நிலாப்பெண் – கவிதை

the-girl-and-the-moon-girl-moon_big

நிலவும் அழகுதான்
அண்ணாந்து பார்த்து
ரசிக்குமளவிற்கு.

பார்த்தால் பக்கம்தான்
நிஜமோ,
தொடக்கைகள் நீண்டும்
தொட்டுவிடா தொலைவிற்கு.

தனிமையான இரவுப்பொழுதில்,
நிலவே
துணையாகிறது.

கண்கள் காணக்கிடைத்தும்,
சொந்தமில்லை என்பதே
நிஜமாகிறது.

உன்னை நிலவென்று ஒருமுறை
கவிதை எழுதினேனே,
இப்போது புரிகிறது
நீ நிலவுதான்!

Comments (4)

rathnavel natarajanApril 10th, 2011 at 5:43 am

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

thirumalaiselvanApril 18th, 2011 at 5:34 pm

ஹ்ம்ம் சுபெர்ர்………….tamil varaa maatanguthu…super kavithai….

பிரவீன்April 18th, 2011 at 6:07 pm

நன்றி திருமலை

பிரவீன்April 18th, 2011 at 11:40 pm

நன்றி ரத்தினவேல்

Leave a comment

Your comment