அராரிராரோ – ராம் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

அராரிராரோ…. நான் இங்கே பாட.. தாயே நீ கண்ணுறங்கு… என்னோட மடி சாய்ந்து….
யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவிஞர் சிநேகனின் வரிகளில் ஜேசுதாஸ் அவர்கள் ராம் திரைப்படத்திற்காக பாடியது. இந்த பாடலை பிடிக்காதவர்கள் நிச்சயமாக யாரும் இருக்க முடியாது… எனக்கும் தான்.. நான் அடிக்கடி முனுமுனுக்கும் இந்த பாடலை பதிவு செய்தால் என்ன என்று தோன்றியது.

ஜேசுதாஸ் அவர்களின் குரலை நீக்கிவிட்டு என்னுடைய குரலை நுழைத்து பார்க்கலாமா?. இது கண்டிப்பாக விஷப்பரிச்சை என்று தெரியும். ஜேசுதாஸ் அவர்களின் குரலில் அந்த பாட்டை கேட்டுவிட்டு வேறு ஒரு நல்ல பாடகரில் குரலில் கூட அந்த பாட்டை கேட்க நம்மால் முடியாது.. அவர் குரல் தான் அந்த பாட்டின் உயிர். அப்படி இருக்கையில்  நான் பாடினால்? பரவாயில்லை… ஆசைப்பட்டுவிட்டோம்.. பாடி தான் தொலைத்துவிடலாமே…
இதோ..  அந்த வீடியோ பாடல் என் குரலில்..
404 Not Found

Not Found

The requested URL /WordPressShortCodeHandler.aspx was not found on this server.

உங்கள் பொறுமையை பாராட்டும் வகையில் அதன் பாடல் வரிகள் போனசாக…

ஆராரிராரோ….நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.
ஆராரிராரோ… நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.

வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே.
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ… நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே…
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்..
நீ சொல்லி தந்தாயே…
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே…
உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..
நானே…. தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா.
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா.
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ……
சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத
பூமியும் நீ………
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற……..

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து…..

Share

2 Responses to அராரிராரோ – ராம் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

  1. krishnaraj says:

    this is not your voice. This is of K.Y Yesudoss. easily understandable

  2. அட கடவுளே… ஜேசுதாஸ் அவர்களை குரலை நீக்கிவிட்டு நான் தான் இதில் பாடி இருக்கிறேன். என்னுடைய குரல் ஜேசுதாஸ் குரல் போல இருக்கிறது என்று கூறி விட்டேர்களே! இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)