என்னை பற்றி

தமிழ்நாட்டில் உள்ள சேலம் என்னும் மாநகரில் வாழும் ஒரு இளைஞன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யாராவது  கேட்டால், வார்த்தைகளை கோர்த்து சரியாக அதை விளக்கிட எனக்கே சற்று கடினமாக இருக்கும்.

சரியாக சொல்லப்போனால்,  நான் ஒரு ”இணைய பகுப்பாலன்’ (Web Analyst)’, “கூகிள் விளம்பர நிபுணன்’ (Google Advertising Professional)’,  ”தேடு பொறி பயிற்சியாளன்” (Search Practitioner), ”இணைய  சந்தைபடுத்தல் நிபுணன்’ (Internet Marketing Specialist)’…  போதும்.. போதும்.. உங்களை நான் மேலும் குழப்ப விரும்பவில்லை!!!. நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று என் பெற்றோருக்கு கூட சரியாக சொல்லதெரியாது..

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நான் ஒரு ”இணைய தொழில்முனைவன்”(Internet Entrepreneur).

photofunia-3dae4

இணையத்தின் பின்னாடி நான்:
நான்  2000 வருடம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே எனக்கு இணையத்தின் மீது ஒரு தீராத காதல்… போதுமான அளவு கையில் பணம் கிடைக்கும் போதெல்லாம் என் கால்கள் ஏதேனும் ஒரு இணையமையத்தை நோக்கியே செல்லும்.  என்னுடைய கைப்பணம் எல்லாமே இணையத்தை வலம்வருவதற்கே செலவு செய்து கொண்டு இருந்தேன் என் பள்ளிப்பருவத்தில். வியப்பாக இருக்கிறது !!! அதனால்  தானோ என்னவோ இன்று என்னுடைய தொழில்,  பொழுதுபோக்கு இரண்டும்  இணையத்தை சார்ந்தே அமைத்துவிட்டது. எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது, சுமார்  நான்கு வருடங்களுக்கு முன்பு, கல்லூரியை விட்டு வந்த சமயம்  நான்  முதன் முதலாக இணையத்தில் சம்பாதித்தது வெறும் இரண்டு அமெரிக்க டாலர்தான்.. அதுவே எனது முதல் வெளிநாட்டு பண சம்பாத்தியம்.

2005 வருடம் நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் என்னுடைய பட்டபடிப்பை முடித்தேன்.  எல்லோரையும்  போல் நானும் வாழ்கையை தேட ஆரம்பம் செய்யும்போது எனக்கு கைகொடுத்தது இந்த இணையம்தான். ஒரு தனியார் நிறுவனத்தில், யாஹூ வர்த்தக இணையதளத்தில் பணியாற்ற கிடைத்த வாய்ப்புதான் என் முதல் பயணம். தான் மிகவும் நேசிக்கும் விஷயமே தொழிலாக அமைவது எல்லோர்க்கும் அமையுமா என்ன? அந்தவிதத்தில் நான் கொடுத்து வைத்திருக்கிறேன்.

என் பின்னாடி இணையம்:
நண்பர்கள், பொழுது போக்கு, சினிமா, கவிதை…. இப்படியே இரண்டு வருடம்(2005-2007)  ஊருண்டோடியது. சுளீரென்று  அறைந்தது போல் என் வாழ்வில் திடீர் இழப்புகள். என்  வாழ்க்கை எனக்கு பல பாடங்களை கற்றுகொடுத்தது. என் எண்ணவோட்டங்களை திசை திருப்பவேண்டிய சூழ்நிலை..  என் வாழ்கையின் திருப்பம் இத்தருணத்தில் தான். ஆச்சர்யம்.. எனக்கென சில லட்சியங்கள் உருவாக்கினேன்.என் பார்வையை மிகவும் விஸ்தாரமாக்கினேன். ஒரு விபத்தின் காரணமாக  ”இணைய சந்தைபடுத்துதல்” ”இணைய பகுத்தல்” போன்றவற்றில் என் பார்வை படர்ந்தது.. பகுதி நேரமாக வீட்டில் இருந்தும் வேலை செய்தேன்.. நாளொன்றுக்கு சுமார் பதினைந்து மணிநேரம் வரை  இணையத்திலேயே செலுத்தினேன்.  அலுவலகம் – வீடு. வீடு – அலுவலகம். நேரம் சரியாக இருந்தது. இணையம் பெரிய கடல். அறிந்துக்கொள்ள அளவா இருக்கிறது?

நேரம் போதவில்லை…..  எனக்கு படிகற்களாய் தெரிந்த என்னுடைய   முழு நேர அலுவலக வேலை ஒரு கட்டத்தில் என்  முன்னேற்றத்திற்கு தடைகற்களாய் தெரிந்தது, என் பரந்த எண்ணவோட்டத்திற்கு முட்டுக்கட்டையாய் தெரிந்தது… ஜூன்   மாதம் 2008 வருடம் அந்த வேலையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.  அடுத்து என்ன செய்வது?

கையில் ஒரு ரூபாய் பணமில்லை, புதிய வேலை இல்லை,  ஆனால் மனதில் எண்ணற்ற நம்பிக்கை இருந்தது. புதிதாக தொழில் தொடங்கினேன். .. அதுவும் இணையத்தில்… வெறும் இரண்டு அமெரிக்க டாலரில் ஆரமித்த என் இணைய வருமானம் இப்போது  மாதம் நான்கு இலக்க அமெரிக்க டாலர்வரை சென்றிருக்கிறது..  இதோ கடந்த வாரம் கூகிளில் இருந்து வந்த என் முதல் காசோலை.. நான் இத்தனை காலம் நேசித்த இணையம் இப்போது என்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டது.   இணையத்தில் நிறைய பணம் தோண்டப்படாமல் இருக்கிறது என்று  சொல்வார்கள். என் பங்கிற்கு நானும் சேர்ந்து தோண்டுகிறேன்.. என்னுடைய 30 வது வயதில் அடுத்த பரிணாமத்தை எட்டுவதே எனது லட்சியம்.. (2008ஆம் வருடம் வரை….)

நானும் இணையமும்:
விரைவில்……. ( 2015 இல்….)

photofunia-94164

Share