பெண்ணும் ஐம்பூதமும்

fire-girl

  • நிலமும்
    நீயும்
    ஒன்றேயடி.
    என் ஜீவனை சுமப்பதால்!
  • நீரும்
    நீயும்
    ஒன்றேயடி.
    ஆழம் தெரியவில்லை!
  • காற்றும்
    நீயும்
    ஒன்றேயடி.
    உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!
  • வானும்
    நீயும்
    ஒன்றேயடி.
    முதலும் முடிவும் தெரிவதில்லை !
  • நெருப்பும்
    நீயும்
    ஒன்றேயடி.
    கண்களால் தொடமுடிந்தும் …..
    கைகளால் முடியவில்லை!!!

– பிரவீன் குமார் செ

Comments (4)

LogeshNovember 9th, 2009 at 10:41 am

கடைசி வரி.. பெண்ணே நீ ஒரு பூதம்!
ஹி.. ஹி.. எப்படி..
பிரவீன், நல்லா இருக்கு உங்க கவிதை…

SriramNovember 9th, 2009 at 9:32 pm

மிகவும அருமை பிரவீன ….

பிரவீன்November 22nd, 2009 at 1:02 pm

நன்றி லோகேஷ் மற்றும் ஸ்ரீராம்.. 🙂

mathiNovember 19th, 2010 at 4:39 pm

பெண்ணை மிகவும் அருமை . நன்றி !!!!!!

Leave a comment

Your comment