தேர்வு – கவிதை

exam-tamil-poem

தேர்வு தொடங்கியது.
கேள்வித்தாள் ஒருகையில்,
பதில்தாள் மறுகையில்.

கேள்வித்தாளை அனாதையாக்கினேன்
பதில்தாளை மட்டும் தத்தெடுத்தேன்!

பக்கம் பக்கமாய் எழுத ஆரமித்தேன்.
ஒன்று
இரண்டு
முன்று
.
.
.
அடுக்கிக்கொண்டே போனேன்.

தேர்வு நேரம் முடிந்தது.
ஆசிரியர் ஆச்சர்யத்தோடு வாங்கினார்
கட்டப்படாத என் ஒற்றை பதில்தாளை.

பாவம்!
அவருக்கு தெரியாது
என் பாக்கட்டில் மீதமுள்ள
நான் எழுதிய கவிதை தாள்களை!

பாவம்!
யாருக்கும் தெரியாது,
கடைசி வரை அந்த கேள்வித்தாள்
என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!

Share

10 Responses to தேர்வு – கவிதை

 1. samudra says:

  அருமை சார்..

 2. நன்றி ரவிக்குமார் மற்றும் சமுத்திரா.

 3. Raja raja rajan says:

  தேர்வுகள்… அழகிய நினைவுகள்.

 4. kousalya says:

  //கடைசி வரை அந்த கேள்வித்தாள்
  என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை//

  தேர்வு எழுதவில்லை என்பதை இப்படி சொல்லி சமாளிக்கலாமோ ?!! :))

  வித்தியாசமான கவிதை ! ரசித்தேன் !!

 5. நன்றி ராஜராஜன்.
  //தேர்வு எழுதவில்லை என்பதை இப்படி சொல்லி சமாளிக்கலாமோ ?!! 🙂 )///
  ஹி ஹீ.. நன்றி கௌசல்யா 😛

 6. Selvakumar M says:

  என்னை கவர்ந்த கவிதை வரிகள் :

  ” பாவம்!
  யாருக்கும் தெரியாது,
  கடைசி வரை அந்த கேள்வித்தாள்
  என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!” – அருமை

 7. நன்றி செல்வா 🙂 உங்களுக்கும் அந்த அனுபவம் இருப்பதால் அந்த வரிகள் பிடித்திருக்கிறதோ என்னவோ? 😛

 8. seeni says:

  கண்ணா
  கலகுற da

 9. தலைவா உமர் says:

  சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)