சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

உயிரெழுத்து நீயானாய்.
மெய்யெழுத்து நானானேன்.
இருவரும் சேர்ந்தோம்,
உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
அதனால் தானோ,
ஆய்(யு)த எழுத்தாய்
உன் அப்பா!

——————————————————————————————-

வாழ்வு முழுவதும் சுகம் தர,
தாசி வாங்கும் பணம் போலே,
வரதட்சணை.

——————————————————————————————-

இடியை பார்த்து
நடுங்காத இந்த நெஞ்சம்
உன் இடையை பார்த்ததும்…..

——————————————————————————————-

மனம் ஒரு குரங்குதான்.
உன்னை மறக்க நினைக்கும் என் மனம்
உன் நினைவுகளையும் நினைக்க
மறப்பதில்லையே.

——————————————————————————————-

என்னுயிர்
உன்னுயிரோடு
உறவாடி
உயிர்தருகிறது
ஓர் உயிர்க்கு.

——————————————————————————————-

நீ என்னிடம்
கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
கனவு கூட கனவாகியே போனது

——————————————————————————————-

நான் தினமும்
ரத்ததானம் செய்கிறேன்
கொசுக்கடி .

——————————————————————————————-

சிதைந்த சூரியன்
உடைந்த வெண்ணிலா
உதிர்ந்த விண்மீன்
நனைந்த மேகம்
இவை அனைத்தும்
வானில் சாத்தியமென்றால்
என் வாழ்வில்
அவளும் சாத்தியம்

——————————————————————————————-

ஆசிரியப்பா தெரியாது
வெண்பா தெரியாது
எதுகை மோனை தெரியாது
மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
இருந்தும் காதலித்துப்பார்
உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.

——————————————————————————————-

உன் கூந்தலில் குடியேற
வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
தற்கொலை செய்தன
தரையில் குதித்து

——————————————————————————————-

உடலை
உயிர் பிரிந்ததும்
எரிப்பது வழக்கம்

நீ
என்னை பிரிந்தும்
நான் இன்னும் பிணமாய்,,,,

——————————————————————————————-

உள்ளத்திற்கும்
உணர்வுகளுக்கும்
ஏற்பட்ட உறவினால்
கற்பமில்லாமல் பிரசவிக்கிறது
என் கவிதை

——————————————————————————————-

Share

7 Responses to சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

 1. Kumar says:

  சிறுகவிதைகள் அருமைங்க.
  வாழ்த்துக்கள்.

 2. palani says:

  மச்சான் சூப்பர் டா சிறுகவிதை தொகுப்பு நான்கு நீ இன்னும் வளர்ந்து வர வாழ்த்துகள்

 3. palani says:

  மச்சான் சூப்பர் டா

 4. நன்றி பழனி மற்றும் குமார் .

 5. Selvakumar M says:

  பிரவீன், நீங்கள் காதல் வலையில் விழுந்துலீர்கள் என்று நான் நினைக்கிறேன். கவிதை அருவி போல் கொட்டுகிறது. ஒவ்வொரு கவிதையும் ரசிக்கும் படியாக உள்ளது.

 6. செல்வகுமார் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி… ஆனால் நீங்களாக இப்படி எல்லாம் கிளப்பி விடக்கூடாது… ஹி… ஹீ

 7. Selvaraju says:

  Its so cute. Keep it up Praveen…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)