உன்னை பார்த்த நாள் முதல்

  • உன்னை பார்த்த நாள் முதல்,
    தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
    கவிதை எழுதுகிறேன்!
  • உன்னை ரசித்த நாள் முதல்,
    உன் உருவம் மனங்கண்டு
    தனியே பேசுகிறேன்!
  • உன்னில் மயங்கிய நாள் முதல்,
    விளங்காத ஓர் உணர்வுக்கு
    விளக்கம் தேடுகிறேன்!
  • உன்னை காதலித்த நாள் முதல்,
    ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
    சுமை தெரியாமல்!

- பிரவீன் குமார் செ

  • Share/Bookmark

Related posts:

  1. காதல் யுத்தம்
  2. பெண்ணும் ஐம்பூதமும்
  3. சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று
  4. சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு

Comments (1)

YokeshApril 13th, 2010 at 12:23 am

அடடா..இத்தன நாள் இத படிக்காம விட்டுட்டேனே..அருமையா இருக்கு பிரதர்.

Leave a comment

Your comment