அங்கு மட்டும் தான் வெளியிடபட்டு இருக்கிறது. இதை அமெரிக்க வாழ் நண்பர் ஒருவர் அந்த இணையத்தின் டவுன்லோட் முகவரியுடன் இன்று எனக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்து இருந்தார்.
எந்திரன் திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாகவே இணையத்தில் அதை வெளியிட்டதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சி. இதை நான் நம்ப மறுப்பதாக அவர் ஈமெயிலிற்கு பதில் அனுப்பினேன். பிறகு நண்பர் அதை பணம் கட்டி டவுன்லோட் செய்து வேறொரு இலவச கோப்புகள் போட்டு வைக்கும் ஒரு இணையத்தளத்தில் அதை இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் செய்து அந்த டவுன்லோட் முகவரியை மீண்டும் அனுப்பி வைத்து இருந்தார். ஆச்சர்யம் ஆனால் உண்மை. இதை எழுதும்போது ஒரு பகுதி பதிவிறக்கம் செய்து நான் பார்த்து முடித்தாயிற்று. படம் சூப்பர்…. சான்ஸ்சே இல்ல…. விஞ்ஞானி ரஜினியின் பெயர் வசீகரன். படத்தின் ஆரம்பத்திலேயே சிட்டி ரோபோ வந்து விடுகிறது. அதன் பிறகு அது செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. பாதி படம் தான் பார்க்க முடிந்தது. விமர்சனம் மிக விரைவில். இன்னொரு பகுதி பதிவிறக்கம் ஆகிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த டவுன்லோட் முகவரியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். யாரேனும் அதை கண்டுபிடித்து அகற்றுவதற்கு முன்னர் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். சங்கேத குறியீடு (password) போட்டால் தான் பதிவிறக்கம் செய்ய முடியும், மறந்து விடாதீர்கள்.
எந்திரன் திரைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய சொடுக்குங்கள்.
சங்கேத குறியீடு(Password): www.cpraveen.com
எந்திரன் பகுதி 1: Click Here
எந்திரன் பகுதி 2: Click Here
பின்குறிப்பு: திரைப்படங்களை திருட்டுத்தனமாக காண்பது தவறு என்ற கொள்கை உள்ளவர்கள் தயவு செய்து இதை சொடுக்க வேண்டாம். தியேட்டரில் வழக்கம் போல் டிக்கெட் எடுத்து பாருங்கள். எந்திரனை ஓசியில் காண விரும்புகிறவர்களுக்கு மட்டுமே இந்த பதிவிறக்கம். இந்த திருட்டு பதிவிறக்கத்தால் ஏற்படும் யாதொரு பிரச்சனைகளுக்கும், மனசோர்வுகளுக்கும் கம்பெனி பொறுப்பல்ல.
பிற்பாடு சேர்க்கப்பட்டது:
29-09-2010: 8:30 PM IST: நண்பர்களே….. இந்த பதிவின் மூலமும், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் இந்த பதிவை நீங்கள் பகிர்ந்து கொள்ளுவதாலும் எனக்கு யாதொரு “பண வரவும்”, “வியாபார நன்மையும்” இல்லை என்பதை இந்த பிற்சேர்க்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். எந்திரன் வீடியோவை நீங்கள் கண்டுகளித்து இன்புற்றதை உங்கள் நண்பர்களிடம் பகிர்த்து கொள்ளுவதே அதன் நோக்கம்.
September 28th, 2010 in
சினிமா | tags:
எந்திரன்,
சினிமா,
ரஜினி |
44 Comments

நீண்ட நாள் கழித்து ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படத்தை பார்த்த திருப்தி. “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில்” எதிர்பார்த்து, “தில்லாலங்கடியை” நம்பி சென்று கிடைக்காத திருப்தி இந்த படத்தில் கிடைத்தது என்றே சொல்லலாம். சண்டை இல்லை, அழுகாச்சி இல்லை, செண்டிமெண்ட் இல்லை. அட சோக சீன் வரும் இடத்தில கூட ரசிகர்களை சிரிக்க வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்ட இந்த திரைப்பட இயக்குனர் ராஜேஷை என்னவென்று சொல்ல! கடைசி சீன் வரை சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் வேறு வழி இல்லை.
ஆர்யா பல வருடங்களாக அரியர் எழுதிக்கொண்டு வீட்டுக்கு பாரமாய் வாழும் ஒரு உதவாக்கரை ஹீரோ. சந்தானம் முடி திருத்தும் நிலையத்தை நடத்தி ஆர்யாவின் இதர செலவுகளையும் கவனித்துக்கொள்ளும் “நண்பேன்டா”. ஆர்யாவின் அண்ணியின் தங்கை தான் இந்த நயன்தாரா. அண்ணியிடம் தான் காதலிக்கும் நயன்தாராவை பெண் கேட்க அவரோ உன்னை போன்ற உதாவாக்கரைக்கு எதை நம்பி என் தங்கையை கொடுப்பது என்று மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா வீட்டை விட்டு வெளியேறி ஒரு டுடோரியல் சென்டர் தொடங்கி நயன்தாராவை கைபிடிப்பதே கதை.
இதை கேட்டவுடன் ஏதோ சீரியசான கதை என்று பயந்து விடாதீர்கள். பெயருக்கு கூட சீரியசான சீன் படத்தில் இல்லை. அதே மாதிரி வழக்கம் போல தமிழ் படத்தை போல் ஒரே பாடலில் ஹீரோ வளர்ந்து விடவுமில்லை. நான் முதலில் சொன்ன மாதிரி சோக சீன் என்று நீங்கள் நினைத்தால் கூட சிரித்தே தொலைய வேண்டும். எடுத்துக்காட்டாக, வீட்டை விட்டு வெளியேறும் ஆர்யா மழையில் நனைந்தபடி தெருவில் நடக்கும் போது ஆர்யாவின் அண்ணன் வீட்டிலிருந்து அவரிடம் ஓடி வருகிறார். ஆர்யா அவரிடம் “நீ இப்படி எல்லாம் ஓடி வந்து கூப்ட்டாலும் நான் வருவதாய் இல்லை” என்று சொல்ல. அதற்கு அவர் அண்ணனோ “சீ.. உன்னை யாரு கூப்பிட வந்தா. மழை பேஞ்சிட்டு இருக்கு இதை சாக்கா வச்சி திரும்ப வீட்டுக்கு கீது வந்துடாத இந்தா குடை” என்று கொடுத்துவிட்டு செல்வார். இப்படியே படம் முழுவதும் சீரியசான காமடிகள்.

