கி.பி 2020 – கவிதை

Future India

கதிரவன் பூமிக்கு கரம் தந்த நேரம்.
இயந்திர வாழ்க்கை தொடங்குகிறது என்று
அலாரம் அடிக்க தொடங்கியது.
எழுந்ததும் படிக்கும் நாளிதழ் பழக்கம்
இப்போது உருமாறி விட்டது என்பதினால்
செய்தி காண கணினித்திரை விரிந்தது!

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ந்து முடித்து
பூமி திரும்புகிறான்  இந்தியன் என்றும்,
வேலை தேடி இந்தியாவிற்கு
படையெடுக்கும் அமெரிக்கர் என்றும்
விரிந்து சென்றது இணையவலை.

லஞ்சம் இல்லா அரசியலால்
எதுவும் சாத்தியம் என்றேதான்
நெஞ்சம் சொல்லியது என்னோடு
அது உண்மையானது இன்றோடு.

இந்த சந்தோஷ அலையில்
மனம் பயணித்த வேளையில்
ஏதோ ஞாபகம் வந்தது போல்
இணையதளத்தை மாற்றினேன்.
இந்தியாவின் தலைசிறந்த பள்ளியொன்றின்
இணயதளம் தான் அது.

என் மகனை அதில் சேர்க்க
விண்ணப்ப படிவத்தை திறந்து பார்த்தேன்.
பெயர்
முகவரி
புகைப்படமென்று
நீண்டு சென்ற அதன் நடுவே,
ஜா….தி நின்றது வெறியோடு
அது இன்னும் அழியவில்லை மனிதச்சதையோடு!

இரும்பாக இந்தியா மாறினாலும்
துருவொன்று இருக்கத்தானே செய்யுமென்று
மனதை தேற்றிய நேரத்தில்
வெளியே யாரோ அழைப்பது கேட்டது.

கதவை திறந்து நான் பார்த்தேன்
ஒரு முறை தேற்றிய என்மனதை
மறுமுறை தேற்ற முடியவில்லை.
வெளியே
திருவோட்டோடு பிச்சைக்காரன்!

– பிரவீன் குமார் செ

பி.கு: இது 2003ம் வருடம் நான் எழுதியது.. அதற்குள்ளே இதோ 2011 வந்துவிட்டது. நல்லவேளை 2020 வருவதற்குள் இதை பதிவித்துவிட்டேன்.

Comments (12)

தமிழ் மீரான்June 26th, 2011 at 11:40 am

கவிதை அருமை!

rathnavel natarajanJune 26th, 2011 at 3:16 pm

நல்ல கவிதை.

பிரவீன்June 26th, 2011 at 11:06 pm

நன்றி தமிழ் மீரான் மற்றும் ரத்னவேல் 🙂

SamudraJune 27th, 2011 at 4:09 pm

நல்ல கவிதை.

Palani BalasundaramJune 30th, 2011 at 12:00 pm

Arumai. Migavum Rasithen 🙂

பிரவீன்June 30th, 2011 at 12:29 pm

நன்றி சமுத்ரா & பழனி 🙂

suresh (kpm)September 15th, 2011 at 1:57 pm

ரொம்ப நல்லா இருக்கு பா

arunJune 27th, 2012 at 12:27 pm

nala iruku pa

pradeepKumar.NAugust 18th, 2013 at 7:18 am

Tamila Tamilai maravathey

RamyaJanuary 2nd, 2015 at 12:02 am

Uingal kavithai inimai

பிரவீன்January 2nd, 2015 at 10:48 pm

நன்றி ரம்யா

RamyaJanuary 5th, 2015 at 9:11 pm

Valthukal Praveen entrum vetri pera

Leave a comment

Your comment