மறுதலிப்பு

இந்த வலைப்பூவில்  நான் எழுதிய  யாவும் என் சொந்த கருத்துக்களேயாகும். என்னுடைய தொழிலிற்கோ, வாடிக்கையாளருக்கோ, பணியில் அமர்தியவற்கோ, நண்பர்களுக்கோ அல்லது குடும்பதினாருக்கோ துளியும் தொடர்பில்லை. இவ்வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளில் உள்ள நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை, தற்சமய நிகழ்வுகளை  சுட்டும் தன்மை, தவறின்மை, பொருந்துதல் தன்மை போன்ற அனைத்தும் என்னால் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டாது.. அதில் காணப்படும் பிழைகளுக்கோ, தவறான செய்திகளுக்கோ அதை படிப்பதால் அல்லது பின்பற்றுவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கோ, இழப்பிற்கோ, விபத்திற்கோ, தொந்தரவுகளுக்கோ  நான் கண்டிப்பாக பொறுப்பேற்க இயலாது.

என் சொந்த கருத்துக்களையும், அன்றாட வாழ்க்கையில் நான் சந்திக்க நேரிடும் நிகழ்வுகளையும்,  விருப்பு வெறுப்புக்களையும், என் மனதில் ஏற்படும் எண்ண ஓட்டங்களையும் பதிவு செய்வதே இவ்வலைப்பூவில் நோக்கமாகும். மனிதனாக பிறந்த காரணத்தினால் நானும் சில நேரங்களில் தவறு செய்யலாம். அதனால் ஏற்படும் பிழைகளுக்கு  முழு பொறுப்பும் நானே. 🙂 வேறு யாரும் அல்ல…

என் கருத்துக்களுக்கு மறுகருத்தினை யார் வேண்டுமானாலும் பதியலாம். என் தவறுகளை சுட்டிக்காட்டலாம், சவால் விடலாம். அனைத்தையும் நான் வரவேற்கிறேன். ஆனால்,  அத்தகைய மறுகருத்துக்களை  எந்த காரணத்திற்காகவும் (நாகரீகமற்ற, படிக்க இயலாத, துஷ்ப்ரயோகம் செய்யப்பட்ட)  மாற்றம்  செய்யவும் அல்லது  முற்றிலும் அழித்துவிடவும் எனக்கு முழு உரிமையுண்டு… ஆதலால் தயவுகூர்ந்து நற்பண்புடன் நடந்து கொள்ளவும்..

கடைசியாக பதிக்கப்பட்ட  தேதி:  08/04/2009