இந்த படத்தில் கதை கிடையாது, திரைக்கதை கிடையாது வெறும் டயலாக்கை நம்பியே எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு டயலாகிற்கும் ஒரு காமடி என்ற பார்முலாவில் எழுதியுள்ளார் இதன் இயக்குனர். ஆர்யா எது சொன்னாலும் அதற்கு டைமிங் காமடி கொடுத்துக்கொண்டே இருப்பார் சந்தானம். சந்தானம் தான் இந்த படத்தின் பிளஸ். ஆர்யா அவரிடம் “உனக்கு அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டப்போ ஒன்னு தெரியும்னு சொல்லி இருக்கணும் இல்லேன்னா தெரியலன்னு சொல்லி இருக்கணும். ஏன்டா தப்பான அர்த்தத்தை சொன்னே”னு கேட்க்க. அதற்கு சந்தானமோ “ஒரு வேலை பிரிட்டிஷ் இங்கிலிஸ்ல அவ பேசியிருப்பா” னு சொன்னப்ப சிரிப்ப அடக்க முடியல. இந்த மாதிரி ஒவ்வொரு டயலாக்கும் படத்துல நகைச்சுவை தான்.
நயன்தாரா இந்த படத்துடன் தன் கலை உலக சேவையை நிறுத்திக்கொள்ளலாம். அவருடைய முகமும் ஹேர் ஸ்டைலும் பார்க்க சகிக்கவில்லை. யுவனின் இரண்டு பாடல்கள் மட்டுமே இதில் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையில் அவருக்கு சரியான வேலை இல்லை படத்தில். பழைய திரைப்படத்தின் பாடல்களையே நிறைய இடத்தில நகைச்சுவைக்காக பின்னணியில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் இயக்குனரான ராஜேஷின் முதல் படமான சிவா மனசுல சக்தியை விட இதில் காமடி நிரம்பி வழிகிறது. அந்த படத்தில் நடித்த ஜீவா கூட இதில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து மனசை அள்ளுகிறார். அதுவும் சிவா மனசுல சக்தி படத்தில் வருவது போன்ற அதே வாய்ஸ் மொடுலேசனில் நயன்தாராவின் அப்பாவை பார்த்து “மாமா அப்டியே ஒரு கோட்டர் சொல்லேன்”னு சொல்லி ஸ்கோர் பண்ணிவிடுகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் கண்டிப்பாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களால் மட்டுமே ரசிக்க முடியும்.
இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த நடிகர் முரளியின் இதயம் இன்று துடிப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த செய்தியை இன்று கேள்விப்பட்ட உடனேயே சில நிமிடங்கள் உறைந்து போனேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது. ஏனென்று யோசித்து பார்க்கிறேன். முரளியை தீவிர ரசிகனாக இதுவரை நான் இருந்திருக்கவில்லை. அவரது காலங்களின் நான் சினிமாக்களை பார்த்து வளர்ந்திருக்கவில்லை. ஆனாலும் அவரை நான் ரசித்திருக்கிறேன்.
புது வசந்தம், இதயம் போன்ற படங்களின் பாடல்கள் மூலமே அவரை சிறு வயதில் எனக்கு பரிட்சயம் ஆனதாக ஒரு ஞாபகம். சினிமா, டிவி என்பதை அறிந்துக்கொண்டு இருந்த மிகச்சிறிய வயதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் படங்களை பார்க்க ஆரம்பம் செய்த என்னுடைய பள்ளி பருவத்திலே “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதுவே எனக்கு தெரிந்து நான் விரும்பிப்பார்த்த முரளியின் முதல் திரைப்படம். அத்திரைப்படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஆறாம் வகுப்பு நான் பயின்று கொண்டிருந்திருக்கலாம். அப்போதே அதை மனப்பாடமாக பாடிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது கூட அந்த பாடல்களை கேட்க்கும்போது அந்த காலகட்டங்கள் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றன.
அதே நேரத்தில் அவர் சூர்யாவிடம் சேர்ந்து ஒரு படம் நடித்தார். சில வருடங்களில் வெற்றிக்கொடி கட்டு போன்ற வெற்றி படங்களின் படங்களில் நடித்தார். கடல் பூக்கள் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கினார். பிறகு நான் தீவிரமாக சினிமா பார்க்க ஆரம்பம் செய்த வயதில் அவரது படங்கள் காணமல் போயின. வெளிவந்த சில படங்களும் சரியாக போகவில்லை. சுந்தரா ட்ராவல்ஸ் படம் வந்த போது அந்த படத்தில் நடித்த பஸ்ஸையும், எலியையும் அருகில் இருந்த தியேட்டருக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதுவே நான் முரளி நடித்து பார்த்த கடைசி படம். முரளி அமைதியான, சாந்தமான, இளமையான தோற்றமுடையவர் என்பதால் கண்டிப்பாக யாருக்கும் அவரை பிடிக்காமல் இருக்காது. நன்றாக கவனித்து பாருங்கள் அவரது குரல் கூட மிகவும் மென்மையானது. அது மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களை போலில்லாமல் எந்த ஒரு கிசி கிசுவிலும் வராத நடிகராகவே கடைசி வரை இருந்தார்.
இக்கால சினிமா ரசிகர்கள் அவரை ரசித்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏன் என் வயதையொத்தவர்கள் கூட சேர்த்துதான். அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் வர நேரம் சரியாக அமையா விடிலும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் அவரை மறந்திருக்க வாய்ப்பு இல்லை. நடிகர் மோகன் எப்படி எல்லா திரைப்படங்களிலும் மைக்கோடு வந்து மைக் மோகன் ஆனாரோ. அது போல் எல்லா திரைப்படங்களிலும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவனாக வருவார் முரளி. மோகன் மைக் எடுத்து மேடை ஏறினால் படம் ஹிட் என்ற செண்டிமென்ட் அப்போது இருந்தது. அது போல் முரளி புத்தகம் எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றால் படம் கண்டிப்பாக ஹிட்.
நான் இப்போதும் உறுதியாக கூறுவேன், முரளி காலத்து நடிகர்கள் யாரேனும் இப்போது கல்லூரி மாணவனாக நடிக்க முடியுமா? கற்பனை செய்து பாருங்கள். பார்த்திபன்? பிரபு? பாண்டியராஜன்? சுரேஷ்?. ஏன் அதற்கடுத்த கட்ட நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் கூட மீண்டும் கல்லூரி மாணவர்களாக நடித்தால் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இன்றும் முரளியின் தோற்றமும் குரலும்அதற்கு பொருந்துவதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.
நான் இப்போது கூறப்போவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காதல் கொண்டேன் திரைப்படம் வந்த தருணத்தில் டைரக்டர் செல்வராகவனின் பேட்டி ஒன்றை படித்தேன். அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு பதிலாக ஏற்கனவே இரண்டு நடிகர்கள் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது என்று கூறி இருந்தார். மாஸ்டர் டிகிரி படிக்க அதன் நாயகன் சென்னை வருவதாக அமைத்து இருந்த அந்த கதை பிறகு தனுஷிற்காக சிறிது கதை மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த இரண்டு நடிகர்களில் செல்வராகவன் தேர்வு செய்து இருந்த ஒரு நடிகர் தான் முரளி. அது மட்டும் உண்மையாக இருந்து படம் வெளிவந்து இருந்திருந்தால்? முரளி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு இருப்பார்.
