கண்ணீர் இருப்பில்லை – சுனாமி கவிதை

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு என் மனம் பாதிக்கப்பட்டபோது எழுதிய வரிகள்…

tsunami-pain-peom

கண்ணீர் இருப்பில்லை

அலைகடலே
உன் கரையில் விளையாடியது குற்றமென
பிஞ்சுகளின்
உயிரோடு விளையாடிவிட்டாய்.

உன் மடியில்
வலை வீசியது குற்றமென
மீனவர்களின்
உயிரை விலை பேசிவிட்டாய் .

குழந்தைகளை பிரித்து
பெற்றோர்களை அனாதயாக்கினாய்
பெற்றோரை பிரித்து
குழந்தைகளை அனாதயாக்கினாய்.

இன்னும்
யாரை பிரிக்க
அலை அலையாய்
அலைந்துகொண்டு இருக்கிறாய்?

இங்கு இறப்பதற்கு
இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம்
இறந்த பின் சிந்துவதற்கு
கண்ணீர் தான் இருப்பில்லை…

- பிரவீன் குமார் செ

Share

நீங்கள் மேலும் விரும்பி படிக்க:

  1. மௌனக்கதறல்கள்
  2. தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்
  3. காதல் யுத்தம்
  4. சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு
  5. கி.பி 2020 – கவிதை

Comments (1)

YokeshMay 24th, 2009 at 2:17 am

அருமை..

Leave a comment

Your comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)