“அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது… ” – “சத்தம் போடாதே” படத்தின் பாடலை ஒரு குழந்தை எவ்வளவு அழகாக பாடிக்கொண்டே ஆடுகிறது என்று பாருங்கள். அதனால் தான் இந்த இடுக்கையின் தலைப்பு “வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்”. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
பி.கு: இந்த வீடியோவை அடியேன் தான் எடுத்தேன் ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 🙂

பெரியோர்களே, தாய்மார்களே இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சுறானு ஒரு உலக தமிழ் சினிமா வந்திருக்கிறது. தெரியாம அந்த தியேட்டர் பக்கம் கூட போயிடாதீங்க. நாலு நாளைக்கு தூங்க மாட்டீங்க. நானும் விஜய் விசிறியாக தான் இருந்தேன். அது இஸ்கூல் காலேஜு படிக்கும் போது. இப்போ மட்டும் அந்த உலக நடிகனை நேரில் பார்த்தேன் அவ்ளோதான். ஒரு மனசாட்சியே இல்லாம ஒரு படத்தை எடுத்து இருக்காங்க. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு மிஸ்டர் விஜய். கடந்த ஐந்து வருடமா ஒரே படத்தை அதுவும் உங்க படத்தையே ரீமேக் பண்ணிட்டு இருக்கீங்களே. இது உங்களுக்கே நியாயமா?
ஒரு வருசமா ரூம் போட்டு யோசிச்சு எழுதின சுறா கதை என்னன்னா, விஜய் ஒரு மீனவ குப்பத்துக்கே தலைவர். அவரை கேட்காமே அந்த ஊர்ல குழந்தை கூட சூ சூ போகாது. அவ்ளோ பவர்புல் ஆள் அவரு. அதுக்கு கைமாறாக அங்க இருக்க ஆயிரம் குடும்பங்களுக்கும் வீடு கட்டி கொடுக்கறது தான் அவருடைய வாழ்க்கை லட்சியம். இதுல வில்லன் அந்த குப்பத்த அழித்து தீம் பார்க் கட்ட திட்டம் போடுறார். அதை தடுத்து, வில்லன் பணத்தையே லவுட்டி குப்பத்தில் வீடு கட்டுகிறார் விஜய். இடையில் ஐந்து சண்டை, ஐந்து பாட்டு… பாட்டுக்கு முன்னாடி தமன்னா வந்து அட்டண்டன்சு போட்டுடுவாங்க. அப்பேற்பட்ட சென்சிடிவ் கதையை தன்னுடைய ஐம்பதாவது படத்திற்கு தேர்ந்தெடுத்த விஜயின் வியூகம் புல்லரிக்கிறது. நான் இயக்குனரை குறை கூற மாட்டேன். விஜய்கிட்ட கால்ஷீட் வாங்கனும்னா எப்படிப்பட்ட கதை பண்ணனும்னு அவருக்கு தெரிஞ்சி இருக்கு. ஆக மொத்தம் ரெண்டு பெரும் சேர்ந்து பொது மக்களை மொக்க போட்டுட்டாங்க.
வடிவேலு அப்போ அப்போ தனி ட்ராக்ல வந்து காமெடி பண்ண ட்ரை பண்ணி எரிச்சல் பண்றார். ரெண்டு வாட்டி சிரிக்கலாம் அவ்ளோதான். தமன்னா பாவம் படத்துல வேலையே இல்ல. விஜய் படத்துல எந்த நடிகைக்கு வேலை இருக்கும். விஜய் பேசறதுக்கே இரண்டரை மணி நேரம் போதவில்லை அப்படி இருக்க தமன்னா என்ன பண்ணுவாங்க? தமன்னாவினுடைய தற்கொலை முயற்சி அறுவையோ அறுவை. விஜய் தம்பி படம் முழுக்க பஞ்ச் டயலாக்கு பேசியே கொல்றார். பேசற ஸ்டைல் இருக்கே சான்சே இல்ல. கொடுமை. அப்போ மழை மட்டும் பேயவில்லை என்றால் பாதி படத்துலேயே எந்திரிச்சு வந்து இருப்பேன்.