முரளியின் இழப்பு கண்டிப்பாக சோகத்தின் உச்சம் தான். எங்கள் குடும்பத்தாருக்கும் தான் அதன் பாதிப்பு இருக்கிறது.. முரளியை நாங்கள் நேரில் கண்டிராவிட்டாலும், பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவருடையமறைவு எங்களை உறையவைத்ததற்க்கு காரணம் இருக்கிறது. சுமார் தொன்னூறுகளில் இருந்த அவருடைய தோற்றம் அப்படியே அச்சு அசலாக என்னுடைய தாய் மாமாவை போலிருந்தது. முளியின் முகம் எனக்கு அப்போதுதான் பரிட்சயமான சமயம் என்பதால் முரளியை பார்த்தால் என்னுடைய மாமாவை பார்ப்பது போலவே இருக்கும். எதிர்பாராவிதாமாக அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போனார். இருவருக்கும் தோற்றத்தை தவிர மேலும் சிறு ஒற்றுமைகள் இருப்பதை இப்போது உணர்கிறேன்.
இருவரும் இளம் வயதிலேயே இறந்தனர். என் மாமா இறக்கும் போது அவருடைய வயது முப்பத்தி ஆறு, முரளிக்கோ நாற்பத்தி ஆறு. இருவருக்கும் மகனும் மகளும் உள்ளனர். தன்னுடைய மகனின் வளர்ச்சியையும், பெண்ணின் திருமணத்தை காணக்கிடைக்காமலும் மரணம் எய்திவிட்டார்கள் இருவரும். அவர்களுடைய இறப்புசெய்தியை அறிவித்தது சென்னையில் ஒரு மருத்துவமனையில் தான். முரளிக்கு திரையுலகமே திரண்டு வந்து இருந்தது, இவருக்கோ ஒட்டு மொத்த நெய்வேலி லிக்னயிட் கார்பரேசன் ஊழியர்களும், முக்கிய அதிகாரிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
என் மாமா இறந்த இந்த இடைப்பட்ட இரண்டு வருடத்தில் முரளியை காணும் போது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மாமாவை நேரில் காண்பது போன்ற உணர்வு. அவர் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதை போன்ற ஒரு தற்காலிக தோற்றத்தை அது உருவாக்கியது. தான் மிகவும் நேசித்தவரும், ரத்த சம்பந்தமானவரும் இறந்து பிறகு அவர் உருவத்தை உடையவர்களை நேரில் பார்க்க வாய்ப்புக்கிட்டியவர்களை கேட்டுப்பாருங்கள் அது எவ்வளவு பெரிய விஷயமென்று.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட விஜய் டீவியில் வரும் காபி வித் அனு நிகழ்ச்சியில் தன் மகன் ஆதர்வாவுடன் வந்திருந்தார் முரளி. எங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தொலைப்பேசியின் மூலம் தகவல் பரிமாறப்பட்டு அனைவரின் இல்லத்தின் வரவேற்பறையிலும் அந்த நிகழ்ச்சியே ஓடியது. அனைவருக்கும் எங்கள் மாமாவை நீண்ட நாட்கள் கழித்து நேரில் கண்டதாக ஒரு உணர்வு அப்போது. இனிமேல் இவர்களுக்கு அதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்.
நானெழுதிய மற்ற சிறுகவிதைகளை போலில்லாமல் இதில் தமிழ் சினிமா பெயர்கள் முடிவடையுமாறு ஒரு சிறு முயற்சி. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எரிமலையை கூட
பனிமலையாக மாற்றும்
உன் பார்வையை தரிசிக்க
பாதையில் காத்திருக்கிறேன்
நீ வருவாயென.
——————————————————————————————-
அந்திசாயும் ஒரு மாலையிலே,
நாம் காதல் புரிந்த வேளையிலே,
முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
நினைத்துக்கூட பார்த்ததில்லை,
உன்னை முதலாய்
சந்தித்த வேளையிலே.
——————————————————————————————-
ஆக்ராவில் இல்லையென்றாலும்,
என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
நானும்
ஷாஜஹான்.
——————————————————————————————-
காதல் கொண்டேன்.
கவிஞனானேன்.
——————————————————————————————-
காதல் கொண்டேன்
கண்ணீர கொண்டேன்.
——————————————————————————————-
பார்வைகளில் நீயெனை உரசிட
பற்றியெரியும் காதல் தீ
அனையும் முன்,
உன்னைக்கொடு என்னை தருவேன்.
——————————————————————————————-
நந்தவனத்தில் தொலைந்த
பூக்களெல்லாம் புடைசூழ
நடக்கிறதோர்
பூமகள் ஊர்வலம்.
——————————————————————————————-

மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
தனிமை என்னை பாடாய் படுத்த,
உன் ஈரச்சேலை என்னுள் தீயை மூட்ட,
முத்தமிட்டு அதை நீ அனைத்ததை
மறக்கமாட்டேனென்
நினைவிருக்கும் வரை.
——————————————————————————————-
புகைப்பதை நிறுத்தச்சொல்லி
நீ என்னுடன் பகை கொண்டபோது
உடனே நானதை நிறுத்தினேனே,
அது உனக்கு உணர்த்தியிருக்கும்
நான் செய்தது
காதலுக்கு மரியாதை.
——————————————————————————————-
நான் மறக்கச்சொல்லியும்
மறுக்கிறதென் இதயம்
துடிப்பதற்கு,
பூவே உனக்காக.
——————————————————————————————-
வழக்கமான இரவென்றாலும்,
வழக்கமான ஆசைகளோடு,
இன்றும் போர்வைக்குள் பதுங்கினேன்.
என்னை நனவில் காதலிக்காத நீ,
கனவிலாவது காதலிக்க வருவாய்
என்ற ஆசையுடன் கண்களை மூடி
நினைத்தேன் வந்தாய்.
——————————————————————————————-
ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
என்றும் இருப்பேன்
ப்ரியமுடன்.
——————————————————————————————-
கஷ்டமான காலங்களில்
மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
உன் புன்னகையை
பார்த்தாலே பரவசம்.
——————————————————————————————-

பிடியின்றி விழுந்த குழி
புதைக்குழி என்றறிந்தும்
உன் இதயக்குழி என்பதால்
எழுந்துவர மனமில்லையென்
ப்ரியமானவளே.
——————————————————————————————-
என் உயிரைக் கொல்லாமல்
உடலில் மின்சாரம் பாய்கிறது நீயென்
கன்னத்தில் முத்தமிட்டால்.
——————————————————————————————-
கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத,
காலில் விழுந்தும் கிடைக்காத,
காதலியின் முத்தம்
எதிர்பாராமல் கிடைத்தால்
துள்ளாத மனமும் துள்ளும்.
——————————————————————————————-
ஆண்களின் இதயங்கள் எரிக்கப்பட
பெட்ரோல் தேவையில்லை.
தீ கூட தேவையில்லை.
பெண்களின்
பார்வை ஒன்றே போதுமே.
