Archive for the என் பாடல்கள் Category

    பெண்கள் என்றால் பொய்யா? – என் குரலில்

    பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா? – என் குரலில் “நீ தானே என் பொன்வசந்தம்” படத்தின் பாடல். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலை நீக்கிவிட்டு என் குரலில் பாடியிருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்…

    Dedicating this to all Broken Hearts 😛

    View in HD for Good Visual & Audio Quality!

    Song: Pengal Endral Poiyaa.. Poithaana…
    Movie: Neethane En Ponvasantham
    Music: Ilayaraja

    பாடல்: பெண்கள் என்றால் பொய்யா.. பொய்தானா…
    படம்: நீ தானே என் பொன் வசந்தம்.
    இசை: இளையராஜா.

    சாய்ந்து சாய்ந்து. நீ பார்க்கும் போது. – முழுப்பாடலும் என் குரலில்

    மென்மையாக, மனதை வருடுகிற எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது … இப்போது இதில் முழுப்பாடலையும் நானே பாடி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாடலையும், விஷுவலையும் மெருகேற்றி இருக்கிறேன். வீடியோவுடன்.. பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்… Hope it wont hurt your ears! 🙂

    View in HD for Good Visual & Audio Quality!

    பாடல்: சாய்ந்து சாய்ந்து.. நீ பார்க்கும் போது…

    படம்: நீ தானே என் பொன்வசந்தம்.
    இசை: இளையராஜா.Song: Saindhu Saindhu.. Nee Paarkum Pothu
    Movie: Neethane En Ponvasantham
    Music: Ilayaraja

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது – என் குரலில்

    இளையராஜா இசையில் “நீ தானே என் பொன் வசந்தம்” படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது” பாடல்.. இதோ என் குரலில் ஒரு முயற்சி…

    இன்னும் பாடல் வெளியீடு நிகழாத சூழலில், இணையத்தில் ஒரு நிமிட டீசராக வெளியாகி உள்ள இந்த பாடல் ஏனோ  கடந்த இரண்டு நாட்களாக என் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்துக்கொண்டு கொண்டு இருக்கிறது.  என் குரலில் முடிந்தவரை அதை ஜஸ்டிபை செய்து பாடி இருக்கிறேன் என எண்ணுகிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

     

     

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது….
    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
    சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…
    விழியோடு விழி பேச…
    விரலோடு விரல் பேச…
    அடடா வேறு என்ன பேச….

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
    சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…

    Movie: Nee Thaane En Pon Vasantham
    Song: Saindhu Saindhu Nee Paarkum Pothu
    Music: Ilayaraja

    கனவே கலைகிறதே பாடல் – என் குரலில்

    பலர் கேட்டுக்கொண்டும் மீண்டு வரமுடியாமல்…. இதோ மீண்டும் யுவன் பாடல்… என் குரலில்…

    பாடல்: கனவே கலைகிறதே.
    படம்: அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது….

    கனவே கலைகிறதே
    காற்றென வலிகள் நுழைகிறதே
    தேவதை
    சிறகில் இறகாய் உயிரும் உதிர்க்கிறதே ஏய்
    காதல் இது தானா
    உலகெல்லாம்
    வலிகள் பொது தானா
    மனசுக்குள்
    அணில் பிள்ளை போல
    அழுவதும் அது தானா
    வார்த்தைகளை
    மௌனம் கொன்று தின்றதில்
    தனிமையிலே
    தினம் கத்தி கத்தி
    உந்தன் பெயர் சொல்லி அழுதேனே
    காற்று வந்து காதல் சொன்னதா

    இதுதானா காதல் இதுதானா
    வேர் அறுந்து வீசும் புயல் தானா
    உதுதானா காதல் இதுதானா
    அணு அணுவாய் சாகும் வழி தானா
    (கனவே..)

    அழைப்பது காணல் நீரா
    அறியாது பறவை கூட்டம்
    தொடுவானம் போலே காதல்
    அழகான மாய தோற்றம்
    உனக்கான வார்த்தை தனி
    ஆயுள் சிறையில் வாழ்கிறதே
    நமக்கென விண்மீன்
    நீ அறியும் முன்பே உதிர்கிறதே
    தரையில் மோதி மழைத்துளி சாகும்
    விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
    வலிக்கின்ற போதும் சிரிக்கின்ற நானும்
    உனக்காக நாளும் தேய்கிறேன்

    சரிதானா காதல் பிழைதானா
    ஆயுள் வரை தொடரும் வலிதானா
    இதுதானா காதல் இதுதானா
    ஐம்புலனில் ஐயோ தீயானாள்

    மழை நீர் சுடுகிறதே
    மனசுக்குள்
    அணில் பிள்ளை அழுகிறதே
    தேவதை சிறகில் இறகாய்
    உயிரும் உதிர்கிறதே

    ஒரு நாளில் வாழ்க்கை – புதுப்பேட்டை பட பாடல் என் குரலில்

    நான் உடைந்து போகும் நேரம் எல்லாம் அடிக்கடி கேட்க்கும் பாடல் இது. செல்வராகவன் வரிகளில், யுவனின் இசையிலும் குரலிலும் மனதை உருக்கும் இந்த பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரிட். இதோ என் குரலில் ஒரு முயற்சி.

    ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
    மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
    எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
    அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
    ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
    ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
    ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
    ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
    ஓஓஓஓஓஓ …

    போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
    காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
    இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
    நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
    தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
    கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
    எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
    ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
    ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
    ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
    ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
    ஓஓஓஓஓஓ …

    அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
    அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
    உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
    நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
    பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
    உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
    நடப்பவை
    நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
    ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
    ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
    ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
    ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
    ஓஓஓஓஓஓ …

←Older