பல “வரி” கவிதை

 

tax

உழைத்து சம்பாதித்தால் “வருமான வரி”.
தங்கறதுக்கு “வீட்டு வரி”.
தாகம் தணிக்க “தண்ணி வரி”.
வெளிய போகணும்னா “சாலை வரி”.
சந்தோஷமா இருக்க “கேளிக்கை வரி”.
என்ன வாங்கினாலும் “விற்பனை வரி”.
எதை பண்ணினாலும் “சேவை வரி”.
சேர்த்துவச்சா “சொத்து வரி”.
தரமா வேணும்னா “சுங்க வரி”.
எதுவும் பத்தலைன்னு “மதிப்புகூட்டு வரி”.
இத்தனையும் மீறி நீ ஜாலியா இருந்தா,
மவனே கட்டுறா “சொகுசு வரி”.

இத்தோட இல்லாம,
அடுத்து வரும்பார் “சிறப்பு வரி”.
புள்ள பொறந்தா “பிறப்பு வரி”.
புட்டுகிட்டாலும் “எறிப்பு வரி”.
காசு வாங்கி ஒட்டு போட்ட நாட்டுல
யார் எக்கேடுகெட்டாலும் எல்லாம் சரி…

– பிரவீன் குமார் செ.

பிகு: 15% சேவை வரி உயர்வை கண்டு காண்டானதில் கிறுக்கியது.

Comments (4)

rathnavelnatarajanJuly 2nd, 2016 at 9:57 am

அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் சுவடுகள்

salemdevaJuly 2nd, 2016 at 10:43 am

“வெறி” வெறி-யா வருதுங்க…இவங்க போடற வரி-ய நினைச்சா… 🙂

பிரவீன்July 2nd, 2016 at 3:27 pm

கருத்திற்கும்… பகிர்வுக்கும் நன்றி ஐயா…

பிரவீன்July 2nd, 2016 at 3:27 pm

“தெறியா” ஒரு கமெண்டு… நன்றி தேவா 🙂

Leave a comment

Your comment