——————————————————————————————-
தோற்றம்: http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-three

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு… படம் முடியும் வரை இருக்கையில் நெளியாமல் அமர வைக்கும் நேர்த்தியான திரைக்கதை. நரசிம்மராவ் போன்றோரரையும் சிரிக்கவைத்து விடும் குபீர் வசனங்கள். கை இல்லாதவர்களையும் அடிக்கடி கைதட்ட வைத்துவிடும் காட்சி அமைப்புகள். காதில் ரத்தம் வரவழைக்காத பாடல்கள் பின்னணி இசை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் களவாணி திரைப்படத்தை. கதை ஒன்றும் தமிழுக்கு புதிதில்லை. திரைக்கதை, காட்சி அமைப்புகளே இந்த படத்திற்கு பக்க பலம். இந்த படத்தில் விமலின் நடிப்பு அருமை. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் அவருக்கு கெடைச்சா போதும். சிம்பு, தனுஷ் வரிசையில அவரும் வந்துடுவாரு. அந்த ஹீரோயின் பொண்ணு நெஜமாவே இஸ்கூல் பொண்ணா? யூனிபார்ம்ல பள்ளிக்கூட மாணவி போல இருக்கு. சீலை கட்டுனா டீச்சர் கணக்கா இருக்கு? எப்புடி இருந்தா என்ன? நல்லா இருக்குல்ல அவ்ளோதான்.
படத்தோட முக்கிய கதாபாத்திரமே கஞ்சா கருப்புதான். பருத்தி வீரனுக்கு அப்புறம் கண்டிப்பா இந்த படத்துலதான் அவருக்கு காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆகி இருக்கு. அவர் வருகிற காட்சி எல்லாம் சிரிச்சே தொலையனும் வேற வழியே இல்ல. அதுவும் அந்த “பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான்” காமடி இருக்கே. தியேட்டர்ல போயி கண்டிப்பா பாருங்க.இன்னும் நிறைய இருக்கு.. படத்தோட கிளிமாக்ஸ்ல கூட எதிர்பாராத காமெடி இருக்கு. படம் முடிஞ்ச ஒடனே வெளியே போய்டாதீங்க அவசர குடுக்கை மக்களே. படம் முடிந்து எழுத்து ஒடும் போதும் அதில் சிரிப்பை ஒளித்து வைத்துள்ளார் இயக்குனர். குடுத்த காசுக்கு கடைசி வரை சிரிச்சிட்டு வாங்க. நான் வெளிவே வந்து பார்கிங்கில் வண்டி எடுக்கும் வரை சிரிப்பை நிறுத்த முடியவில்லை.
இந்த படத்துக்கு ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, போதுமான விளம்பரம் இல்லை.. “கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும்” அப்படின்னு இந்த மாதிரி நல்ல படத்துக்கு விளம்பரம் கெடச்சி இருந்தா இந்த வருடத்தின் சிறந்த படம் இதுவே. வசூல் சாதனை புரிந்திருக்கும் படமும் இதுவாக தான் இருந்து இருக்கும். இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகுது ஆனால் இந்த விமர்சனத்தை எழுத முடியவில்லை. எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. . ஏனென்றால் கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதிட்டு இந்த மாதிரி நல்ல படத்தை எழுதாமல் விட மனம் வரவில்லை. நம்மால் ஆன விளம்பரமாக இது இருக்கட்டும். ஒருத்தர் கூடவா இத படிச்சிட்டு இந்த படம் பார்க்க போக மாட்டாங்க. இந்த மாதிரி படத்திற்கு மக்களே வெற்றிபெற உதவ வேண்டும்.. நல்லா இருந்தா நீங்களும் நாலு பேருகிட்ட சொல்லுங்க.. என்ன சொல்றீங்க?
இதோ போனஸாக களவாணி ரிங்டோன் – இலவச டவுன்லோட்.

பெரியோர்களே, தாய்மார்களே இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சுறானு ஒரு உலக தமிழ் சினிமா வந்திருக்கிறது. தெரியாம அந்த தியேட்டர் பக்கம் கூட போயிடாதீங்க. நாலு நாளைக்கு தூங்க மாட்டீங்க. நானும் விஜய் விசிறியாக தான் இருந்தேன். அது இஸ்கூல் காலேஜு படிக்கும் போது. இப்போ மட்டும் அந்த உலக நடிகனை நேரில் பார்த்தேன் அவ்ளோதான். ஒரு மனசாட்சியே இல்லாம ஒரு படத்தை எடுத்து இருக்காங்க. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு மிஸ்டர் விஜய். கடந்த ஐந்து வருடமா ஒரே படத்தை அதுவும் உங்க படத்தையே ரீமேக் பண்ணிட்டு இருக்கீங்களே. இது உங்களுக்கே நியாயமா?
ஒரு வருசமா ரூம் போட்டு யோசிச்சு எழுதின சுறா கதை என்னன்னா, விஜய் ஒரு மீனவ குப்பத்துக்கே தலைவர். அவரை கேட்காமே அந்த ஊர்ல குழந்தை கூட சூ சூ போகாது. அவ்ளோ பவர்புல் ஆள் அவரு. அதுக்கு கைமாறாக அங்க இருக்க ஆயிரம் குடும்பங்களுக்கும் வீடு கட்டி கொடுக்கறது தான் அவருடைய வாழ்க்கை லட்சியம். இதுல வில்லன் அந்த குப்பத்த அழித்து தீம் பார்க் கட்ட திட்டம் போடுறார். அதை தடுத்து, வில்லன் பணத்தையே லவுட்டி குப்பத்தில் வீடு கட்டுகிறார் விஜய். இடையில் ஐந்து சண்டை, ஐந்து பாட்டு… பாட்டுக்கு முன்னாடி தமன்னா வந்து அட்டண்டன்சு போட்டுடுவாங்க. அப்பேற்பட்ட சென்சிடிவ் கதையை தன்னுடைய ஐம்பதாவது படத்திற்கு தேர்ந்தெடுத்த விஜயின் வியூகம் புல்லரிக்கிறது. நான் இயக்குனரை குறை கூற மாட்டேன். விஜய்கிட்ட கால்ஷீட் வாங்கனும்னா எப்படிப்பட்ட கதை பண்ணனும்னு அவருக்கு தெரிஞ்சி இருக்கு. ஆக மொத்தம் ரெண்டு பெரும் சேர்ந்து பொது மக்களை மொக்க போட்டுட்டாங்க.
வடிவேலு அப்போ அப்போ தனி ட்ராக்ல வந்து காமெடி பண்ண ட்ரை பண்ணி எரிச்சல் பண்றார். ரெண்டு வாட்டி சிரிக்கலாம் அவ்ளோதான். தமன்னா பாவம் படத்துல வேலையே இல்ல. விஜய் படத்துல எந்த நடிகைக்கு வேலை இருக்கும். விஜய் பேசறதுக்கே இரண்டரை மணி நேரம் போதவில்லை அப்படி இருக்க தமன்னா என்ன பண்ணுவாங்க? தமன்னாவினுடைய தற்கொலை முயற்சி அறுவையோ அறுவை. விஜய் தம்பி படம் முழுக்க பஞ்ச் டயலாக்கு பேசியே கொல்றார். பேசற ஸ்டைல் இருக்கே சான்சே இல்ல. கொடுமை. அப்போ மழை மட்டும் பேயவில்லை என்றால் பாதி படத்துலேயே எந்திரிச்சு வந்து இருப்பேன்.
