பெண் சிசுக்கொலை

பசித்தழுகிறது பச்சிளங்குழந்தை.
அறுந்து விழாத தொப்புள் கொடியை
பார்க்கும் கண்கள் சொல்லிவிடும்
புதியதாய் பிறந்த குழந்தையென்று.

அழுகுரல் கேட்டுணர்ந்து வந்த தாய்
குழந்தையை மடியினில் வைத்து
ஊட்டினாள் புட்டிப்பாலை.

பசியடங்கி படுத்துறங்கிய குழந்தையைக்கண்டு
கண்ணீரோடு கீழே ஊற்றினாள்
மீதமிருந்த கள்ளிப்பாலை.

உடையில்லா உடலைக்கண்டு
உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
கொல்லப்பட்டது பெண்பாலை!

Comments (13)

maduraisaravananAugust 3rd, 2010 at 11:18 pm

//உடையில்லா உடலைக்கண்டு
உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
கொல்லப்பட்டது பெண்பாலை!//

அருமை.வா஝்த்துக்கள்

Deepa SathishAugust 4th, 2010 at 1:02 am

நல்ல முயற்சி…மேலும் தொடர வாழ்த்துக்கள் .

kousalyaAugust 4th, 2010 at 8:52 am

அற்புதமான கலங்கடிக்கும் வரிகள்…..மனம் கனக்கிறது…..இன்றுதான் உங்கள் தளம் பார்கிறேன், அருமை…..தொடர்ந்து அதிகமாக எழுதலாமே….

kousalyaAugust 4th, 2010 at 9:00 am

ur profile is…. very….. interesting…..t o o good…. keep it up…….best wishes……

பிரவீன்August 4th, 2010 at 9:05 am

@கௌசல்யா. தங்கள் வருகைக்கு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. 🙂 கண்டிப்பாக முடிந்தவரை நிறைய எழுதுகிறேன். உங்களை போன்றவர்களின் தூண்டுதலே என்னை மேலும் எழுத வைக்கிறது.

hemalathaAugust 5th, 2010 at 6:18 pm

hai ,
praveen , i’m your one of the fan. keep it up.

பிரவீன்August 5th, 2010 at 6:26 pm

@ஹேம லதா… மகிழ்ச்சி… மிக்க நன்றி..

sentamilFebruary 27th, 2011 at 11:20 am

kalanga vaitha வரிகள்..
சிந்திக்க தூண்டிய karuthu..
மேலும் கவிதைகள் படைக்க en idhayamarndha vazhthkal..

lavanyaridharDecember 15th, 2012 at 3:25 pm

arpudhamana varigal…. nenjai kavarnthu vittathu…

Selvakumar MDecember 21st, 2012 at 7:00 pm

அருமை!!!

sreeFebruary 14th, 2014 at 5:33 pm

superp..! nallarku..!

sharmi uthraJuly 9th, 2015 at 6:56 pm

மனதை கரைக்கும் அழுகுரல் ………………….கேட்கிறது இப்பாடலால்!!!!!!!!!!!

ayishaOctober 24th, 2016 at 11:24 am

Ungal idhayam unardha valihal

Leave a comment

Your comment