மனிதமுயற்சி

நெய்வேலி புத்தக கண்காட்சி 2004 லில் பரிசு பெற்று “நெய்வேலி கவிஞர்கள்” எனும் கவிதை தொகுப்பில் பிரசுரமான என் கவிதை. நெய்வேலி நூலகத்தில் புத்தகம் வைக்கப்பட்டு எனக்கு முதன் முதலில் அங்கிகாரம் பெற்று தந்த கவிதையிது. கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறன். நான் எப்பொழுதும் புத்தக புழுவாக வுர்ந்து கொண்டிருந்த நெய்வேலி நூலகத்தில் என் கவிதை இருந்தது ஒரு பெருமைக்குரிய விசயமாக கருதுகிறேன்..

human-try

மனிதமுயற்சி

  • நிலவு சொந்தமில்லை
    இருந்தும் கையை நீட்டியவாறு
    சிறு குழந்தை…
  • கூந்தல் சொந்தமில்லை
    இருந்தும் மலர்ந்து கொண்டேயிருக்கும்
    காகிதப்பூ..
  • மழைத்துளி சொந்தமில்லை
    இருந்தும்  நம்பிக்கையுடன் வானம் பார்க்கும்
    பாலைவன கள்ளிச்செடி..
  • நாளை சொந்தமில்லை
    இருந்தும் முயற்சியுடன்
    மனிதன்….

- பிரவீன் குமார் செ

Share

நீங்கள் மேலும் விரும்பி படிக்க:

  1. உன்னை பார்த்த நாள் முதல்
  2. நிலாப்பெண் – கவிதை
  3. பெண்ணும் ஐம்பூதமும்
  4. தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்
  5. காதல் யுத்தம்

Leave a comment

Your comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)