படத்துல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் வில்லன் தான். சூப்பரா நடிச்சிட்டு இருந்தார் விஜயை பார்க்கும் வரை. ஆனால் அவர்கிட்ட பஞ்ச் டயலாக்கு பேசி பேசியே அவரையும் ஒரு வழி பண்ணிட்டார் நம்ம விஜய். யாரை தான் பேச விடறார் படத்துல. ஒரு சாம்பில் “உன் வலைல மாட்ட நான் ஒன்னும் இறா இல்லடா. சுறா….”. இந்த படத்துக்கு செலவு பண்ணின தண்ட காசுக்கு மேற்கூறிய அந்த ரெண்டு ஆயிட்டதையும் ஒரு நல்ல ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுவிட்டு போயிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த படத்துக்கு போனிங்கன்னு கேட்பது எனக்கு புரியுது. இன்டர்நெட்ல ஒரு ப்ளாகுல விமர்சனம் படிச்சிட்டு ஏமாந்துட்டேன். இனிமேல் விஜய் படத்த பார்க்கப்போறதா இல்லை.அப்படியே பார்க்கறதா இருந்தால் விஜய் ரசிகர் அல்லாத பிளாக் தேடி கண்டு பிடித்து படித்து விட்டு முடிவு செய்வேன்.
எப்புடி நடிச்சாலும் தியேட்டருல கூட்டம் கூடுதுன்னு ஒரு காரணத்துக்காக விஜய் பண்ற அட்டகாசம் தாங்கல. அவரிடம் யாரும் உலக சினிமாவை யாரும் எதிர்பாக்கல ஜஸ்ட் ஒரு உருப்படியான சினிமா கொடுத்து ரசிகர்களை முட்டாளாக்காமல் இருக்க வேண்டாமா? கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள். சுறாவை டிஸ்கவரி சேனலில் பாருங்க தப்பே இல்லை. அட கடலுக்கு சென்று நேரில் கூட பாருங்கள் ஒன்னும் பண்ணாது. ஆனால் தியேட்டர்ல பார்த்துடாதீங்க அது பெரிய ரிஸ்க். விஜய் அவருடைய ஒரு ரசிகரை இழக்க வேண்டியது வரும்.

நேற்று இரவு பையா திரைப்படம் இரவு காட்சிக்கு கே.எஸ். பிக் சினிமாஸ் தியேட்டருக்கு சென்றிருந்தோம். கவுண்டர் அருகே டிக்கெட் வாங்க சென்ற போது செக்யூரிட்டி “சார், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்”..(பார்க்க - http://twitter.com/praveenc85/status/11547200473).. ஸ்ஸ்ஸ்ஸ்… “அடடா, நான் ஏற்கனவே வெப் சைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டேங்க. கவுண்டர்ல அத காட்டி டிக்கெட் வாங்க வந்தேன். ஏ.சி என்ன ஆச்சு?”, நான். அதற்க்கு அவர் “அது என்னவோ தெரியல சார், புது படம் வந்தா ஏ.சி வேலை செய்ய மாட்டேங்குது!!! சொல்லாம டிக்கெட் கொடுத்துட்டா, உள்ள வந்து சத்தம் போடுவாங்க. அதான் என்ன கவுண்டர்ட நிக்க வச்சிட்டாங்க.” என்று சொல்லிவிட்டு எனக்கு பின்னாடி நின்ற ஒரு பெண்மணியிடம் “மேடம், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்” என்று தன் பணியை செய்துக்கொண்டு இருந்தார். சரி என்ன பண்றது? வாங்கி கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே நுழையவும், திரையில் எழுத்து போடவும் சரியாக இருந்தது.

சரி.. படத்துக்கு வருவோம். பையா எப்படி? உலக சினிமாவா? தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படமா? ஒரு சிறந்த இலக்கிய படைப்பா? என்று நீங்கள் கேள்வி கேட்டால். சத்தியமாக கிடையாது. பக்கா மசாலா படம். பீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம். நல்லா தான இருக்கும்? சரி கதை என்னன்னு கேடீங்கனா… “…………”… “………..”.. “….” அதெல்லாம் கேட்க கூடாது. தயாரிப்பாளரே டைரக்டர் லிங்குசாமியிடம் கேட்காத கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கலாமா? நோ.. நோ. கேட்டாலும் யாருக்கும் தெரியாது. படத்த பார்த்து என்ஜாய் பண்ணிட்டு அவங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்கனும். என்ஜோய்மென்ட் காரண்டீட். படத்தில் அந்த அளவிற்கு செலவு இல்லை. அனால் ஒவ்வொரு காட்சியிலும் லிங்குசாமியின் சிரத்தை தெரிகிறது. வெற்றி ஒன்றே அவரின் குறிக்கோள்.
படம் இப்படி தான் ஆரமிக்கிறது. பெருசா ஏதும் பில்டப் கொடுக்காமல், மிக சாதாரணமாக இன்ட்ரோ கொடுக்கிறார்கள் கார்த்திக்கிற்கு. நண்பர்கள் அனைவரும் பஸ்ஸில் வெயிட் பண்ண, பஸ்சு கிளம்பும்போது தான் வருவேன்னு வெயிட் பண்ணி ஓடி வந்து ஏறுகிறார் கார்த்திக். கார்திக்கை பார்த்தவுடன் தியட்டரில் ஒரே
விசில் கைதட்டல். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த பெயர். மூன்றாவது படத்திலேயே நிறைய ரசிகர்களை சம்பாதித்து விட்டார். நல்ல வேலை அதுக்காக பெருசா பில்ட் அப் ஏதும் கொடுத்து ஒரு இமேஜ் உருவாக்க முயற்சி பண்ணல. பஸ்சில் இருந்து இறங்கும் போது தமன்னாவை பார்க்கிறார் கார்த்திக். பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது!!! ஒரு மாதிரி முழிக்கிறார் தமன்னாவை பார்த்து. கார்த்திக் ரியாக்சன் சூப்பர். அதன் பின் வரும் காட்சிகளில் அவர் உள்ளே நுழையும் இடம் எல்லாம் தமன்னா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். படம் மிக பொறுமையாக தொடக்கத்தில் நகர்கிறது. கார்த்திக்கின் காரில் தமன்னா ஏறியவுடன் தான் படம் டாப் கியரில் சீறுகிறது. அனல் பறக்கிறது.
படத்தில் முக்கியமாக மூன்றே கதாபாத்திரம் தான். ஒன்று கார்த்திக், மற்றொன்று தமன்னா அப்புறம் மூன்றாவதாக முக்கிய பாத்திரத்தில் அந்த கருப்பு கார். சும்மா பூந்து விளையாடி இருக்கு படத்துல. படம் பார்த்தா தான் உங்களுக்கு தெரியும். கார் நடிச்சி இருக்குன்னு நான் சொன்னா நம்பவா போறீங்க? படம் முழுக்க வரும். பெங்களூர் டு மும்பை தமன்னாவும் கார்த்திக்கும் காரிலேயே போவாங்க. அது தான் முழு படமும். (சாரி கஷ்டப்பட்டு வருச கணக்குல லிங்கு அண்ட் டீம் யோசிச்சு உருவாக்கின கதைய நான் தெரியாம சொல்லிட்டேன்!).