படத்துல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் வில்லன் தான். சூப்பரா நடிச்சிட்டு இருந்தார் விஜயை பார்க்கும் வரை. ஆனால் அவர்கிட்ட பஞ்ச் டயலாக்கு பேசி பேசியே அவரையும் ஒரு வழி பண்ணிட்டார் நம்ம விஜய். யாரை தான் பேச விடறார் படத்துல. ஒரு சாம்பில் “உன் வலைல மாட்ட நான் ஒன்னும் இறா இல்லடா. சுறா….”. இந்த படத்துக்கு செலவு பண்ணின தண்ட காசுக்கு மேற்கூறிய அந்த ரெண்டு ஆயிட்டதையும் ஒரு நல்ல ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுவிட்டு போயிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த படத்துக்கு போனிங்கன்னு கேட்பது எனக்கு புரியுது. இன்டர்நெட்ல ஒரு ப்ளாகுல விமர்சனம் படிச்சிட்டு ஏமாந்துட்டேன். இனிமேல் விஜய் படத்த பார்க்கப்போறதா இல்லை.அப்படியே பார்க்கறதா இருந்தால் விஜய் ரசிகர் அல்லாத பிளாக் தேடி கண்டு பிடித்து படித்து விட்டு முடிவு செய்வேன்.
எப்புடி நடிச்சாலும் தியேட்டருல கூட்டம் கூடுதுன்னு ஒரு காரணத்துக்காக விஜய் பண்ற அட்டகாசம் தாங்கல. அவரிடம் யாரும் உலக சினிமாவை யாரும் எதிர்பாக்கல ஜஸ்ட் ஒரு உருப்படியான சினிமா கொடுத்து ரசிகர்களை முட்டாளாக்காமல் இருக்க வேண்டாமா? கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள். சுறாவை டிஸ்கவரி சேனலில் பாருங்க தப்பே இல்லை. அட கடலுக்கு சென்று நேரில் கூட பாருங்கள் ஒன்னும் பண்ணாது. ஆனால் தியேட்டர்ல பார்த்துடாதீங்க அது பெரிய ரிஸ்க். விஜய் அவருடைய ஒரு ரசிகரை இழக்க வேண்டியது வரும்.

பையா திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் “என் காதல் சொல்ல நேரமில்லை”. மிகவும் அருமையான மெலோடி. எத்தனை முறை எழுதினாலும் நா.முத்துக்குமாருக்கு காதல் பற்றி எழுதுவதில் சலிக்கவில்லை போலும். இந்த பாடலின் மிகப்பெரிய பலம் அவருடைய எழுத்துக்கள் தான். தற்போது வந்த பாடல்களில் மிகவும் ரசிக்கப்படும் பாடல் இது. சில பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். அந்த வரிசையில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன் அதுவும் திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டபோது ஆனால் இந்த பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடலில் என்ன விசேஷம் என்றால் யார் வேண்டுமானாலும் அதை சுலபமாக பாடும் படி இசையமைத்து இருப்பார். மிகவும் பிடித்த பாடலை யாராலும் முணுமுணுக்காமல் இருக்க முடியாது. இதோ நானும் முயற்சி செய்து இருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்.
[xr_video id=”563a010c50404866a029e338630bdf7d” size=”md”]
இதோ போனசாக அதன் பாடல் வரிகளும்.
என் காதல் சொல்ல நேரமில்லை..
உன் காதல் சொல்ல தேவையில்லை..
நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
உண்மை மறைத்தாலும் மறையாதடி…
உன் கையில் சேர ஏக்கமில்லை…
உன் தோளில் சாய ஆசையில்லை…
நீ போன பின்பு சோகமில்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…
உன் அழகாலே அழகாலே
என் வெயில்காலம் அது மழைக்காலம்…
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்….
காற்றோடு கைவீசி நீ பேசினால்
என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலைவீசுதே..
காதல் வந்தாலே கண்ணோடுதான்
கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?
கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..
இந்த விளையாட்டை ரசித்தேனடி..
உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்க்கும்
ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..
இந்த நிமிடங்கள் நீளட்டுமே..
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்…
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…
சிறு பிள்ளையென என்தன் இமைகளது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே…
என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..
என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்…