Posts Tagged என் காதல் சொல்ல நேரமில்லை

    என் காதல் சொல்ல நேரமில்லை

    பையா திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் “என் காதல் சொல்ல நேரமில்லை”. மிகவும் அருமையான மெலோடி. எத்தனை முறை எழுதினாலும் நா.முத்துக்குமாருக்கு காதல் பற்றி எழுதுவதில் சலிக்கவில்லை போலும். இந்த பாடலின் மிகப்பெரிய பலம் அவருடைய எழுத்துக்கள் தான். தற்போது வந்த பாடல்களில் மிகவும் ரசிக்கப்படும் பாடல் இது. சில பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். அந்த வரிசையில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன் அதுவும்  திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டபோது ஆனால் இந்த பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடலில் என்ன விசேஷம் என்றால் யார் வேண்டுமானாலும் அதை சுலபமாக பாடும் படி இசையமைத்து இருப்பார். மிகவும் பிடித்த பாடலை யாராலும் முணுமுணுக்காமல் இருக்க முடியாது. இதோ நானும் முயற்சி செய்து இருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்.

    [xr_video id=”563a010c50404866a029e338630bdf7d” size=”md”]

    இதோ போனசாக அதன் பாடல் வரிகளும்.

    என் காதல் சொல்ல நேரமில்லை..
    உன் காதல் சொல்ல தேவையில்லை..
    நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
    உண்மை மறைத்தாலும் மறையாதடி…

    உன் கையில் சேர ஏக்கமில்லை…
    உன் தோளில் சாய ஆசையில்லை…
    நீ போன பின்பு சோகமில்லை…
    என்று பொய் சொல்ல தெரியாதடி…

    உன் அழகாலே அழகாலே
    என் வெயில்காலம் அது மழைக்காலம்…

    உன் கனவாலே உன் கனவாலே
    மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்….

    காற்றோடு கைவீசி நீ பேசினால்
    என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
    வயதோடும் மனதோடும் சொல்லாமலே
    சில எண்ணங்கள் வலைவீசுதே..

    காதல் வந்தாலே கண்ணோடுதான்
    கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?

    கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..
    இந்த விளையாட்டை ரசித்தேனடி..
    உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும்
    அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்க்கும்

    ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..
    இந்த நிமிடங்கள் நீளட்டுமே..
    வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..
    இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

    யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்…
    என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…

    சிறு பிள்ளையென என்தன் இமைகளது
    உன்னை கண்டாலே குதிக்கின்றதே…

    என் அதிகாலை என் அதிகாலை
    உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..

    என் அந்திமாலை என் அந்திமாலை
    உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்…