பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் – களவாணி விமர்சனம்

kalavaani review

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு… படம் முடியும் வரை இருக்கையில் நெளியாமல் அமர வைக்கும் நேர்த்தியான திரைக்கதை. நரசிம்மராவ் போன்றோரரையும் சிரிக்கவைத்து விடும்  குபீர் வசனங்கள். கை இல்லாதவர்களையும்  அடிக்கடி கைதட்ட வைத்துவிடும் காட்சி அமைப்புகள். காதில் ரத்தம் வரவழைக்காத  பாடல்கள் பின்னணி இசை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் களவாணி திரைப்படத்தை. கதை ஒன்றும் தமிழுக்கு புதிதில்லை. திரைக்கதை, காட்சி அமைப்புகளே இந்த படத்திற்கு பக்க பலம். இந்த படத்தில் விமலின் நடிப்பு அருமை. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் அவருக்கு கெடைச்சா போதும். சிம்பு, தனுஷ் வரிசையில அவரும் வந்துடுவாரு. அந்த ஹீரோயின் பொண்ணு நெஜமாவே இஸ்கூல் பொண்ணா?  யூனிபார்ம்ல பள்ளிக்கூட மாணவி போல இருக்கு. சீலை கட்டுனா டீச்சர் கணக்கா இருக்கு? எப்புடி இருந்தா என்ன? நல்லா இருக்குல்ல  அவ்ளோதான்.

படத்தோட முக்கிய கதாபாத்திரமே கஞ்சா கருப்புதான். பருத்தி வீரனுக்கு அப்புறம் கண்டிப்பா இந்த படத்துலதான் அவருக்கு காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆகி இருக்கு.  அவர் வருகிற காட்சி எல்லாம் சிரிச்சே தொலையனும் வேற வழியே இல்ல. அதுவும் அந்த “பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான்” காமடி இருக்கே. தியேட்டர்ல போயி கண்டிப்பா பாருங்க.இன்னும் நிறைய இருக்கு.. படத்தோட கிளிமாக்ஸ்ல கூட எதிர்பாராத காமெடி இருக்கு. படம் முடிஞ்ச ஒடனே வெளியே போய்டாதீங்க அவசர குடுக்கை மக்களே. படம் முடிந்து எழுத்து ஒடும் போதும் அதில் சிரிப்பை ஒளித்து வைத்துள்ளார் இயக்குனர். குடுத்த காசுக்கு கடைசி வரை சிரிச்சிட்டு வாங்க. நான் வெளிவே வந்து பார்கிங்கில் வண்டி எடுக்கும் வரை சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

இந்த படத்துக்கு ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, போதுமான விளம்பரம் இல்லை.. “கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும்” அப்படின்னு இந்த மாதிரி நல்ல படத்துக்கு விளம்பரம் கெடச்சி  இருந்தா இந்த வருடத்தின் சிறந்த படம் இதுவே. வசூல் சாதனை புரிந்திருக்கும் படமும் இதுவாக தான் இருந்து இருக்கும். இந்த  படம் பார்த்து ஒரு வாரம் ஆகுது ஆனால் இந்த விமர்சனத்தை எழுத முடியவில்லை. எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. . ஏனென்றால் கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதிட்டு இந்த மாதிரி நல்ல படத்தை எழுதாமல் விட மனம் வரவில்லை.  நம்மால் ஆன விளம்பரமாக இது  இருக்கட்டும். ஒருத்தர் கூடவா இத படிச்சிட்டு இந்த படம் பார்க்க போக மாட்டாங்க. இந்த மாதிரி படத்திற்கு மக்களே வெற்றிபெற உதவ வேண்டும்.. நல்லா இருந்தா நீங்களும் நாலு பேருகிட்ட சொல்லுங்க.. என்ன சொல்றீங்க?

இதோ போனஸாக களவாணி ரிங்டோன் – இலவச டவுன்லோட்.

Share

10 Responses to பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் – களவாணி விமர்சனம்

 1. Logesh says:

  நல்ல விமர்சனம்..
  \\இந்த படத்துக்கு ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, போதுமான விளம்பரம் இல்லை\\
  கண்டிப்பா, என்ன பண்றது சில நல்ல படங்களை மக்கள் இப்படியும் மிஸ் பண்றாங்க..

  நான் கூட இப்படி ஒரு போஸ்ட் பண்ணனும்ன்னு நினைச்சேன்.. கிரகம்.. மூடே வர மாகிறது..

 2. நன்றி லோகேஷ்… சீக்கிரம் மூடுக்கு வாங்க..

 3. PMSatheesh says:

  yaaa,after reading this i will decide to go to the film..nanba why u didnt write for Madharasapatinam……..
  such a outstanding movie in tamil cinema,after a long days i enjoyed…..
  comedy,songs,screenplay,picturization,background music as well as picture all charecters its a nice journey one who didnt miss to see it…….i hope u tooooooo………

 4. மதராசபட்டினம் இன்னும் பார்க்கவில்லை நண்பா. சீக்கிரம் பார்ப்பேன் என நம்புகிறேன். இந்த விமர்சனம் உன்னை களவாணி படத்தை காண தூண்டியதை கண்டு மகிழ்கிறேன். அதற்கு நன்றி. பார்த்துவிட்டு உன்னுடைய பின்னூட்டத்தை பதிவிக்கவும்.

 5. karthi says:

  yes… the movie is really awesome…. u also have to watch madrasapattinam!!!!!!

 6. Shafi says:

  நல்ல படம். நாடோடியை விட காமெடி அதிகம். But in most of the recent movies which involved village subject has killed either hero, heroin or hero’s friend. When seeing the film my expectation too the same as i thought heroin will drink poison. But the way the climax was really amazing…. Hats off to the director for making the expectation unexpected…….

 7. s.kalaikumar says:

  நல்ல படம்

 8. manavalan says:

  நல்ல விமர்சனம் பிரவீன் now only i see your site its too nice ..

 9. Selvakumar M says:

  ஸுப்பர் படம்.

 10. MATHI says:

  NALA PADAM THAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)