கார்த்திக்கை பத்தி சொல்லியே ஆகணும். எப்ப பார்த்தாலும் சூவிங்கம் மென்று கொண்டிருக்கிறார் மனுஷன். இந்த படத்துல அவர் பேர் சிவா. ரன் ஞாபகம் இருக்கா? அதுல மாதவன் பெரும் சிவா தான். லிங்குசாமியின் செண்டிமெண்ட் போலும். சரி இருந்துட்டு போவுது.. நல்ல தான் இருக்கு. கார்த்திக் பயங்கர மான்லியா இருக்கார். இத நான் சொல்லியே ஆகணும். பருத்தி வீரனில் வெறும் அர டிராயர், ஏத்தி கட்டின லுங்கி. ஆயிரத்தில் ஒருவனில் ஒரே ஒரு லங்கோடு. ஆனா இதுல நல்ல முன்னேற்றம். கலர் கலரா டீ-ஷர்ட், ஜீன்ஸ். தப்பிச்சிட்டார். அனாயசமா சிரிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். சண்டை போடுகிறார். நிறைய இடத்தில சூர்யா மாதிரியே இருக்கார். கண்டிப்பா குரல் ஒற்றுமை. அதுவும் முக்கியமா தமன்னாவை பாம்பேல அவங்க சொந்தகாரங்க வீட்ல விட்டுட்டு கார்ல போகும் போது அவர் நண்பரிடம் போனில் சோகத்தின் உச்சத்தில் குரலை கரகரவென பேசுவார். சான்சே இல்ல. சூர்யா தான் டப்பிங் கொடுதிருக்கார்னு தோணும். இது தவிக்க இயலாது. சொந்த தம்பி. அதனால் உயமான சூர்யானு வேணா இவற சொல்லலாம்.
பொதுவாக எனக்கு சண்டை காட்சிகள் பிடிக்காது. அதுவும் முக்கியமா விஜய் படத்துல வர மாதிரி. பறந்து பறந்து.. பாய்ஞ்சு பாய்ஞ்சு பத்து பேர ஒரே அடில அடிக்கிறது எரிச்சலா இருக்கும். ஆனா இந்த படத்துல சண்டை காட்சிகள் உண்மையாலுமே பிரமிக்க வைக்கிறது. ஒரே அடி. ஆனா பவர்புல் அடி. எதிரி காலி. அப்படியே சுருண்டு விழுந்துடறாங்க. ஜஸ்ட சாம்பிள். ஒருத்தர தூக்கி, மடில வச்சி, அப்படியே மடக்கி விசுருகிறார் கார்த்திக். பயங்கரமா இருக்கு திரையில் பார்பதற்கு. (நான் இன்னொரு முறை இந்த படத்திற்கு போனாலும் ஆச்சர்யமில்லை) இந்த படத்திற்கு பிறகு கண்டிப்பா அவருக்குனு தனி இடம் முன்னணி நடிகர்கள் வரிசையில் தமிழ் சினிமாவில் இருக்கு. சூர்யா ஜாக்கிரதை!.
நயன்தாராவுக்கு படமில்லை. திரிசாவிக்கு மார்கெட் இல்லை. அசின் மும்பைக்கு போய்விட்டு விளம்பர படத்திலாவது பிசியாக இருக்கிறார். அதானாலேயே இப்போது தமன்னாவை தவிர தமிழிற்கு வேறு ஆள் இல்லை. அவங்க காட்டுல “அடடா மழைடா அட மழைடா”. சூர்யா, கார்த்திக், விஜய்ன்னு அவங்க மார்கெட் சர்ருன்னு எரிகிட்டு இருக்கு. இந்த படத்தில் கார்த்திக்கிற்கு சரியான ஜோடி. முதல் படத்தில் முத்தழகு கிடைக்கவில்லை. இரண்டாம் படத்தில் ஜோடியே இல்லை. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி விட்டார். தமன்னா இந்த படத்துல பிரிட்ஜ்ல இருந்த எடுத்த ஆப்ளில் பலம் போல ப்ரெஷா இருக்காங்க.(உவமை எப்புடி?). ஒரு பக்கம் கார்த்திக் சண்டைக்காட்சிகளில் வில்லன்களை தோலுரித்துக் கொண்டிருக்கையில். லிங்குசாமி பாடல் காட்சிகளில் தமன்னாவை துகிலுரித்து விட்டு இருக்கிறார். அதனால தானோ என்னோவோ தியேட்டர்ல ஏ.சி வேலை செய்யாட்டி கூட யாருக்கும் வியர்க்கவில்லை போலும். ஹி ஹீ.
அப்புறம் அயன் படத்துல தமன்னாவுக்கு அண்ணனாக ஒருத்தர் வருவாரே – ஜெகன். அவர் இதிலேயும் கார்த்திக்கிற்கு நண்பனாக வருகிறார். அதுல சூர்யாவிற்கு நண்பர். தமன்னா ஹீரோயின். இதுலேயும் தமன்னாதான் ஹீரோயின், கார்த்திக்கிற்கு நண்பர். நல்ல செண்டிமெண்ட். வெற்றி சூத்திரமோ? ஆனா இதுல பட்டாசு கேளப்பிட்டார். அவர் வர சீன்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது. அதுவும் மாறு வேஷத்துல பைக்கில போகும் போது கார்த்திக் கண்ணுல மாட்டிக்குவாரே.. நல்ல காமடி. வடிவேல் நடிச்சி இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்னு நெனைக்கிறேன். ஆனால் இவரும் அருமையான நடிப்பு.

படத்துல யுவன் ஷங்கர் ராஜாவை பற்றி நான் சொல்லாமல் விட்டுவிட்டால் நான் இந்த விமர்சனத்தை எழுதுவதில் அர்த்தமே இல்லை. பாடல்களிர்க்காக தான் இரண்டாம் நாளே படத்திற்கு சென்றேன். நீண்ட நாட்களிற்கு பிறகு தன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார் யூவன். ஒவ்வொரு பாடல்களும் தேன். முக்கியமாக. “என் காதல் சொல்ல நேரமில்லை”, “அடா மழைடா அட மழைடா”, “துளி துளி துளி மழையாய் வந்தாளே”. சூப்பர். என்னோட பேவரெட். நடு இரவில் இப்போது இந்த விமர்சனம் எழுதும் போதும் பின்னணியில் அந்த பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், “பூங்காற்றே பூங்காற்றே” பாடல் முதன் முதலாக கேட்டதில் இருந்து எனக்கு பஸ்சிலோ காரிலோ பயணம் செய்யும் போது பின்னணியில் கேட்க்கும் பாடல் போல தோன்றியது. படத்தில் தமன்னாவும் கார்த்திக்கும் காரில் போகும் போது பின்னணயில் அதன் பாடல் வரும். யூவன் இஸ் ஜீனியஸ். ஆனால் படம் வருவதற்கு முன்பு இந்த பாடல்கள் அனைத்தும் காரணமே இல்லாமல் எனக்கு சண்டைக்கோழியையும் விஷால் முகத்தையும் இத்தனை நாள் எனக்கு ஞாபகபடுத்திகொண்டு இருந்தன. இந்த படம் பார்த்த பிறகும் தான் எனக்கு விஷால் முகம் மறைத்து கார்த்திக் முகம் வந்தது!!! நா.முத்துக்குமார் எழுத்துக்களை பாராட்ட வார்த்தை இல்லை. ஆனால் மனிதர் “தேவதை”, “ஏஞ்சல்” போன்ற வார்த்தைகளை மறக்கமால் தன் காதல் பாடல்களில் சேர்த்து விடுகிறார். பட் வீ லைக் இட்.
