நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, வாரணம் ஆயிரம் திரைப்பட வீடியோ பாடல்…. மீண்டும் என் குரலில்… ஹரிஹரனை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு அற்புதமாக பாடிஇருக்க முடியாது.. “என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…” கவிஞர் தாமரையின் மனதை தொடும் பாடல் வரிகள்… எனக்கு மிகவும் பிடித்த சமீபத்திய திரைப்பட பாடல் இது. உங்களுக்கு? கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும்.
மேலே இருக்கும் “ஒ சாந்தி சாந்தி” என்ற வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் என் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை, வீடியோ இரண்டும் ஒரிஜினல்… குரல் மட்டும் தான் என்னுடையது… கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும்.
நெய்வேலி புத்தக கண்காட்சி 2004 லில் பரிசு பெற்று “நெய்வேலி கவிஞர்கள்” எனும் கவிதை தொகுப்பில் பிரசுரமான என் கவிதை. நெய்வேலி நூலகத்தில் புத்தகம் வைக்கப்பட்டு எனக்கு முதன் முதலில் அங்கிகாரம் பெற்று தந்த கவிதையிது. கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறன். நான் எப்பொழுதும் புத்தக புழுவாக வுர்ந்து கொண்டிருந்த நெய்வேலி நூலகத்தில் என் கவிதை இருந்தது ஒரு பெருமைக்குரிய விசயமாக கருதுகிறேன்..

மனிதமுயற்சி
- நிலவு சொந்தமில்லை
இருந்தும் கையை நீட்டியவாறு
சிறு குழந்தை…
- கூந்தல் சொந்தமில்லை
இருந்தும் மலர்ந்து கொண்டேயிருக்கும்
காகிதப்பூ..
- மழைத்துளி சொந்தமில்லை
இருந்தும் நம்பிக்கையுடன் வானம் பார்க்கும்
பாலைவன கள்ளிச்செடி..
- நாளை சொந்தமில்லை
இருந்தும் முயற்சியுடன்
மனிதன்….
- பிரவீன் குமார் செ
December 17th, 2008 in
கவிதைகள் | tags:
கவிதை,
மனிதமுயற்சி |
No Comments