அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..

நேரம் இரவு எட்டு மணி. அலுவலகத்தில் இருந்து அப்போது தான் வீட்டிற்குள் நுழைகிறார் மனோகர்.  தன்னுடைய மகளின் படுக்கை அறையை கடக்கும் போது மிகவும் ஆச்சர்யம் உள்வாங்கியது அந்த தந்தைக்கு.. மகள் படுக்கை அறையில்  இல்லை. எப்போதுமில்லாமல் படுக்கை நன்றாக விரிக்கப்பட்டு  இருக்கிறது. அனைத்தும் தூய்மையாகவும், களைக்கபடாமல் இருப்பது தான் அவரின் ஆச்சர்யத்திற்கு காரணம்.

உள்ளே சென்று பார்க்கையில், தலையனை அடியில் ஏதோ காகிதம் போல் தென் பட்டது அவர் பார்வையில். மெல்ல கையில் எடுத்து பார்க்கிறார். கையில் சிறிது நடுக்கம் இருந்தது.. கடிதத்தை விரித்து படிக்க ஆரம்பம் செய்கிறார்.

அன்புள்ள அப்பாவிற்கு,

என்னை மன்னிக்கவும். நான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன். எனக்கு உங்கள் அனைவரையும் விட்டு பிரிய சற்று கடினமாக தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி எனக்கு தெரியவில்லை அப்பா. என்னால் உங்களுக்கும் அம்மாவிற்கும் பிரச்சனை வர வேண்டாம் என்பதால் நான் என் காதலன் சங்கருடன் வீட்டை விட்டு செல்கிறேன்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், சங்கரை நேரில் சந்தித்தால் உங்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். அவன் காதில் அணிந்திருக்கும் கடுக்கனும், அழுக்கு சட்டையும் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். நான் சங்கரின் பின்னாடி சென்றதற்கு இது மட்டும் காரணம் இல்லை அப்பா, நான் கர்பமாகவும் இருக்கிறேன். குழந்தை என்றால் சங்கருக்கு மிகவும் பிடிக்குமாம் அப்பா. அதனால் தான் நானும் அதற்கு சம்மதித்தேன்.

சங்கர் என்னை விட வயதில் சற்று அதிகம் ( 42 வயது என்பது இந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கிறேன்). அவனுக்கு சொந்தமாக தொழில் இல்லை, வேலை இல்லை, கையில் பணமும் இல்லை, இருந்தாலும் எங்கள் காதல் உண்மையானது என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சரிதானே அப்பா?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சங்கருக்கு ஏற்கனேவே நிறைய காதலிகள் இருக்கிறார்கள்.  ஆனால் சங்கருக்கு என்னை தான் மிகவும் பிடிக்குமாம். என்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி அளித்திருக்கிறான். எனக்கு அது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் அவனுக்கு நிறைய குழந்தை பெற்று தர வேண்டுமாம். என்னுடைய கனவும் அது தான் அப்பா.

சங்கருக்கு போதை பழக்கமும் இருக்கிறது. அது ஒன்றும் கெடுதல் இல்லை என்று அவன் எனக்கு  புரியவைத்ததால் நான் அதை கண்டு கொள்ளவில்லை. அவனுக்கு வாழ்கையில் பெரிய லட்சியம் இருக்கிறது அப்பா. கஞ்சா செடி பயிரிட்டு அதை நண்பர்கள் மூலம் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே அது. நான் அவன் லட்சியத்திற்கு துணையாக இருப்பேன் என்று  உறுதி அளித்து இருக்கிறேன். அது ஒரு மனைவியின் கடமை தானே?

அதே நேரத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக மருத்துவ துறையில் சீக்கிரம் ஏய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இருந்தாலும் நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் சங்கருக்கு ஏய்ட்ஸ் இருக்கிறது. அவன் சீக்கிரம் குணமாக வேண்டும்.

என்னை பற்றி நீங்கள் கவலை படாதீர்கள் அப்பா. எனக்கு 15 வயது ஆகிவிட்டது அல்லவா? அதனால் என்னையும் சங்கரையும் நன்றாக பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். நீங்கள் அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். ஒரு நாள் கண்டிப்பாக நான்  உங்களையும் அம்மாவையும் பார்க்க உங்கள் பேரகுழந்தையுடன் வருவேன். அம்மாவை கேட்டதாக கூறவும்.

இப்படிக்கு உங்கள் அன்பு மகள்,
மேனகா சங்கர்..

இதை படித்த மனோகருக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. என்ன  செய்வது என்று தெரியவில்லை. பதட்டம் மேலும் அதிகரித்தது.  கை மேலும் உதறல் எடுத்தது. கடிதத்தை திருப்பி பார்த்தார். அப்போது தான் அந்த கடிதம் இன்னும் நீள்வதை அவர் பார்க்க நேரிட்டார்.

பின் குறிப்பு:
அய்யோ அப்பா. மேலே நான் எழுதிய அனைத்தும் உண்மை இல்லை. நான் பக்கத்துக்கு வீட்டு பத்மநாபன் மாமா வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய மார்க் சீட் ரிப்போர்ட் கார்டை விட மிகவும் மோசமனவைகள் என்னுடைய வாழ்கையில் இருக்கிறது.  அதை உங்களுக்கு உணர்த்த நினைத்தேன் அவ்வளவே.  வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் பதட்டப்படாமல் மேஜை மேல் இருக்கும் என்னுடைய மார்க் சீட் ரிப்போர்ட் கார்டை எடுத்து கையெழுத்து போடவும். என்மேல் உங்களுக்கு கோபம் குறைந்தவுடன் என்னை பக்கத்துக்கு வீட்டிற்கு வந்து அழைத்து செல்லவும்.

உங்களை மிகவும் நேசிக்கும்,
உங்கள் அன்பு மகள்,
மேனகா மனோகர்.

Share

3 Responses to அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..

  1. நல்லா இருந்தது.சொந்த முயற்சியா?

  2. இல்லை… மன்னிக்கவும். நான் படித்தவைகளில் பகிர்ந்து கொள்ள விரும்பியது. அடியேனின் பங்கு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ததுவே.. அதை தெரியப்படுத்த மறந்து விட்டேன். இல்லை.. அந்த எண்ணம் தோன்றவில்லை என்றே சொல்லலாம்.. அடுத்த முறை எழுதும்போது என்னுடைய சொந்த முயற்சி அல்லாதவைகளை தெரிவித்து விடுகிறேன். அந்த எண்ணத்தை தோற்றுவித்ததற்கு நன்றி..

  3. sankar says:

    சூப்பர் நண்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)