படம் நிறைய இடத்துல சண்டைகோழி, கில்லி, ரன் போன்ற படங்களை ஞாபக படுத்துகிறது. இரவில் கார் துரத்தும் காட்சி ஒன்று வரும். அது பகலில் இருட்டை போன்ற தோற்றத்தை உருவாக்கும் லென்ஸ் போட்டு எடுத்து இருப்பார்கள். அது இல்லை பிரச்சனை. அனால் அந்த கார்களில் ஒளிரும் ஹெட் லைட் கிராபிக்ஸ் வேலை என்று நன்றாக தெரிகிறது. ரோடு ராஷ் கம்ப்யூட்டர் கேமில் நைட் மோடில் விளையாடுவதை போல இருந்தது. இந்த மாதிரி படங்களில் படத்தில் லாஜிக் என்று ஒன்றை எக்காரணம் கொண்டு பார்க்க கூடாது என்று நமக்கு புரிகிறது. நிறைய இடத்தில பிரச்சனை வரும். ஆனால் அதையும் மீறி படம் ஜெட் வேகத்தில் பயணம் செய்வதால் படம் முடிவதே தெரியவில்லை.காரில் இந்த படத்திற்கு காரில் போய்விட்டு வருபவர் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதை. வரும் போது கண்டிப்பாக உங்களை அறியாமல் கார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். சர்ர் என்று U டர்ன் போட வைக்க தோணும்…
நீங்கள் இந்த படத்தை பார்த்து விட்டீர்களா? இல்லை பார்க்க போகிறீர்களா? சும்மா உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். அட நம்புங்க காசுலாம் இல்ல. ப்ரீ தான்
கடந்த வெள்ளிக்கிழமை இரவு காட்சிக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு சென்றேன். படம் பார்த்துட்டு வரும்போது எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சிது.. கௌதம் மேனன் காலேஜ் படிச்சிட்டு சினிமா இயக்குனராக முயற்சித்த வேளையில் ஒரு ஓமன பெண்ணை “வீட்டை தாண்டி வருவாயா” ன்னு கேட்டு இருக்கார். மேடம் வரவில்லை. அந்த பீலிங்க்ஸ் தான் இப்போ “விண்ணைத்தாண்டி வருவாயா” வாக வெள்ளித்திரையில்… இது முழுக்க முழுக்க கௌதம் மேனனின் சுயசரிதம். சுயசரிதம்னு சொல்றத விட அந்த பொண்ணு இந்த படத்த பார்த்து பீல் பண்ணனும்ன்னு எடுத்திருப்பார் போல.. “நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்? நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?” படம் முழுக்க ஒரே பீலிங்குதான். எது எப்படியோ… அவர் ஒரிஜினல் மனைவி அவர பார்த்து வடிவேலு தோனியில “ஏய்… என்ன பீ…லிங்கு? ராஸ்கல்”ன்னு கேட்காமல் இருந்தால் சரி.. அவ்வளோ உருகி இருக்கார் மனுஷன்….

சரி படத்துக்கு வருவோம்…. படம் நல்லா இருக்கா இல்லையா? ஓடுமா ஓடாதா? பதில்.. படம் “ஓடும் ஆனா ஓடாது” ரகம். எப்படின்னு கேட்கறீங்களா?… உங்களுக்கு ஏற்கனவே ஒரு முதல் காதல் தோல்வியில் முடிந்து உள்ளதா? அதுவும் கேரள பெண்ணா? மென்மையான காதல் படம் பிடிக்குமா? அட இதை விட ஒரு சூப்பர் படம் உலகத்துல இல்லை. காதலை பத்தி இதுக்கு மேல மென்மையாக, கவிதைத்துவமாக யாராலும் எடுக்க முடியாது. அவ்ளோ நுணுக்கமான எமோசனல் பிலிம்.
உங்களுக்கு காதல் தோல்வி வந்தது இல்லையா? மென்மையான(!!??) காதல் பிடிக்காதா? உங்களுக்கு பொறுமையாக படம் பார்க்க முடியாதா? காமடி, சண்டை வச்ச மசாலா படம் தான் புடிக்குமா? நீங்கள் அந்த ரகம் என்றால் தயவு செஞ்சு போயிடாதீங்க.. இத விட பெரிய மொக்கை படம் உலகத்து இல்லைன்னு பீல் பண்ணுவீங்க. படம் முழுக்க கடைசி வரைக்கும் சிம்பு திரிஷா பேசிகிட்டே இருப்பாங்க. என்ன பேசறாங்க எதுக்கு பேசறாங்கன்னு உங்களுக்கு சத்தியமா புரியாது.. சோ வேணாம் விட்டுடுங்க.
முதலில் சொன்ன ரசிகர்களுக்கு படத்தை பற்றி மேலும்.. இது ஒரு இசை விருந்து.. ரஹ்மான் பின்னி இருக்கார். பின்னணி இசை மனதை வருடும் ரகம். கேமரா அருமையோ அருமை.. அதுவும் முக்கியமாக கேரளாவில் எடுக்கப்பட்ட காட்சிகள்.. சிம்பு படத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார்.. பெரிய பிளஸ் அது.. இந்த படத்திற்கு பிறகு சிம்புவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்கும் என்பது நிச்சயம். ஆனா த்ரிஷாவ பத்தி தான் என்ன சொல்றதுன்னு தெரியல.. ஒரு சீன்ல நல்லா இருக்கு.. இன்னொரு சீன்ல நல்லாவே இருக்க மாட்டேங்குது.. ஒரு சீன்ல நல்லா நடிக்கிது. ஆனா இன்னொரு சீன்ல ஓவரா நடிக்குது.. இத நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேன்கிறாங்க. ஒரே வார்த்தைல த்ரிஷா இந்த படத்துல சூப்பர்ங்கறாங்க!!! கடவுளே….
