ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

 

Praveen Kumar C In Jaya T.V

ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று அவர்களின் வரவேற்பறையில் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்க வேண்டும். சிறிது உரையாடலுக்கும், சிறிது காத்திருத்தலுக்குப் பின்பு நான் உள்ளே ஸ்டுடியோவிற்குள் அழைத்துச்செல்லப்படுகிறேன்.

சேலம்ஜில்லா.காம் என்ற இணைய தளத்தின் நிறுவனர் என்பதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட  ஆட்வோர்ட்ஸ் நிபுணர் என்பதாலும் அதை பற்றி “தகவல்டெக்” என்ற நிகழ்ச்சிக்காக கலந்துரையாட வந்ததுதான் இந்த அழைப்பு. எதை பற்றி பேச போகிறோம், என்ன கேள்வி கேட்கப்படும் என்று எதுவுமே என்னிடம் கூறப்படவில்லை. குளிரூட்டப்பட்ட நிசப்தமான அறை. எனக்கான இடத்தில் அமர்த்து மைக் மாட்டப்பட்டு குரல் சரிபார்க்கப்படுகிறது. பளிச்சென்ற வெளிச்சம். மூன்று காமிராக்கள் என்னையே நோட்டமிடுகிறது. இது முகப்புதிது எனக்கு.

உள்ளே நுழையும் வரை என் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது இது தான். முதன் முறை காமிரா முன்பு அமர்கிறோம், சரியாக வருகிறதா என்று இரு நிமிடம் மானிடர் பார்ப்பார்கள் என எண்ணினேன். ஒவ்வொரு கேள்விக்கும் இடையே என்னை நான் தாயார் செய்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும் என நினைத்தேன். பதிலளிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மீண்டும் அதை பதிவு செய்வார்கள் என கருதினேன். ஆனால் அவற்றிற்கு எதுவும் வாய்ப்பளிக்காமல் “ரெடி, ஸ்டார்ட்” என்று மட்டும் தான் வந்தது ஒரு குரல்.  காமிரா  ஓடத்துவங்குகிறது. நிசப்தம் உடைகிறது. நினைத்ததிற்கு முற்றிலும் நேர்மாறாக  ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது முழு நேர்காணலும்.

அதில் பிப்ரவரி 09 அன்று ஒளிபரப்பான சேலம்ஜில்லா.காம் பற்றி நான் பேசியதன் முதல் பகுதி தான் உங்கள் பார்வைக்கு இங்கே. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: என் முதல் தொலைக்காட்சி நேர்காணலிற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சியாளர் பழனி அவர்களுக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் என் நன்றிகள்.

Share

12 Responses to ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

 1. Ravi says:

  கூகுள் அட்வேர்ட்ஸ் நிபுணர் என்றால் என்ன? அவரின் பணிகள் என்ன?

 2. Samudra says:

  வாழ்த்துக்கள்

 3. @ரவி – கூகிள் ஆட்வோர்ட்ஸ் என்பது கூகிளின் தேடு பக்கத்தில் ஒரு இணையதளத்தை விளம்பரபடுத்த பயன்படும் ஒரு சேவை. அதை முறையாக செயல்படுத்த அனுபவம் பெற்றவரே கூகிள் ஆட்வோர்ட்ஸ் நிபுணர் எனப்படுபவர். மேலும் வாசிக்க http://en.wikipedia.org/wiki/Adwords

 4. @சமுத்ரா – நன்றி 🙂

 5. Selvakumar M says:

  உங்கள் உழைப்புக்கு கிடைத்த மரியாதை மற்றும் வெற்றி கொடி இது. உலகிற்கு நீங்கள் யார் என்ற ஒரு அறிமுகம் கிடைக்க ஜெயா டிவி உங்களை தேர்ந்தெடுத்தற்க்கு நன்றி. நீங்கள் சந்தோஷமாக ஒரு முறை வெற்றி கொடி இட்டு கொள்ளுங்கள் (பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் படி) …. எனக்கு, உங்களீடம் அறிமுகம் இருபதற்கு பெருமையாக உள்ளது. நன்பேண்டா….

 6. Selvakumar M says:

  நான் அனுபவிக்கும் மகிச்சிய விட, உங்கள் தாய், தந்தை மனதை சந்தோஷ படுத்திய இந்த நீகழ்ச்சி என்றும் மனதில் நிற்பவை. வாழ்த்துக்கள்

 7. மிக்க நன்றி செல்வா.. மகிழ்ச்சி!

 8. Sakthi says:

  நண்பேன்டா…… வாழ்த்துக்கள் பிரவீன்!

 9. நன்றி சக்தி(மனசுல)சிவா ! 🙂

 10. Ravi says:

  உங்கள் நேர்காண‌‌லின் இரண்டாவது பகுதி எப்போது வெளிவரும்?

 11. இன்று மாலை 5:30 மணிக்கு என்னுடைய நேர்காணலின் இரண்டாம் பகுதி ஜெயா பிளஸ் சானலில் ஒளிபரப்பாகிறது. இது கூகிள் ஆட்வோர்ட்ஸ் பற்றியது!

 12. ravi says:

  உங்களின் இன்றைய நேர்காணலை நான் தொலைக்காட்சியில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முடிந்தால் இன்றைய நேர்காணலை விரைவாக பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)