படத்தோட கதை என்னனு கேட்டீங்கனா.. கார்த்திக்.. அதாவது சிலம்பரசன், மெகானிகல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு உதவி சினிமா இயக்குனராக வேலை செய்ய முயற்சித்து கொண்டு இருக்கும் வேளையில், ஜெஸ்ஸி.. அதாவது த்ரிஷாவை பார்கிறார். பார்த்தவுடன்.. லவ்.. டூயட்…. “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?.” படம் முழுக்க இதே வசனம் தான். த்ரிஷா படத்துல ஒரு சராசரி லூசு பொண்ணு. கொஞ்சம் நேரம் சிம்புவ லவ் பண்றாங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு இது ஒத்து வராது.. நீ கெளம்பு காத்து வரட்டும்னு மாத்தி மாதி பேசும் ரகம். சிம்புவே ஒரு கட்டத்துல “நீ கடைசில என்ன தான் சொல்லவர? லவ் பண்றியா இல்லையான்னு” கோவப்படுவாப்ள. கடைசில மேடம் சிம்புவ விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போய்டுவாங்க. சிம்பு அந்த பொண்ண நெனச்சி அவர் காதலை திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்த எடுப்பாரு.. படம் சூப்பர் டூபர் ஹிட். படத்தோட பேரு “ஜெஸ்ஸி”.. படத்தோட கதைக்கரு “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”…
தியேட்டர் கமெண்ட்ஸ்:
(பொறுமை இழந்த) பக்கத்து இருக்கை அன்பர்: “சேலத்துல எவ்ளோ படம் ஓடும் போது நான் ஏன் இந்த படத்துக்கு வந்தேன்??!!!”
நேற்று அயன் திரைப்படம் இரவு காட்சிக்கு சென்று இருந்தேன் (தோம்). எதிர்பாராவிதமாக நாங்கள் செல்வதற்குள் பத்து நிமிடம் படம் ஓடி இருந்தது.. இருந்தால் என்ன? தமிழ் படத்தின் கதை புரியாமலா போய்விடபோகிறது என்று பார்க்க ஆரமித்தேன். வழக்கம் போல் சூர்யா சூப்பர்.. மேலும் மேலும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது நடிப்பும், அழகும்.. அட.. தமனாவும் தான்பா நடிக்க ஆரம்பித்துவிட்டது….
“நெஞ்சே… நெஞ்சே…” , ”விழி மூடி யோசித்தால்..” பாடலும் அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக இருக்கும்.. ஆனால் ”நெஞ்சே… நெஞ்சே…” பாடல் படமாக்கப்பட்ட அந்த ஆப்ரிக்க பாலைவனம் ஹிந்தி கஜினியில் ஏற்கனவே பார்த்து விட்டதால் புதுமையாக தெரியவில்லை. ஹிந்தி கஜினியை விட தமிழில் தான் அற்புதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். என்னுடைய மொபைல் ஹலோ டுயுன் இப்போது அந்த பாடல் தான் .. பின்னணி இசையும் அருமை.. ஹாரிஸ் ஜெயராஜை பத்தி சொல்லவா வேண்டும்?

சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு கண்டிப்பாக அனைவரையும் பிரமிக்கவைக்கும்.. ஆப்ரிக்கா அந்த மலைப்பாதை காட்சிகளும், மலேசியா கார் துரத்தும் காட்சிகளும் கண்டிப்பாக தமிழுக்கு புதுசு.. கதை என்னவென்றால், நம்ம சூர்யா ஒரு ஹைடெக் கடத்தல்காரன்.. பிரபு நம்ம சூர்யாவுக்கு பாஸ். விஜய் தொலைக்காட்சிகளில் வரும் அந்த நபர்(மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை) சூர்யாவின் நண்பர். தமன்னா அவரின் தங்கை. தொழில் போட்டியில் பிரபு சாகிறார்.. சூர்யா வில்லனை பழி வாங்குகிறார்.. கடத்தலை விட்டு விட்டு திருந்துகிறார். கடைசியில் கஸ்டம்ஸ் ஆபிசர் ஆகிறார்.. மறக்காமல் தமன்னாவை கைபுடிக்கிறார்.
உலகில் இருக்கும் அணைத்து பெரிய கடதல்கார்களும் பிரபுவுக்கு பழக்கம்.. ஆப்ரிக்கா மலைபகுதிகளில் வாழும் ”மம்போ” என்ற யாரும் நெருங்க முடியாத ஒரு அதிபயங்கர கடத்தல்காரராக காண்பிக்கபடுபவர்கூட நம்ம பிரபுவுக்கு பழக்கமாம். பிரபுவை பார்த்தால் அப்படி கண்டிப்பாக தெரியாது.. முன்னொரு காலத்தில் பெரிய தாதாவாக இருந்தாரம். படத்தில் பிளாஷ் பாக் காட்சிகள் கூட இல்லாததால் நம்ம பிரபு ஒரு காமெடி தாதாவாகவே வலம் வருகிறார்.. அவருக்கு கைபுல்லையாக நம்ம சூர்யா தம்பி.. அங்கேயே எனக்கு படத்தின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது..

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் சூர்யா, ஆப்பிள் ஐ போன் வைத்து இருக்கிறார், ஆப்பிள் மாக் லேப்டாப் வைத்து இருக்கிறார் , நினைத்தால் வெளிநாடு கிளம்புகிறார், கூகிள் இணையத்தளத்தில் கடத்தல் செய்யும் டெக்னிக்குகளை கண்டுபிடிக்கிறார்.. எல்லாம் பண்றார்.. அப்புறம் எதற்கு பிரபுவுக்கு கைபுல்லையாக? பெருசா காரணம் இல்லையே? சூர்யாவின் நண்பராக வரும் அந்த கதாபாத்திரம் எரிச்சலோ எரிச்சல்.. (நல்ல வேலை பாதியிலேயே அவர் இறந்து விடுவதால் பார்வையாளர்கள் தப்பித்து கொண்டார்கள்).. தங்கை தமன்னா சூர்யாவை காதலிக்க வைக்க அவர் பேசும் வசனங்கள், செயல்கள் அருவருப்பு. கிரி படத்தில் வடிவேலு சொல்லும் ”பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது” ரகம்.. அது காமெடி..ஆனா இது அருவருப்பு.. தங்கச்சிய பத்தி எந்த அண்ணன் இப்படி பேசுவான்? அது மட்டும் இல்லாமல்.. படத்தில் ரசிக்க முடியாத பல இரட்டை அர்த்த வசனங்கள் நம்ம சூர்யா பேசுகிறார். கொடுமை..
அருமையான கதைக்களம், நடிப்பில் மெருகேறிய சூர்யா, அழகிய தமன்னா, பிரமிக்க வைக்கும் சண்டைகாட்சிகள், தமிழுக்கு புதிய வெளிநாட்டு படபிடிப்பு இடங்கள்…. இவை அனைத்தும் இருந்தும் திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனங்கள் இல்லையே டைரக்டர் ஆனந்த் சார். இப்படி துட்ட விரயம் பண்ணிடீன்களே? பேசாமல் நம்ம எழுத்தாளர் சுபா எழுதிய இந்த கதையை நாவலாக பிரசுரம் செய்து இருந்தால்.. ஏ.வீ .எம் மின் பணம் மிச்சம். நீங்க என்ன சொல்றீங்க? படம் நல்ல இருக்கா, நல்லா இல்லையா? உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது எதை வேண்டுமானாலும் கீழே பதிவு செய்யவும்.
இதோ மேலும் சில பேர் அயன் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு இருக்காங்க.
ஆனா அந்த அளவுக்கு படம் மோசமில்லைன்னு நினைக்கிறன்..
April 5th, 2009 in
சினிமா | tags:
அயன்,
சினிமா,
சூர்யா |
4 Comments